Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை மாணவிக்கு கல்விச்சான்றிதழை திருப்பி கொடுக்கவேண்டும் அரசு மருத்துவ கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு:

மருத்துவ மாணவியின் கல்வி சான்றிதழை திருப்பி கொடுக்கும்படி சென்னை மருத்துவ அரசு கல்லூரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கல்வி

சென்னை அரசு மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ படிப்பில் பொன்னியின் செல்வி என்பவர் கடந்த 2014–ம் ஆண்டு சேர்ந்தார். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், நோயியல் பிரிவில் முதுகலை படிப்பில் அவருக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அவர் சேர்ந்தார்.

பின்னர், தன்னுடைய கல்வி சான்றிதழ்களை திருப்பித் தரும்படி, சென்னை அரசு மருத்துவ கல்லூரி ‘டீனிடம்’ விண்ணப்பம் செய்தார். ஆனால், நோயியல் பிரிவு முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும்போது, சில உத்தரவாதங்களை கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பெற்றிருந்தது.

உத்தரவாதம்

அதில், படிப்பில் இருந்து விலகினால், ரூ.5 லட்சம் அபராதம் தொகையை செலுத்திய பின்னரே கல்விச்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவாத பத்திரத்தில், பொன்னியின் செல்வி கையெழுத்திட்டிருந்தார்.

இதனால், உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.5 லட்சம் செலுத்தினால் மட்டுமே கல்விச்சான்றிதழ்களை திருப்பித்தர முடியும் என்று சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் கூறியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பொன்னியின் செல்வி வழக்கு தொடர்ந்தார்.

சான்றிதழ்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘மனுதாரர் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தாமல், அதைவிட சிறந்த படிப்பான மருத்துவ முதுகலை படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்றுள்ளார். எனவே, அவர் அபராத தொகையை செலுத்தவேண்டும் என்ற கேள்வியே எழுவில்லை. அவரது கல்விச் சான்றிதழ்களை சென்னை அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உடனே வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Teachers:

Induction Training for 2012-13& 2014-15 year Newly appointed Primary and Upper primary Trs in Govt Schools.

Primary Level at District

02.11.2015 to 06.11.2015

(SABL, Maths Kit,CCE)

Upper primary Level at Dt

16 to 20.11.2015

(ALM, CCE)

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர், அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், இனி, குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: 

அரசின் உயர் பதவிகளில் பணியாற்றியவர்கள் பலர், ஓய்வு பெற்றதும், அரசு சாரா அமைப்பிலோ, தனியார் நிறுவனங்களிலோ சேருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவற்றில், சில அரசு சாரா அமைப்புகள் அல்லது தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும், நாட்டுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் போராட்டத்தை துாண்டி விடுகின்றன.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் பெறுவோர், இனி, ஓய்வு பெற்ற இரு ஆண்டுகளுக்குள், அரசு சாரா அமைப்பிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ சேர்ந்தால், அதுகுறித்த தகவல்களை அரசுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும்போது, அவர்கள் சார்ந்த அமைப்பு அல்லது தனியார் நிறுவனங்கள், அரசின் வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுடன், தொடர்புடைய எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தாங்கள் சேரும் அமைப்பு, எந்தவித வர்த்தக லாபம் தரும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்களை மறைத்து, அரசுக்கு தவறான தகவல்களை அளித்தால், சம்பந்தப்பட்ட பென்ஷன்தாரர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு ஊழியர்கள், தாங்கள் சேரும் நிறுவனங்கள் அல்லது அமைப்பின் முழு விவரம், அவற்றில் சேருவதற்கான காரணம், வருமான வரி நிரந்தர கணக்கு எண், அந்த அமைப்பின் பணிகள் ஆகியவை குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

CPS திட்டம்: இணையத்தில் கணக்கு விவரங்கள்: தமிழக அரசு தகவல்!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரலில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள் உள்பட 4.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படிக்கென மாதம் 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காகச் செலுத்தும்.

