தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
வாக்காளர் பட்டியல் திருத்தம்:கள ஆய்வு நாளை துவக்கம்
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி
மாற்றக் கோரி வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
நாளை முதல் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.பட்டியலில் மாற்றம் கோரி விண்ணப்பம்
அளித்தவர்கள், தங்கள் பெயர், முகவரி விவரம் சரியாக இடம் பெற்றுள்ளதா என,
இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
38 நிகர்நிலை பல்கலைக்கு தடை நீங்கியதுஇரண்டு லட்சம் மாணவர்கள் நிம்மதி
புதுடில்லி:'தமிழகத்தில், 10 உட்பட, தேசிய அளவில், 38 நிகர்நிலை பல்கலை
கழகங்கள் தொடர்ந்து செயல்பட தடை ஏதும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில்,
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான, என்.ஏ.ஏ.சி., தெரிவித்துள்ளது.
இதனால், 'அங்கீகாரம் ரத்தாகுமோ' என, அஞ்சிய, இரண்டு லட்சம் மாணவர்களின்
எதிர்காலம், பிரகாசமாகியுள்ளது.
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு 'நோட்டீஸ்'
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு
மூலம் நியமனம் மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை
கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார
நிலைய நர்ஸ் கணேசராணி தாக்கல் செய்த மனு:
Flash News: 7வது ஊதியக் குழு அறிக்கையை நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்
.
7வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு அருண் ஜெட்லியிடம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் சமர்பித்தார்.
Highlights
900 பக்க அறிக்கைகொண்டது
23.5% ஊதிய உயர்வு பரிந்துரை.
24% பென்சன்தாரருக்கு பரிந்துரை
குறைந்த பட்டச ஊதியமாக ரூ 18,000 ஆக நிர்ணயம் செய்ய பரிந்துரை.
ஆண்டு ஊதிய உயர்வு 3%
புதுடெல்லி,மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள்
தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக்
கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே.
சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக
உதவியாளரிடம் அளித்த மனு:2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மெல்லக் கற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வினா-விடைகையேடு
விருதுநகர் மாவட்டத்தில் 10, பிளஸ்-2 படிக்கும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான சிறப்பு வினா-விடை கையேடு தயாரிக்கப்பட்டு இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதன்கிழமை
தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி
கூறியதாவது:
இணை இயக்குனர் கூட்ட தகவல்கள்- அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்!!!
இன்று18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட
தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015.
நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.
ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் தலை காரணமாக
அனைத்துவகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளை தொடங்கவேண்டும்: சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு
நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தேசப்பற்றை உருவாக்கும் வகையில், தினமும்
வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாடியே தொடங்கவேண்டும் என்று
மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.). பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டில்
உலகில் பல நாடுகளில் இருப்பதுபோல, தேசிய கீதம் பாடியே பள்ளிக்கூடங்களை
தொடங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக
PINDICS REGs:
ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:
படிவம் நிரப்புவதற்கு உதவியாக
1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)
ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:
படிவம் நிரப்புவதற்கு உதவியாக
1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)
வெள்ள நிவாரணத்துக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம் அளிப்பு - முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு - அனைத்து ஆசிரியர்களும் 8.30மணிக்கு முன்னதாக பள்ளிக்கு செல்ல வேண்டும் - இணை இயக்குனர் உத்தரவு
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை
தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
ஒத்திவைக்கப்பட்ட பி.இ. தேர்வுகளுக்கு மறு தேதி: அண்ணா பல்கலை. அறிவிப்பு
தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் நடத்தப்படுவது எப்போது? பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'
உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம்.