Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் - கூட்டுத்தொகையிலும் மாற்றம்

           இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின் மதிப்பெண், கூட்டுத்தொகையில் சேர்க்கப்படாது.தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ல் அமலுக்கு வந்தது. 2006-- 07 கல்வி ஆண்டில் ௧ம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. 

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

       'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

           வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன. கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.
 

முகநூலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக வக்கீல் கைது

முகநூலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக ஊட்டி வக்கீலை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 40). இவர் ஊட்டியில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 

இவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

      பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

Flash News : தொடர் மழை காரணமாக நாளை(14.11.15) 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

1.சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
3.காஞ்சிபுரம் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்.

       சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் புயலாக உருவெடுக்கலாம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார். 

TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

         கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள்.


மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.

        மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி அதிகாரிகள்மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.


SABL LOGOS AND DESCRIPTION FOR ALL SUBJECTS

SABL LOGOS DESCRIPTION FOR CLASSROOM DISPLAY AND TO FAMILIARIZE STUDENTS.

Flash News: 9 District Schools Holiday Today (13/11)

  1. குமரி (பள்ளிகள் மட்டும்)
  2. கிருஷ்ணகிரி (பள்ளிகள் மட்டும்)
  3. தூத்துக்குடி(பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  4. நெல்லை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  5. வேலூர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  6. திருவண்ணாமலை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  7. சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  8. திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
  9. காஞ்சிபுரம் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

Thanks God! Thanks a lot!

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு

      தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
          மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து,  

முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்

           உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழகத்தை தாக்குமாபுயல் சின்னம்?

          சென்னை:'அரபிக் கடலில், கேரளா அருகிலும்; வங்கக் கடலில், அந்த மான் கடல் பகுதியிலும், இரண்டு காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், அடுத்த இரு நாட்களில், தமிழகத்தில் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்க அமைச்சுப் பணியாளர்கள் எதிர்ப்பு

        அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் உடற்கல்வி ஆசிரியர்களை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர் குடும்ப முன்பணம் அதிகரிப்பு

         சென்னை:பணியின் போது இறக்கும், அரசு ஊழியர் குடும்பத்தின் உடனடி தேவைக்காக வழங்கப்படும் முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
 

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

            தேனி:பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, நவ., 16 க்குள் தயாரிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2016 மார்ச்சில் பொது தேர்வு நடத்த தேர்வு துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து ஆன்--லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வௌியிட்ட அறிவிப்பு:

         சென்னை;'வருவாய் துறையில் காலியாக உள்ள, 813 கிராம நிர்வாக அலுவலர் - வி.ஏ.ஓ., இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, பிப்., 14ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
 

TNPSC VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்.

குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...

பல்கலை, கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

       மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காதகல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.


மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்

       தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டணஉயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல்செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.
ஒழுங்கு முறை ஆணையம்:

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

      சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகள், கலெக்டர் கட்டுப்பாட்டு பகுதிகள் என, இரு விதமான எல்லைகள் உள்ளன.


TNPSC OFFICIAL GROUP-I Tentative Answer Keys

POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)
(Date of Examination:08.11.2015 FN)

 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)
(Date of Examination:08.11.2015 FN)
       1
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.

பங்களிப்பு ஓய்வூதியம் கிடைக்குமா? குளறுபடி தகவலால் புது குழப்பம்

       cps எனப்படும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பிடித்தம் செய்த தொகையை திருப்பித் தர, அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்ற தகவலால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணி, தமிழக அரசின் மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து, மாநில தகவல் தொகுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்

        தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டண உயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

அரசு தொழில்நுட்ப தேர்வுகள்: தேர்வறை அனுமதிச் சீட்டு வெளியீடு

        அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

           குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
 

வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு

        கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
 

பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

        தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 

மேலும் 2 நாள்களுக்கு பி.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு

       தொடர் மழை பெய்ததன் காரணமாக, மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
 

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

           தெற்கு அந்தமான் கடல் பகுதியில், புதிதாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராக ரகுராம் ராஜன் தேர்வு


உலகில் உள்ள மத்திய வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அனைத்து வங்கிகளுக்கும் வரைமுறை மற்றும் விதிகளை உருவாக்கி வருவது பிஐஎஸ் என அழைக்கப்படும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியாகும் (Bank for International Settlements - BIS).
இந்த வங்கியின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive