Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு மைய சேதம்கணக்கெடுப்பு துவக்கம்

       கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில், உணவு பொருட்களின் சேத மதிப்பை கணக்கெடுக்கும் படி, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

காப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு

     மழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு

       அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
 

Revised Pension Table of Pre-2016 Pensioners based on 7th CPC Report

REVISED PENSION TABLE OF PRE 2016 PENSIONERS W.E.F. 01.01.2016 (expected date of implementation) 

       (BASED ON THE 7TH CPC REPORT CHAPTER 10.1 Pension and Related Benefits of Civilian Employees AND 5.1 Pay Structure (Civilian Employees) PAY MATRIX FOR CIVILIAN EMPLOYEES)

நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் BBC

        (7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. 

Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

  1. தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  2. திண்டுக்கல் மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  3. கன்னியாகுமரி மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
  4. திருநெல்வேலி  மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை

வெள்ள நிவாரணம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி?

       தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க குடும்பத்தினரின் அத்தியாவசியதேவையை பூர்த்தி செய்யத் திட்டம்

        விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க, அவர்களது குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு அதற்கான களஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்: முதல்வர் அறிவிப்பு

          தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், குடிசை வீடுளை இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் இதர குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகவும் 10 கிலோ அரிசி மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.2000 ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

       இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாற்று ஆவணங்கள் வழங்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள்:

மாற்று ஆவணங்கள் வழங்க ஏற்பாடு:
             வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

        தமிழ்நாட்டிலும் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -


கனமழை நிவாரணப் பணி - நெகிழ வைத்த 'நெட்டிசன்'கள்!

     'புரட்சியை மட்டுமல்ல; மனிதத்தையும் விதைக்கலாம்' என நிரூபித்திருக்கின்றன, சமூக வலைதளங்கள். பொதுவாக, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' ஆகியவை, வேறுவேறு தளங்களில் இயங்குபவை. இந்த மூன்றையும் இணைத்திருக்கிறது, சென்னை மற்றும் கடலுாரில் பெய்த பேய் மழை.

Flash News - கனமழை : 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.

  1. புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்
  2. திண்டுக்கல் மாவட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

நீதி அரசர் என்று இவரை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி - நிவாரணப் பணியில் நீதிபதி

       சென்னை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டார். 
 

சத்துணவு வழங்க முடியாது!

     தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின. 
 

Flood Rescue Things - Tiruvallur School Teachers


Flood Rescue Things - Darmapuri District School Teachers

Flood Rescue Things - Arakkonam Teachers Contribution to Chennai

Flood Rescue Things - Pernambut Teachers Contribution to Chennai

அப்பாடா... சனிக்கிழமை முதல் மழை இருக்காது.

        ஒரு ரவுண்டு கொலை வெறி மழை, இப்போது தான் முடிந்துள்ளது. அதற்குள், 'மறுபடியுமா...!' என, அசர வைக்கும் வகையில், 'சென்னையில் மேலும், 250 செ.மீ., மழை கொட்டப் போகுது!' என, 'வாட்ஸ் ஆப்' வதந்தி, பீதியை கிளப்பி வருகிறது. 'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப் போவதில்லை' என, 'அக்யூவெதர்' இணையதளத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் கிரிஸ்டினா பிடிநோவ்ஸ்கி, நிம்மதியளிக்கும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.

        நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

        ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் அரசு அலுவலர் ஒன்றியம் தீர்மானம்

         அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய விருதுநகர் மாவட்ட கிளையின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

        சென்னை அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

         இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

இவர், இப்படி:அரசு ஊழியர்கள் பிரச்னைகளை அறிந்தவர்

       சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகம் முணு முணுக்கப்பட்ட பெயர், அசோக் குமார் மாத்துார், 72; 

தொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி

      அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

         தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும். தகுதி என்பதில் உள்ள ‘த’ என்பது தன்னம்பிக்கையையும் ‘கு’ என்பது குறிக்கோளையும், ‘தி’ என்பது திறமையையும் குறிக்கின்றது.

தரமான கல்விக்கு சிறந்த இடம் மலேசியா

      உயர்கல்வி கற்பதற்கு ஆசிய நாடுகளில் சிறந்த நாடு மலேசியா. சுமார் 100க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து, குறைந்தது 40,000 மாணவர்கள் தங்களது உயர்கல்வியினை மலேசியாவில் பயின்று வருகின்றனர். மேலும், உலகத் தரத்துக்கு இணையாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைந்து வரும் மலேசிய பல்கலைக்கழகங்களில்,  மேலாண்மை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் சட்டக் கல்வி போன்ற பட்டப் படிப்புகள் சர்வதேச மாணவர்களின் முதன்மை தேர்வாகவே உள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

        வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்றும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குமரிகடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில்மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive