வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக
அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
வெள்ளம் பாதித்த தமிழகத்திற்கு சிறப்புக் கடனுதவி : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
வெள்ளம் பாதித்த தமிழக பகுதிகளில் சிறப்புக் கடனுதவிகளை வழங்குவது உள்ளிட்ட
பல்வேறு ஏற்பாடுகளை நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.SBI Life மற்றும் SBI General Insurance
ஆகிய தனது காப்பீட்டுப் பிரிவுகளில் எடுக்கப்பட்ட பாலிசிகளில் இழப்பீடு
கேட்பவர்களுக்கு விரைந்து பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருநெல்வேலி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- சிவகங்கை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- புதுகோட்டை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
- புதுவை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்
சென்னையை
நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள
கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள்
சேதமடைந்தன.சென்னையில்
கூவம் கரையை ஒட்டியுள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் புகுந்த வெள்ளம்,
கல்வித்துறை அலுவலகங்களுக்குள் சென்று, பாடநுால் கழக கிடங்கின் தரை
தளத்திலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் நனைத்துள்ளது.தேர்வுத்துறை
அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த
தேர்வுத் தாள்கள் நாசமாகின. இதில், செப்டம்பரில் நடந்து முடிந்த, பிளஸ் 2,
10ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள்களும் சேதமடைந்துவிட்டன.
ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை
சென்னை
வெள்ளப்பெருக்கில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி,
கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி
பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.இதற்கிடையில், வெள்ள பகுதியில்
குப்பை மற்றும் கழிவு நீரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதால், பெற்றோர் தங்கள்
பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடவும், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும்
வேண்டியுள்ளது.
சத்துணவு மைய சேதம்கணக்கெடுப்பு துவக்கம்
கனமழையால்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளி சத்துணவு
மையங்கள், அங்கன்வாடி மையங்களில், உணவு பொருட்களின் சேத மதிப்பை
கணக்கெடுக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது.
காப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு
மழையில்
காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து
வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- கன்னியாகுமரி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
- திருநெல்வேலி மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை
வெள்ள நிவாரணம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி?
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க குடும்பத்தினரின் அத்தியாவசியதேவையை பூர்த்தி செய்யத் திட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க, அவர்களது குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு அதற்கான களஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் இதர குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்
துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு
இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாற்று ஆவணங்கள் வழங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள்:
மாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு
எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க.
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
கனமழை நிவாரணப் பணி - நெகிழ வைத்த 'நெட்டிசன்'கள்!
'புரட்சியை
மட்டுமல்ல; மனிதத்தையும் விதைக்கலாம்' என நிரூபித்திருக்கின்றன, சமூக
வலைதளங்கள். பொதுவாக, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' ஆகியவை, வேறுவேறு
தளங்களில் இயங்குபவை. இந்த மூன்றையும் இணைத்திருக்கிறது, சென்னை மற்றும்
கடலுாரில் பெய்த பேய் மழை.
Flash News - கனமழை : 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்
- திண்டுக்கல் மாவட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
நீதி அரசர் என்று இவரை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி - நிவாரணப் பணியில் நீதிபதி
சென்னை
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து
கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார்.
சத்துணவு வழங்க முடியாது!
தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின.