Half Yearly Exam 2024
Latest Updates
அனைத்தும் இழந்த மக்களுக்காக களமிங்கியது SSTA ஆசிரியர் குழு...
(அறத்தினூஉங்கு ஆக்கம்இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு)
என்ற வள்ளூவர் வாக்குபடி (பொருள்;ஒருவருடைய வாழ்க்கையில் அறத்தைவிட
நன்மையானது ஏதும் இல்லை ,அறத்தை மறப்பது போன்ற கொடியது எதுவும் இல்லை).
12th Latest Study Materials - Accountancy & Commerce
- Accountancy | All Public Questions | R.Ramesh - English Medium
- Commerce | All Public Questions | R.Ramesh - English Medium
புதிய தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் நாளை வெளியீட
டிசம்பர் 12-ம் தேதி தொடங்கவிருந்த தொலைதூரக்கல்வி தேர்வுகள் 19-ம் தேதி தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால்பாதிக் கப்பட்ட 46 ஆயிரம் மாணவர் களுக்கு பாடப்புத்தகங்களும், 39 ஆயிரம் பேருக்கு நோட்டுகளும், 27 ஆயிரம் பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் மழையால் பாதிக்கப் பட்ட மாணவ, மாணவி களுக்கு உடனடியாக பாடப்புத்த கங்கள், நோட்டுகள். சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
Flash News - கனமழை : 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (09/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
- திருச்சி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- தஞ்சாவூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகாக, தனி குழு - இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு
பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை நாசமாகியுள்ளன. மேலும், மாணவர்களின் பிறப்பு மற்றும் மாற்று சான்றிதழ் கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புப் பணிகளுக்காக, தனி குழுக்களை அமைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
'அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சி திருத்தியமைப்பு: இயக்குநர் உத்தரவு
நடப்பு கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:-
பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படுமா? மாணவர்-பெற்றோர் எதிர்பார்ப்பு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை (டிச.10) முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், பள்ளி-கல்லூரிகள் வெள்ள நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றைத் தவிர்த்து மற்ற பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வதந்தியை நம்ப வேண்டாம்: வானிலை அறிவிப்பு வெளியிடாது 'நாசா'
'மழை பெய்வது மற்றும் வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை' என, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின், இ - மெயில் கேள்விக்கு அந்த நிறுவனம், பதிலளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டிருக்கின்றன. இதில், சில தகவல்கள், சென்னை மக்களை கடுமையாக மிரட்டின.
பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் மேஜை, நாற்காலி, சான்றிதழ் சேதம்
பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்புகளில், வெள்ளம் புகுந்ததால், 'பெஞ்ச், டெஸ்க்' போன்றவை சேதமாகியுள்ளன. மேலும், மாணவர்களின் பிறப்பு மற்றும் மாற்று சான்றிதழ் கட்டுகளும் நீரில் மூழ்கி, பாழாகியுள்ளன.
2 நாட்களுக்கு கன மழை
'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்; சென்னையில், கன மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொழில் நுட்ப தேர்வுகள் ஒத்திவைப்பு
கடந்த 3ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடப்பதாக இருந்த அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வுகள் 22ம் தேதி முதல் 31ம் தேதி நடக்கும். இவை ஞாயிறு மற்றும் அரசு பொது விடு முறை நாட்கள் தவிர்த்து மற்ற பணிநாட்களில் நடக்கும்.
இந்த தொழில் நுட்ப தேர்வுகளுக்கான அட்டவணை அரசுத் தேர்வுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Padasalai's Centum Coaching Team for 12th & 10th Standard - Back Again!
Useful Links:
- All Subject Question Papers Download - Click Here
- Centum Coaching Team Instructions - Click Here
- Centum Coaching Team Teacher's Registration Form - Click Here4. Centum Coaching Team Student's Registration Form - Click Here
Flash News :கனமழை காரணமாக 5 மாவட்டபள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.
*திருவாரூர்.,நாகை,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும்: ராமதாஸ்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக
அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு சிறப்புக் கடனுதவி : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
வெள்ளம் பாதித்த தமிழக பகுதிகளில் சிறப்புக் கடனுதவிகளை வழங்குவது உள்ளிட்ட
பல்வேறு ஏற்பாடுகளை நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.SBI Life மற்றும் SBI General Insurance
ஆகிய தனது காப்பீட்டுப் பிரிவுகளில் எடுக்கப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு
கேட்பவர்களுக்கு விரைந்து பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருநெல்வேலி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- புதுகோட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- புதுவை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்
சென்னையை
நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள
கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள்
சேதமடைந்தன.சென்னையில்
கூவம் கரையை ஒட்டியுள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் புகுந்த வெள்ளம்,
கல்வித்துறை அலுவலகங்களுக்குள் சென்று, பாடநுால் கழக கிடங்கின் தரை
தளத்திலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் நனைத்துள்ளது.தேர்வுத்துறை
அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த
தேர்வுத் தாள்கள் நாசமாகின. இதில், செப்டம்பரில் நடந்து முடிந்த, பிளஸ் 2,
10ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள்களும் சேதமடைந்துவிட்டன.
ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை
சென்னை
வெள்ளப்பெருக்கில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி,
கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி
பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.இதற்கிடையில், வெள்ள பகுதியில்
குப்பை மற்றும் கழிவு நீரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதால், பெற்றோர் தங்கள்
பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடவும், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும்
வேண்டியுள்ளது.