Half Yearly Exam 2024
Latest Updates
"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'-அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு)தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு,அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு
போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன.
இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டால், அதிக தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை கிடைக்கும்.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும். இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவிஉயர்வு செய்வதற்கான இணைய வழியில் கலந்தாய்வு அக்டோபர் 30-இல் நடைபெறுகிறது.இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிக அளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு
போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன.
இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டால், அதிக தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை கிடைக்கும்.
முதுகலை மாணவிக்கு கல்விச்சான்றிதழை திருப்பி கொடுக்கவேண்டும் அரசு மருத்துவ கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:
மருத்துவ மாணவியின் கல்வி சான்றிதழை திருப்பி கொடுக்கும்படி சென்னை மருத்துவ அரசு கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ கல்வி
சென்னை அரசு மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ படிப்பில் பொன்னியின் செல்வி என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு சேர்ந்தார். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை படிப்பில் அவருக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அவர் சேர்ந்தார்.
பின்னர், தன்னுடைய கல்வி சான்றிதழ்களை திருப்பித் தரும்படி, சென்னை அரசு மருத்துவ கல்லூரி ‘டீனிடம்’ விண்ணப்பம் செய்தார். ஆனால், நோயியல் பிரிவு முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும்போது, சில உத்தரவாதங்களை கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பெற்றிருந்தது.
உத்தரவாதம்
அதில், படிப்பில் இருந்து விலகினால், ரூ.5 லட்சம் அபராதம் தொகையை செலுத்திய பின்னரே கல்விச்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவாத பத்திரத்தில், பொன்னியின் செல்வி கையெழுத்திட்டிருந்தார்.
இதனால், உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.5 லட்சம் செலுத்தினால் மட்டுமே கல்விச்சான்றிதழ்களை திருப்பித்தர முடியும் என்று சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் கூறியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பொன்னியின் செல்வி வழக்கு தொடர்ந்தார்.
சான்றிதழ்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘மனுதாரர் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தாமல், அதைவிட சிறந்த படிப்பான மருத்துவ முதுகலை படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்றுள்ளார். எனவே, அவர் அபராத தொகையை செலுத்தவேண்டும் என்ற கேள்வியே எழுவில்லை. அவரது கல்விச் சான்றிதழ்களை சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உடனே வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Teachers:
Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs in Govt Schools.
Primary Level at District
02.11.2015 to 06.11.2015
(SABL, Maths Kit,CCE)
Upper primary Level at Dt
16 to 20.11.2015
(ALM, CCE)
ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றில், சில அரசு சாரா அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் போராட்டத்தை துாண்டி விடுகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், இனி, ஓய்வு பெற்ற இரு ஆண்டுகளுக்குள், அரசு சாரா அமைப்பிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ சேர்ந்தால், அதுகுறித்த தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும்போது, அவர்கள் சார்ந்த அமைப்பு அல்லது தனியார் நிறுவனங்கள், அரசின் வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன், தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தாங்கள் சேரும் அமைப்பு, எந்தவித வர்த்தக லாபம் தரும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்களை மறைத்து, அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், சம்பந்தப்பட்ட பென்ஷன்தாரர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தாங்கள் சேரும் நிறுவனங்கள் அல்லது அமைப்பின் முழு விவரம், அவற்றில் சேருவதற்கான காரணம், வருமான வரி நிரந்தர கணக்கு எண், அந்த அமைப்பின் பணிகள் ஆகியவை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
CPS திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்!
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.
அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்கு தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் விடுபட்ட விவரங்கள்-குறைகள் இருந்தால் சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகலாம். 2014-15-ஆம் ஆண்டுக்கான கணக்குத்தாள்கள் அடங்கிய விவரங்களை, அதாவது அவரவர் கணக்குத்தாள்களை http://218.248.44.123/auto_cps/public என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது.
FLASH NEWS : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்
மொஹரம் பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் என -தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்
- பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
- பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)