ஒரு ரவுண்டு கொலை வெறி மழை, இப்போது தான் முடிந்துள்ளது. அதற்குள், 'மறுபடியுமா...!' என, அசர வைக்கும் வகையில், 'சென்னையில் மேலும், 250
செ.மீ., மழை கொட்டப் போகுது!' என, 'வாட்ஸ் ஆப்' வதந்தி, பீதியை கிளப்பி
வருகிறது. 'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கப் போவதில்லை' என, 'அக்யூவெதர்'
இணையதளத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் கிரிஸ்டினா பிடிநோவ்ஸ்கி,
நிம்மதியளிக்கும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.
நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின்
பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும்
என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் அரசு அலுவலர் ஒன்றியம் தீர்மானம்
அரசு
ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் என
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய விருதுநகர் மாவட்ட கிளையின் பொதுக்குழுவில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
சென்னை
அண்ணா பல்கலையில், டிச., 11ல் நடக்க இருந்த, 36வது பட்டமளிப்பு விழா,
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், மறுதேதி பின்னர்
அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்
தரமான கல்விக்கு சிறந்த இடம் மலேசியா
உயர்கல்வி கற்பதற்கு ஆசிய நாடுகளில் சிறந்த
நாடு மலேசியா. சுமார் 100க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து, குறைந்தது
40,000 மாணவர்கள் தங்களது உயர்கல்வியினை மலேசியாவில் பயின்று வருகின்றனர். மேலும்,
உலகத் தரத்துக்கு இணையாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைந்து வரும் மலேசிய
பல்கலைக்கழகங்களில், மேலாண்மை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் சட்டக் கல்வி
போன்ற பட்டப் படிப்புகள் சர்வதேச மாணவர்களின் முதன்மை தேர்வாகவே உள்ளது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்றும்
வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து
உள்ளது. குமரிகடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக
தமிழகத்தில்மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்றும், கடலோர
மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்தது.
‘ஜெஸ்ட்’ தேர்வு அறிவிப்பு
மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி.,
பட்டப் படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’
என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒருமாதமாக மூடிக்கிடக்கும் பள்ளிகள்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பள்ளிக்கூடங்கள் ஒரு மாதமாக மூடியே கிடக்கின்றன.
தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும்
வானிலை
மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது:வங்க கடலின் தென் மேற்கு
பகுதியில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, தற்போது, இலங்கை மற்றும்
குமரி முனையில் மையம் கொண்டு உள்ளது. இதனால், தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு
வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு
நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வகுப்பறை நடைமுறை மாறுமா? "கலகல' திட்டம்! கற்பித்தலில் மாற்றம் எதிர்பார்ப்பு
மாணவர்களிடம் கல்வியை திணிக்காமல், "கலகல'
வகுப்பறையாக மாற்றி, பாடம் கற்பிக்கும் எளிய முயற்சியை, திருப்பூர்
பள்ளிகளில் கல்வித்துறை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ்:சென்னைப் பல்கலை அறிவிப்பு
வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால்,
அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை
அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன்
கூறியுள்ளதாவது:சான்றிதழ் தேவைப்படுவோர், சான்றிதழ் காணாமல் போனதற்கு
அடையாளமாக, போலீசில் புகார் அளித்து, ஒப்புதல் சான்று பெற வேண்டும்.
ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு ஒத்திவைப்பு
சென்னையில்
நாளை (திங்கட்கிழமை) நடப்பதாக இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரி (கிரேடு பி)
2–ம் கட்ட தேர்வு கனமழை காரணமாக 14–ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று
ரிசர்வ் வங்கி மேலாளர் வி.கே.நிரஞ்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரிக்கை
பிற மாநிலங்களை போன்று தமிழக அரசு
ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 வழங்க வேண்டும்,” என
சிவகங்கையில் அரசு ஊழியர் (ஓய்வு) சங்க மாநில செயலாளர் எஸ்.சுந்தன்
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1995
வரையிலான டி.ஏ., நிலுவை தொகை வழங்க வேண்டும். 'ஓய்வூதியர்களுக்கான மருத்துவ
காப்பீடு திட்டம் மூலம் மருத்துவ செலவில் 75 சதவீதம் வழங்குவோம்' என்றனர்.
5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இனி ரெயிலில் முழுக் கட்டணம்
ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட்
கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட்
(பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம்
தற்போது மாற்றியமைத்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்
மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்துள்ள
கனமழையால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மின்வாரியம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
கட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு
வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச்
சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து,
சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:
Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (05/12/2015) விடுமுறை அறிவிப்பு.
- கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு
மழை
பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில்
பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில்
தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்
வங்கக்
கடல் பகுதியில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், காவிரி
டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் காரைக்காலில் பலத்த,
மிகப் பலத்த மழை நீடிக்கும். அதேநேரத்தில், சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் ஆகிய வட கோடி மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை இல்லை என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி
+2 பொருளியலில் 200/200 எடுப்பது ஈஸி-விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, முதுகலைப் பொருளியல் ஆசிரியர் கி.பாஸ்கரன்
இனி ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்பு விடுமுறை-7வது ஊதியக் குழு பரிந்துரை
7வது ஊதியக் குழு பரிந்துரை