Half Yearly Exam 2024
Latest Updates
கூடுதல் பி.எஃப். ஆணையராக பி.யு.குல்கர்னி பொறுப்பேற்பு:
தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
அலுவலகத்தின் கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையராக பி.யு.குல்கர்னி
பொறுப்பேற்றுள்ளார்.
செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு; நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை
அனுமதிச் சீட்டு ஆகியவற்றை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதியை தெற்கு
ரயில்வே வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. சென்னை புறநகர் மின்சார
ரயில்களில் பயணம் செய்ய செல்லிடப்பேசியில் (ஸ்மார்ட் போன்) பயணச் சீட்டு
பெறும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு
வருகின்ற
16 .11.2015
திங்கள்
கிழமை
சென்னை
சேப்பாக்கம் விருந்தினர்
மாளிகை
முன்பு
உண்ணாவிரதம்
மேற்கொள்ளபடுகிறது
பகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை,,.....
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால்
ஆணையிடப்பட்டு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர
ஆசிரியர்களை அரசாணை 177ன்படி SSAமூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 வரையிலான வகுப்பு
மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று
மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி
பாடப்பிரிவுகளான கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை
உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் ரூ.5000
தொகுப்பூதியத்தில் நியமித்தது.
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தரவேண்டும்...
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தரவேண்டும்... அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை,எளிய, மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும்
மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம்
வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக
கொண்டுவர வேண்டும்.
டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் ஊதிய வழக்கு எண் SLP . C. 9109/2015. I. A. No. 6/2015 விசாரணை விபரம்:
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 வது ஊதியகுழு இடைநிலை ஆசிரியர் ஊதிய
பிரச்சினை மற்றும் இரு வேறுபட்ட ஊதிய முறையை ரத்து செய்து 1.1.2015 முதல்
டிப்ளோமா கல்வி தகுதி படி 1-6-88 முதல் பெற்று வந்த ஊதியம் ஆறாம் ஊதிய
குழுவில் மறுக்கப்பட்டுள்ளது .
ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET
முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதியபாடத்திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள்.
WhatsApp Messenger அவ்வப்போது பல புதுமைகளைசெய்து வருகிறது. இன்று உலக
முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு
இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம்பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு
மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க
முடியாது.
மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின்,
உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க,
தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்க அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான
தொடர் நீட்டிப்பு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அரசு ஆணை எண் 110, 120,
175, 193, 212 ஆகியவற்றின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்
ஊதியம் பெறுகின்றனர்.
ரயில் பயணத்தில் பிரச்னையா இலவச எண் '182' இருக்கு!கமிஷனர் தகவல்
'ரயில்களில் பயணிக்கும்போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைத்தால், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவுவார்கள்'' என அதன் கமிஷனர் சங்கர்குட்டி தெரிவித்தார்.தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு போன்ற வெடிபொருட்களை ரயில்களில் கொண்டு வரக்கூடாது என, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'
மத்திய
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன்
திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக
அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள்,
பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு
செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து
மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின்
பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை
பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில்
செலுத்தி வருகின்றன.
நமது இ-மெயில்களுக்கு பதிலளிக்கும் கூகுளின் ஸ்மார்ட் ரிப்ளை விரைவில் அறிமுகம்
நமது
இ-மெயில்களுக்கு எளிதில் பதிலளிக்கும் விதமாக ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்ற
புதிய அம்சத்தை இவ்வார இறுதியில் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய அம்சம் நமக்கு வரும் மெயில்களை ஆழமாக படித்தபின்னர் என்ன பதிலளிக்கலாம்? என மூன்று பதில்களை வெளிப்படுத்தும். இதில் ஒன்றை நமக்கு வந்த மெயிலுக்கான பதிலாக தேர்வு செய்துகொள்ளலாம். நமது நேரத்தை மிச்சம் செய்துகொள்ள இந்த புதிய சிறப்பம்சம் உதவும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய அம்சம் நமக்கு வரும் மெயில்களை ஆழமாக படித்தபின்னர் என்ன பதிலளிக்கலாம்? என மூன்று பதில்களை வெளிப்படுத்தும். இதில் ஒன்றை நமக்கு வந்த மெயிலுக்கான பதிலாக தேர்வு செய்துகொள்ளலாம். நமது நேரத்தை மிச்சம் செய்துகொள்ள இந்த புதிய சிறப்பம்சம் உதவும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மீனாட்சி அம்மன் கோயிலில் ஓசோன் படலம் பற்றி தகவல்
மதுரை
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பூகோள சக்கரத்தில், ஓசோன் படலம் பற்றிய
அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை
எடுக்க உத்தரவிடக்கோரி, டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு
தாக்கல் செய்யப்பட்டது. பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 'ஓசோன்
படலம் சேதமடைவது சர்வதேச பிரச்னை' என்றது. இம்மனு நேற்று முன்தினம்
மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை, நீதிபதி
சுதந்தர்குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடிந்து கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்படுகிறார்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த பதவிக்காக மூத்த நீதிபதியான டி.எஸ்.தாக்கூரை தற்போதைய தலைமை நீதிபதி தத்து பரிந்துரை செய்திருந்தார்.
லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு
'தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்
வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில்
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய
வேண்டும். இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு)
ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை
உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில்
நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய
தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு
செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது
நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள்
www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு
அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்)
நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75சதவீதம் அளவுக்கு
குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த
நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்!
பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டுஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடக்கம் : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
வடகிழக்கு பருவமழை காரணமாக சீதாஷ்ண நிலை திடீர் திடீரென மாறி வருகிறது.
இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், குழந்தைகள், நோயாளிகள்
கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலைகளில் தேங்கும் மழைநீர்
மற்றும் கழிவு நீர் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே,
மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து
மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.