Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநகராட்சி பள்ளிகளில் 'டேப்லெட்' கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்த முயற்சி

        கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த, 'டேப்லெட்' கல்வி முறை, அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் சுயமாக கற்கும் திறன், புரிதல் கல்வி மேம்படும்.
 

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிர்ப்பு: வேலைநிறுத்தத்தில் ஈடுபட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு

        மத்திய அரசு ஊழியர்கள், 7-வது ஊதியக் குழு பரிந்துரையைக் கண்டித்து வரும் 24-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர். 

அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவலால் மாணவர்கள் குஷி

          வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்குபதிலாக புதிய தேதி அறிவிப்பு

        சென்னை, :அண்ணா பல்கலை யில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு

          பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
 

கல்விக் கடனுக்கு அசலுக்கு மேல் வட்டிபொறியியல் பட்டதாரிகள் அதிர்ச்சி

        சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண் பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்., ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல், மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின. கடன் பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வனவர் பணி தேர்வு 'கட் - ஆப்' வெளியாகுமா?

          தமிழக வனத் துறையில், 165 வனவர் மற்றும், 16 களப்பணியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

எஸ்.சி. - எஸ்.டி. மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதிச் சான்றிதழ்: புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம்!!

          தாழ்த்தப்பட்ட, பழங்குடியின (எஸ்.சி. - எஸ்.டி.) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 8-ஆம் வகுப்பு படிக்கும்போது, அவர்கள் சார்ந்த பள்ளிகளிலேயே ஜாதிச் சான்றிதழையும், இருப்பிடச் சான்றிதழையும் பெறுவதற்கான புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. 

செல்ஃபோன் டேட்டா கட்டணங்கள் குறையும்: ஃபிட்ச் தகவல்

          இந்தியாவில் செல்ஃபோன் data கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.இந்திய செல்ஃபோன் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடர்வதால், சென்னை உட்பட, 15 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.'கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், இன்னும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை

ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது. ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:

ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி

மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது. தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

மாணவர்கள் மகிழ்ச்சி, பெற்றோர்கள் கவலை சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 17வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 17வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 7ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பேய்மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களில் கடைசியாக கடந்த 6ம் தேதி தான் பள்ளி, கல்லூரிகள் இயங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாரவிடுமுறை உள்பட 16 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. 

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய தரவரிசைப் பட்டியல்: அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது

பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளுக்கு வெளியிடப்பட உள்ளதுபோல, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் (ரேங்க்) 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசு அமைக்க உள்ள தனி வாரியம் இந்தத் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும்.

Count Down Start! - கன மழை - நாளை விடுமுறை - மாவட்டம் 14

 Flash News: கன மழை - நாளை விடுமுறை  (23.11.2015)

  1. விருது நகர் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  3. காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  4. கிருஷ்ணகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  5. பெரம்பலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. திருவள்ளுர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  7. தூத்துக்குடி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  8. அரியலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
  9. திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  10. வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  11. விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  12. திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
  13. நாகை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
  14. கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. 
  15. புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

CRC Training Details

       DEC MONTH CRC - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 05/12/2015 அன்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12/12/2015 அன்றும் "REMEDIAL TEACHING FOR LATE BLOOMERS" என்ற தலைப்பில் குருவளமைய பயிற்சி - செயல்முறைகள் 

BRC Training For Maths Teachers

     உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு டிச 09, 10 11 ஆகிய நாட்களில் .. "படைப்பாற்றல் கல்வி முறையில் கணிதம் கற்பித்தல்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி நடைபெறும் - செயல்முறைகள் 

ஊதிய கமிஷனில் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை தான் மிக மோசமானது!!!

      7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.7-வது சம்பள கமிஷன்மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 

பி.எஃப். பென்ஷன்... யாருக்கு எவ்வளவு?

      பிராவிடெண்ட் ஃபண்ட் என்கிற பி.எஃப். என்பது ஓய்வுக்காலத்துக்கான முதலீடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் (ஃபேமிலி பென்ஷன்) வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பென்ஷன் தொகை எவ்வளவு? பென்ஷனுக்கான தகுதி என்ன? என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. 

தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை

      வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?

          31.12.2015 இல் D.A 119%01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%கூடுதல் (119% + 6%) = D.A 125%.கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)= 225% = 2.25# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)= 2.25 + ( 2.25 × 14.29% )= 2.25 + 0.32= 2.57இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

        வெள்ளத்தால் குடும்ப அட்டை, சான்றிதழ் பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளி மாணவ -மாணவியர்களின் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் வெள்ளத்தால் காணாமல் போனதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் புதிய புத்தகம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.


WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி?

     WhatsApp அப்ளிகேசனில் ப்ரோபைல் படத்தை (DP - Display Picture) செட் செய்யும்போது பல சமயங்களில் முழுபடமும் தெரியாது. குறுப்பிட்ட (Crop) ஒரு பகுதி மட்டுமே தெரியும். இன்று முழு படத்தையும் எப்படி பிரோபைல் படமாக செட் செய்வது என்று பார்ப்போம்.

ஏழாவது ஊதியக்குழு : தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி

        ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

காஸ் சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயம்காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்

         காஸ் சிலிண்டருக்கு ஆதார் எண் கட்டாயம்காஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்: ஆதார் எண் வழங்காதவர்களின் மானியத்தை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன

No Spot Fine!

        ஸ்பாட் பைன் கட்டச் சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது வாகனம் பறிமுதல் செய்யக் கூடாது கோர்ட்டில் பைன் கட்ட அனுமதிக்க வேண்டும் -போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

    செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

அண்ணா பல்கலையில் 280 பேராசிரியர் நியமனம்

      மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பிரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்; 102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
 

7–வது சம்பள கமிஷன்: லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக உயர்வு

     மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் 23 சதவீதம் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம்

       சென்னையில், தொலைபேசி மற்றும் செல்போன் கட்டணங்களை செலுத்த டிசம்பர் 2ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் கலாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

Child Care Holidays Also available for Men | 7th Pay Commission Report

      அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை

      அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.இப்போது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive