பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:–
10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு
வகுப்புகள் நடத்தப்படும். விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும்
வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து
கொள்ளலாம்.