Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி தேவை - பாடசாலை கோரிக்கை




            தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், சென்னை போன்ற பகுதிகளில் மழையின் பாதிப்புகள் மிக அதிக அளவில் உள்ளது. மேலும் சென்னையில் வழக்கத்தை விட 89 சதவீதம் அதிக மழை இதுவரை பெய்துள்ளது. மழையின் பாதிப்புகளினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பல அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். 


தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி?

        மிழகத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் ‘மழை பெய்தது’ என்று சொல்வதைவிட ‘மழை கொட்டியது’ என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித் தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை. மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை. மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன செய்யலாம்...

சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.

        வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தேதி வாரியாக மழை எப்படி.

         டிச., 3, 4, 5: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். டிச., 6: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும்.சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கன மழை பெய்யும்; காற்று வேகமாக வீசும்.

The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission

The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission-COMPARISON OF PAY DETERMINATION BEFORE AND AFTER 7TH PAY COMMISSION

The Pay hike recommended by 7th Pay Commssion has been discribed as Bonanza by Media

வெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்

     தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும் வகையில் மழை கொட்டி தீர்த்துள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வந்தார்

     சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
 

தனியார் பள்ளிக்கு சவால் விடலாம்!

           சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகள் உத்தரப் பிரதேசக் கல்வித் திட்டத்தில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இனி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்றது ஆகஸ்ட் மாதம் வெளியான தீர்ப்பு. 

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

       அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு முதல் மாத சம்பளம்: பீகார் துணை-முதல்வர் தேஜஸ்வி அறிவிப்பு



தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களின் நிவாரண நிதிக்காக வழங்குகிறார் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி இன்று அறிவித்துள்ளார்.


CTET Feb - 2016 Notification

சென்னை மழை: `பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்

    சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று (3-12-2015) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 7



  1. திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  5. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  6. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
  7. கடலூர்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  8. புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழக வெள்ள பாதிப்பு -முதல்வர் நிவாரண நிதி அனுப்பலாம்.

உதவும்  உள்ளம்  எனில் முதல்வர்  நிவாரண நிதி அனுப்பலாம்.

சென்னையில் எந்தெந்த சாலைகளில் வெள்ளம்? - நீங்களும் உதவலாம்!

சென்னையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளை அடையாளம் காணக்கூடிய வசதியைச் செய்துகொடுத்துள்ளார்கள். இதன் மூலம் கிடைக்கும் தகவல், பின்னாளில் நகரை சீரமைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்படி உதவுவது?

சென்னைக்கு உதவும் கூகுள்

வடகிழக்குப் பருவ மழையால் சூறையாடப்பட்ட சென்னைக்கு உதவ முன்வந்துள்ளது ‘கூகுள்’ நிறுவனம். 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கூகுள், தனது முகப்புப் பக்கத்தில் உதவிக்கான பட்டனை வைத்துள்ளது. அவசர உதவிக்கான எண்கள், பாதுகாப்பான இடங்கள், மருத்துவ உதவிக்கான எண்கள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.

மாற்று குறையாத தங்கங்கள்: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

             உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ல் இருந்து டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

           சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்

         வரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, 

சென்னையில் மழைவெள்ளம்: வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

            வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!



  • தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றாலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் என இந்திய வானியல் நிலைய இயக்குநர் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!
  • கர்நாடகா ரூ.5 கோடி நிதி உதவி
  • இலவச பி.எஸ்.என்.எல் சேவை ஒரு வாரத்திற்கு
  • பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைவரும் பிரார்திப்போம்!

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: பிரதமருக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம்



       மும்பை, டிச.2-நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு ஆங்கிலஉயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

         மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்படுகிறது.


பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

     வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை? - அரசு தலையிட முடியாது என அறிவிப்பு

        கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும் 

இன்று (2/12/2015) மழை காரணமாக விடுமுறை - மாவட்டங்கள் 9

  1. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  3. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 
  4. நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

2016 Tamilnadu Govt - Holidays List


பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு

வரும், 2016ம் ஆண்டுக்கு, 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அவற்றின் விபரம்:
* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொருந்தும்.

+2 Marksheet Download Direct Link

      அக்டோபர் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வு மறுமதிப்பீடு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய DIRECT DOWNLOAD LINK.....

இன்று மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசாணை 72

        G.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை

எல்-நினோ ஆபத்தா? 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்குகிறது மழை : மேலும் 4 நாட்களுக்கு கொட்டும்

      வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive