தமிழ்நாட்டில்
கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு
முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்,
கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும் வகையில் மழை கொட்டி
தீர்த்துள்ளது.
சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி
அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர்
நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகள்
உத்தரப் பிரதேசக் கல்வித் திட்டத்தில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இனி,
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் தான்
படிக்க வேண்டும் என்றது ஆகஸ்ட் மாதம் வெளியான தீர்ப்பு.
தன்னுடைய முதல் மாத சம்பளத்தை சென்னையில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டமக்களின் நிவாரண நிதிக்காக வழங்குகிறார் பீகார் மாநில துணை
முதல்-மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி இன்று
அறிவித்துள்ளார்.
சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள்
தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில்
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம்
சூழ்ந்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் மேப் மூலம் வெள்ளம் சூழ்ந்துள்ள
சாலைகளை அடையாளம் காணக்கூடிய வசதியைச் செய்துகொடுத்துள்ளார்கள். இதன் மூலம்
கிடைக்கும் தகவல், பின்னாளில் நகரை சீரமைப்பதற்கு மிகவும் உதவியாக
இருக்கும். எப்படி உதவுவது?
வடகிழக்குப் பருவ மழையால் சூறையாடப்பட்ட சென்னைக்கு உதவ முன்வந்துள்ளது
‘கூகுள்’ நிறுவனம். 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு
இருப்பதாகத் தெரிவித்திருக்கும் கூகுள், தனது முகப்புப் பக்கத்தில்
உதவிக்கான பட்டனை வைத்துள்ளது. அவசர உதவிக்கான எண்கள், பாதுகாப்பான
இடங்கள், மருத்துவ உதவிக்கான எண்கள் என அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.
உடலளவில்
பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தைரியமாக உள்ளனர்.
இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும்,
அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ல்
இருந்து டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக
அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள்
டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு
காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர
இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக
முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை
அறிவித்துள்ளது.இதன்படி,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான
பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றாலும் அடுத்த
48 மணிநேரத்திற்கு மிக, அதிக கனமழை பெய்யும் என இந்திய வானியல் நிலைய
இயக்குநர் - எம்.எஸ். ரத்தோர் அறிவிப்பு!
கர்நாடகா ரூ.5 கோடி நிதி உதவி
இலவச பி.எஸ்.என்.எல் சேவை ஒரு வாரத்திற்கு
பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைவரும் பிரார்திப்போம்!
மும்பை, டிச.2-நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை
சூட்டக்கோரி பிரதமருக்கு மும்பையில் உள்ள காந்தி நினைவு
ஆங்கிலஉயர்நிலைப்பள்ளியில் பயிலும் 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதி
உள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) டிசம்பர் 4 முதல் 28-ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி
பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட
பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சி.டி.இ.டி. தேர்வு
நடத்தப்படுகிறது.
வரும்
மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு
வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின்
விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில்,
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் பணிக்கு
வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்த மழைவெள்ளத்தில் எப்படி பணிக்கு
சென்றுவர முடியும் ? இதர அரசு மற்றும் தனியார்நிறுவனங்களுக்கும் விடுமுறை
அறிவிக்கவேண்டும்
G.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 -
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை
முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் -
அரசானை
வட கிழக்கு பருவக் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு
தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் கன மழை பெய்யும் என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில்
கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
மேற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யத்
தொடங்கியுள்ளது.
'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு
நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு
கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்'
எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில்,
மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில்
சேர முடியும்.
அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல்
ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர்
விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை
நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள்
நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது. ஸ்மார்ட்போன்
இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!
வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல்
பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக
செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.