கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட கஞ்சம்பட்டி அருகே உள்ள பொன்னேகவுண்ட னூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் தலைமை ஆசிரியரே வகுப்பறையை திறப்பது வழக்கம்.
Half Yearly Exam 2024
Latest Updates
FLASH NEWS : தொடர் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 22.11.2015 வரை தொடர் விடுமுறை
கனமழை காரணமாகவும், மழை வெள்ள நீர் வடிவதற்காகவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22 (22-11-2015) ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அறிவிப்பு.
TRB மூலம் (2012-2014) கணித பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு .
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் அ.மே.நி.ப / அ.உ.பள்ளிகளில் கணித பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு
பள்ளி விடுமுறை தொடர்வது ஏன்?
மழை பாதிப்பு நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பு குறைந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், எப்போது பள்ளி திறக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் - இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும்
18-11-2015 வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும். அனைத்து AEEO /AAEEO's 10 முதல்15 பள்ளிகளை பார்வையிட்டு/ஆய்வு செய்து நாளை மாலை DEEO அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
படிக்க உதவுங்கள்: பள்ளிகள் எஸ்.எம்.எஸ்.,
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச., 23க்குள், இரண்டாம் பருவத் தேர்வுகளை முடிக்கவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. ஆனால், பருவமழையின் தீவிரம் காரணமாக, 10 நாட்களாக பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பாடங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு
தொடர் மழையால், சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
ஐ.ஐ.டி., நுழைவு தேர்வுதேதி அறிவிப்பு
'உயர்கல்வி நிறுவனங்களில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு டிச., 17ல் துவங்கும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 30 வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும் மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.
7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FLASH NEWS : தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (18/11/2015) விடுமுறை
- வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- திருவள்ளுர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
FLASH NEWS : தொடர் மழை காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (18/11/2015) விடுமுறை
- காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- சென்னை (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
- திருவள்ளுர் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (18.11.15) உள்ளுர் விடுமுறை.
*விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நாளை உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது_மாவட்ட ஆட்சியர்.
*28.11.2015 ஈடு செய்யும் நாள்..
DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:
பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து
தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்குவிடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்
பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைஆர்ப்பாட்டம் நடத்தினர்.திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார்.
'குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை
பருவ மழையால், மின்வெட்டு பிரச்னை மற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, குரூப் - 2ஏ தேர்வுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் பல துறைகளில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய பதவிகளில், காலியாக உள்ள, 1,947 இடங்களுக்கு பணி நியமன தேர்வு, ஜனவரி, 24ம் தேதி நடக்க உள்ளது.
சித்தா கலந்தாய்வு இன்று நடக்கிறது
சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான, இறுதி கட்ட கலந்தாய்வு இன்று நடக்கிறது; மழையால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரி, 22 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உள்ளிட்ட, ஆறு விதமான படிப்புகளுக்கு, 1,231 இடங்கள் உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 500 பள்ளிகள் சேதம்
கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்களை பறிகொடுத்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் பருவமழை கொட்டி தீர்த்தது.
பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு
கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்?
'தொடர் மழையால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 1.80 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர். மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
Flash News:தமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (17.11.2015)விடுமுறை
*சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராமநாதபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை