Half Yearly Exam 2024
Latest Updates
‘ஜெஸ்ட்’ தேர்வு அறிவிப்பு
மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி.,
பட்டப் படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’
என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒருமாதமாக மூடிக்கிடக்கும் பள்ளிகள்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளிக்கூடங்கள் ஒரு மாதமாக மூடியே கிடக்கின்றன.
தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும்
வானிலை
மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:வங்க கடலின் தென் மேற்கு
பகுதியில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, தற்போது, இலங்கை மற்றும்
குமரி முனையில் மையம் கொண்டு உள்ளது. இதனால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு
வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வகுப்பறை நடைமுறை மாறுமா? "கலகல' திட்டம்! கற்பித்தலில் மாற்றம் எதிர்பார்ப்பு
மாணவர்களிடம் கல்வியை திணிக்காமல், "கலகல'
வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்பிக்கும் எளிய முயற்சியை, திருப்பூர்
பள்ளிகளில் கல்வித்துறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ்:சென்னைப் பல்கலை அறிவிப்பு
வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால்,
அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை
அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன்
கூறியுள்ளதாவது:சான்றிதழ் தேவைப்படுவோர், சான்றிதழ் காணாமல் போனதற்கு
அடையாளமாக, போலீசில் புகார் அளித்து, ஒப்புதல் சான்று பெற வேண்டும்.
ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு ஒத்திவைப்பு
சென்னையில்
நாளை (திங்கட்கிழமை) நடப்பதாக இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரி (கிரேடு பி)
2–ம் கட்ட தேர்வு கனமழை காரணமாக 14–ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று
ரிசர்வ் வங்கி மேலாளர் வி.கே.நிரஞ்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரிக்கை
பிற மாநிலங்களை போன்று தமிழக அரசு
ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும்,” என
சிவகங்கையில் அரசு ஊழியர் (ஓய்வு) சங்க மாநில செயலாளர் எஸ்.சுந்தன்
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1995
வரையிலான டி.ஏ., நிலுவை தொகை வழங்க வேண்டும். 'ஓய்வூதியர்களுக்கான மருத்துவ
காப்பீடு திட்டம் மூலம் மருத்துவ செலவில் 75 சதவீதம் வழங்குவோம்' என்றனர்.
5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இனி ரெயிலில் முழுக் கட்டணம்
ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட்
கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட்
(பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம்
தற்போது மாற்றியமைத்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்
மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்துள்ள
கனமழையால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மின்வாரியம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு
வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச்
சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து,
சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:
Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (05/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு
மழை
பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில்
பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில்
தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்
வங்கக்
கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி
டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் காரைக்காலில் பலத்த,
மிகப் பலத்த மழை நீடிக்கும். அதேநேரத்தில், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை இல்லை என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி
+2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி-விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முதுகலைப் பொருளியல் ஆசிரியர் கி.பாஸ்கரன்
இனி ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறை-7வது ஊதியக் குழு பரிந்துரை
7வது ஊதியக் குழு பரிந்துரை
கனமழை - சென்னையில் நடமாடும் ATM: ஞாயிறன்று வங்கிகள் செயல்படும்!
கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும்
வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள்
செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில்
குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என
முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் மழை, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் குடும் அட்டை ஒன்றுக்குரூ. 4
ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும்.
நாளை (05/12/2015) குறுவள மைய பயிற்சி (PRIMARY CRC) தேதியில் மாற்றமில்லை
கனமழை காரணமாக அரசு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்களில் மட்டும் 5.12.2015-க்கு பதிலாக 19.12.2015-ல் Primary CRC மாற்றியமைக்கப் பட்டுள்ளது...
மற்ற மாவட்டங்களில் நாளை (5.12.2015) திட்டமிட்டபடி Primary CRC நடைபெறும்...
In AEEO-Office Block level-Teacher's Grievance day-வும்நடைபெறும்..
உதவும் உள்ளத்தை மாணவர்களிடம் விதைப்போமே!
அன்புள்ள ஆசிரியர்களே,
உதவும் உள்ளத்தை மாணவர்களிடம் விதைப்போமே! தங்கள் பள்ளி மாணவர்களிடம் மழையால் பாதித்த மக்களின் துயரத்தை எடுத்துக் கூறி அவர்களால் இயன்ற துணிகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து வந்து வழங்கக்கூறி அவற்றை சேகரித்து நேரிடையாக பாதித்த பொதுமக்களுக்கு வழங்கலாம். இயலாவிட்டால் நேரில் செல்லக்கூடிய ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கலாம். நாமும் உதவுவோம்! நமது மாணவர்களுக்கும் உதவ கற்றுத்தருவோம்!
Help Cudalore District via Teachers!
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அங்கேயே பணியாற்றும் நமது வாசக ஆசிரியர்களுடன் பாடசாலை கைகோர்க்கிறது. கடலூர், சிதம்பரம், காட்டுமண்ணார்கோவில், சேத்தியா தோப்பு போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ விரும்பினால் நமது பாடசாலை ஆசிரியர் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம். தங்கள் விருப்பத்தின் பேரில் தாங்கள் வழங்கிய தொகைக்கு ஈடான பொருட்கள் உரியவருக்கு வழங்கபடும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு தங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். நல் உள்ளம் கொண்ட ஆசிரியர்கள்! நம்பகத்தன்மை கொண்ட ஆசிரிய சமூகம்! எனவே உதவுங்களேன்!
Flash News - கனமழை : 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*அரியலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20
வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு
குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும்
விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு
வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.