புதிய
பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின்
தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20
லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி
தமிழகத்தில்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10
ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக
'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 20 ஆபத்து பள்ளிகள்
திண்டுக்கல்லில்
இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி
கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு,
மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி
மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை
அளிக்க உத்தரவிட்டது.
தனித்தேர்வர்களுக்குமதிப்பெண் சான்று
மதுரை
அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பத்தாம் வகுப்பு
தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை
பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத
தனித்தேர்வர்கள் டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என
தெரிவித்து உள்ளார்.
வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு
வெள்ள
பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர்
தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்தது.
'பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்'
'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு
வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து,
சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.
எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்
CLICK HERE TO DOWNLOAD TAMILNADU CHIEF MINISTER'S FULL SPEECH (AUDIO)0.8MB
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த
நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Flood Relief - Vilupuram District School
விழுப்புரம் மாவட்டம்,ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக கடந்த
திங்களன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதிகளில் உள்ள
பள்ளிமாணவர்களுக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டது..
கணினிக் கல்வி அரசு பள்ளிகளில் புறக்கணிக்கப்படுவது ஏன்?
தமிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாண வர்களுக்கு கற்பிக்க
வைப்பதன் ஒரு முயற்சியாக 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி
மற்றும் அரசு பள்ளிகளில் 6, 7,8 ,9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி
பாடத்திற் கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து
நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம்
செய்தது.
வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்;
கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை
வெளியிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே‘உஷார்’.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம்
வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம்
அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ.,
பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது - இயக்குநர்
பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகே பேல்பூரி உள்ளிட்ட சுகாதாரமற்ற கடைகளை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த கடைகள் இருந்தால், தலைமை ஆசிரியர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த கடைகளை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு
முதல்வரின்
பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு
ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை
அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு:
இரத்த வங்கி சேவை!
நண்பர்களே இது நமக்கு நாமே உதவிக்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறு இணைப்பு முயற்சி...இந்த இரத்த வங்கி உருவாக்கும் புதிய முயற்சிக்கு வாசக நண்பர்கள் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் உதவலாம்.
அரையாண்டு தேர்வு ரத்து? அரசு தீவிர ஆலோசனை
வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு
மாதத்துக்கு பின், இன்று செயல்பட துவங்கின. இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி
முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு
அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்குட்பட்ட தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர்களிடம் திடீர் அக்ரிமண்ட்
தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளர் இன்னும் 5 ஆண்டுகளுக்குள்
UGC நிர்ணயித்துள்ள கல்விதகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் .இல்லையெனில் 5
வருடத்திற்கு பிறகு தாங்களாகவே வெளியேற சம்மதிக்கிறோம் என தனியார்
கல்லூரயில் கையெழுத்து வாங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: சமூக நலத்துறை
வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம்
மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர்
தெரிவித்தனர். தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. வெள்ளத்தால்
மாணவர்களின் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் பறிபோயின.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டு
வருகின்றன.
148 கல்லூரிகளுக்கு தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து,
வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4
மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் அனைத்து பருவத்
தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள்
டிசம்பர் 28 முதல் தொடங்கி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மாணவர் மருத்துவ முகாம்4 மாவட்டங்களில் துவக்கம்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்,
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், நேற்று துவங்கியது; 20 நடமாடும்
மருத்துவ குழுக்கள், இந்த பணியில் ஈடுபட்டு உள்ளன.மழை, வெள்ளத்தால்
பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார்
மாவட்டங்களில், நேற்று, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தேர்வு பயம் வேண்டாம்! - பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா
நீண்ட விடுமுறைக்கு பின், சென்னை,
திருவள்ளூர், கடலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் நேற்று
திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை
செய்யப்பட்டு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. வெள்ளத்தில்
பாதித்தவர்களுக்கு, புதிய சான்றிதழ் வழங்கும் முகாமும் நேற்று துவங்கியது.