Half Yearly Exam 2024
Latest Updates
RTI Letter Regarding Promotion
ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது (RTI-பதில்).
Click Here & Download RTI Letter (PDF Format)
10th Study Material - Social Science
New Study Material
- Social Science | Mini Study Material | Mr. B. Srinivasan - Tamil Medium
- Social Science | Mini Study Material | Mr. B. Srinivasan - English Medium
Part Time Teachers This Month Salary Regarding - SPD Proceeding
பகுதி நேர பயிற்றுநர்கள் நவம்பர் 2015 மாதத்தில் குறைவாக பணி செய்த நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2015 மாதத்தில் ஈடு செய்ய வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.
5/11/2016* காலக் கெடுவை நோக்கி கானல் நீர் ஆசிரியர்கள்...
2016 நவம்பர் மாதம் இதே நாள்...
இதே நேரம்... பணியில் உள்ள 3000 பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி..???
இதே நேரம்... பணியில் உள்ள 3000 பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி..???
நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி
நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட
மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி
ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய
இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்
அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா
என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல்
ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது.
இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை
பயிற்சிக்கும் தரப்படுகிறது.
மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின்
வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்
வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின்
உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள்,
தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க
உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில
ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு
தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும்,
20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில்
பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை
மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம்,
புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க
உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து
வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள்,
தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம்
துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள்,
மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான,
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில்
சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு
கட்டமாக எழுத வேண்டும்.முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின்,
'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வையும் எழுத வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்
தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை
நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்
சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அகில இந்திய
நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.
விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப
விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். விஐடி
பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல்
பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு
முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
5,000 சத்துணவு கூடம் மழையால் 'அவுட்'
கனமழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்துள்ளன.
பத்து நாட்களுக்கும் மேலாக, கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு கூடங்களில்
தண்ணீர் புகுந்தது. மேற்கூரையில் தேங்கிய தண்ணீரால், சுவர்களில் கசிவு
ஏற்பட்டது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள்சேதமடைந்தன.
நவம்பர் 30-ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேர்களின் முடிவுகள் நவம்பர் 30-ம்
தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 23 முதல்
நவம்பர் 20 வரை தேர்வுகள் பாலிடெக்னிக்கல்லூரிகளில் தேர்வுகள்
நடத்தப்பட்டது. இத்தேர்வுகளின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி
வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை அறிய
http://www.tndte.org.in/ மற்றும் http://intradote.tn.nic.in/ என்ற
இணையதளத்தில் அறியலாம்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'
கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து
பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை
குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல்
திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறில் உள்ள
தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள்
பங்கேற்றனர்.
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
தஞ்சாவூர்: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் வழங்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் குறைந்தபட்ச
ஊதியம் அறிவிக்க்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வீட்டு
வாடகைப்படி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள்
குற்றம் சாட்டினர்.
குரூப்- 3 பணி தேர்வு பட்டியல் வெளியீடு: டிச.14-ல் சான்றிதழ் சரிபார்ப்பு
கூட்டுறவு
சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், நிலைய தீயணைப்பு அலுவலர் (நேர்காணல் உடைய
பணிகள்), தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சித்துறை பண்டக காப்பாளர் (நேர்காணல் இல்லாத பணிகள்) ஆகிய
பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த
சார்நிலைப்பணிகளுக்கான எழுத் துத்தேர்வு (குரூப்-3 தேர்வு) கடந்த 4.8.2012
அன்று நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்ய வசதி
தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு
இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: