மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர்
தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்'
எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில்,
மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில்
சேர முடியும்.
Half Yearly Exam 2024
Latest Updates
உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??
ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு எந்த இயங்குதளம் கொண்ட போனாக இருந்தாலும் அவை
நீங்கள் அப்பட்டமாக பின்தொடர்கின்றது என்பதே உண்மை. ஸ்மார்ட்போன்கள்
நீங்கள் இருக்கும் இடத்தை கச்சிதமாக ட்ராக் செய்கின்றது. ஸ்மார்ட்போன்
இல்லைனு வருத்தப்படாதீங்க ஜி, சந்தோஷமா இருங்க..!
Half Yearly Exam Postponed to January 2016
கனமழை காரணமாக அைரயாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த - முதல்வர் உத்தரவு !
Flash News-கனமழை : 6 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
- திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
'புளூ பிரின்ட்' எப்போது?
தமிழகத்தில்,
2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற
சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது
அயல்மொழிகளில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க
வேண்டும்.இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை
படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி
அடைந்தனர்.இதையடுத்து, தங்கள் தாய்மொழித் தேர்வையும், விருப்ப மொழிப்
பாடமாக எழுதலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?
பாடம்
நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்;
இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: டிச. 4 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம்
வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள்
இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்
வரும்
மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு
வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின்
விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தட்டச்சர்-சுருக்கெழுத்து
தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல்
12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
பெட்ரோல் லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் 23 காசுகளும் குறைந்தது; நள்ளிரவு முதல் அமல்
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் குறைந்தது.
இயற்கை பேரிடரை விலங்குகளால் முன்கூட்டியே உணர முடியுமா?
விலங்குகள்,
பறவைகளால் கன மழை, பெரும் வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கைப்
பேரிடர்களை முன்கூட்டியே உணர முடியுமா? அறிவியல் உலகில் 'முடியாது'
என்பவர்களும் இருக்கிறார்கள். 'முடியும்' என்பவர்களும் இருக்கிறார்கள்.
மழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
மீண்டும்
பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து மறுதேதி
அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் மறுபடியும் ஒத்திவைத்துள்ளது.
சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர் பணி: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
Flash News-கனமழை :பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (30-11-2015) விடுமுறை - மாவட்டங்கள் 14
- கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளுர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...
*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.*
2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள
கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data
centre) வெளியிடப்பட்டுள்ளது.
*இதில் உங்கள்
சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி
நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...
மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று
நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில்,
கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16
ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயமுறுத்தும் பருவ நிலை மாற்றங்கள்: கடும் வரட்சியும்,அதிதீவிர புயலும் தாக்க வாய்ப்பு
ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு
மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக
சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித
குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது
பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி
ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.
5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை.
வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம்,
உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!
'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த
தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை
நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
சென்னைப்
பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான
பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற
டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை
பெறலாம்.
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி
கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக்
கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின்
உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு
'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில்,
அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி
இயக்குனரகம் தெரிவித்துள்ளது.