Half Yearly Exam 2024
Latest Updates
6,500 பணிகளுக்கு இன்று தேர்வு
நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்
சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்
8ம் வகுப்பு படித்த 859 பேருக்கு வேலை
'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை
திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் ஜெயலலிதா உத்தரவு
91 அரசு விற்பனை அங்காடிகளில் இன்று முதல் ஒரு கிலோ துவரம் பருப்பு 110
செல்வமகள் சேமிப்பு திட்டம் வயது வரம்பு அதிகரிப்பு
பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி
12 கல்லூரிகளுக்கு 'நாக்' அங்கீகாரம்
காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்காக "விகல்ப்"திட்டம் அறிமுகம்
முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளின் வசதிக்காக, அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்ற ரயில்களில் அவர்களுக்கு இடமளிக்கும் "விகல்ப்" என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் கடைசி வரை உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயங்கும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டைமுன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.
இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே வழித்தடத்தில் இயங்கும்அடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்று ரயில் திட்டம் நாளை முதல் தில்லி - லக்னோ மற்றும் தில்லி - ஜம்மு வழித்தடத்தில் இயங்கும்ம் ரயில்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் டீசல் விலை 50 குறைக்கப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.