அரசு பங்குத் தொகைக்கும் பணியாளரின் பங்கு தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் விடுபட்ட விவரங்கள்-குறைகள் இருந்தால் சம்பள கணக்கு அலுவலர் அல்லது மாவட்ட கருவூல அலுவலரை அணுகலாம். 2014-15-ஆம் ஆண்டுக்கான கணக்குத்தாள்கள் அடங்கிய விவரங்களை, அதாவது அவரவர் கணக்குத்தாள்களை http://218.248.44.123/auto_cps/public என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கருவூல கணக்குத் துறை தெரிவித்துள்ளது.

FLASH NEWS : குரூப் 2A தேர்வு தேதி மாற்றம்

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.


மொஹரம் பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் என -தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு

       அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். 

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்


  • பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
  • பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

   பூமிக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், ராட்சத விண்கல் ஒன்று, மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பூமியை நெருங்கி வருகிறது. அவ்விண்கல் வரும் அக்., 31ம் தேதி(30-10-15) புவி சுற்றுவட்ட பாதையை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
 

சூரியனில் 'மெகா' துளை: 'நாசா' கண்டுபிடிப்பு.


                                         அக்டோபர், 10ல், சூரியனின் வளிமண்டலத்தில், மிகப் பெரிய துளை உருவானதை, அமெரிக்காவின் சூரிய கண்காணிப்பு ஆய்வகம் படம் பிடித்திருக்கிறது. பூமியின் சுற்றளவை விட, 50 மடங்கு பெரிதாக இருக்கும் இந்த துளை, தற்காலிகமானதுதான் என்கின்றனர், அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா'வின் விஞ்ஞானிகள்.

சிவில் சர்வீசஸ் தேர்வு விரைவில் மாற்றம் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

       ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறையில், அடுத்த  ஆண்டில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?... வழிபடும் முறை என்ன? - விளக்கம்

ஆயுதபூஜை

        காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.

வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி குறைப்பு: இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவிப்பு:

           நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 0.5சதவீதம் குறைத்தது. இந்த ஆண்டு இதுவரை 1.25 சதவீதம் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

TNPSC : உதவி வேளாண் அலுவலர் பணி நவ.2 நேர்காணல்:

       உதவி வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்டமாக ஆகஸ்ட் 19-ம் தேதியும் 2-வது கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெற்றன.

மின் வாரிய ஊழியர்களுக்கு 'போனஸ்' விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

            தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, தீபாவளி 'போனஸ்' வழங்குவது குறித்து, அதிகாரிகள் குழுவினர், கோடநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினர். 
 

5,500 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை

           போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, 7,243 நர்சுகளில், 5,500 பேர் பணியில் சேர்ந்துஉள்ளனர். அரசு மருத்துவமனைகளில், தேவைக்கேற்ப நர்சுகளை நியமிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 7,243 பேர் தொகுப்பூதிய பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 
 

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை

        சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

                தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு:


23.10.15 அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

        தஞ்சை மாவட்டத்திற்கு வரும் வெள்ளிக்கிழமை  23.10.15 சதயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை ஈடு செய்யும் நாள்  14.11.2015 -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்

        ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். 

இன்றைய அரசுப் பள்ளிகளில் - குறிப்பாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?

         ஓட்டுநர் என்றால் பேருந்தை ஓட்ட வேண்டும்; நடத்துனர் என்றால் பயணச்சீட்டு வழங்க வேண்டும். ஒரு வேளை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்ற பலரும் அவ்வேளை கிடைக்காமல் ஓட்டுநர் பணிக்கு வந்துவிட்டனர் என்று வைத்துக்கொள்வோம்
 

GENERAL ELECTION TNLA 2016

'மொகரம்' விடுமுறை திடீர் மாற்றம்

           மொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.

தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்

       பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.

விடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி

          பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.
 

மாணவர்களுக்குஓவிய போட்டி

         அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

பிழைகளுடன் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள்: பொது இ-சேவை மையங்களில் விரைவில் முகவரி திருத்தும் சேவை

         தமிழகத்தில் பல ஊர்களில் வழங்கப்பட்ட ஆதார் அட்டை களில் முகவரி தவறாக இருப்பதால் அதை இருப்பிட ஆவணமாக பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர். முகவரியில் உள்ள பிழைகளை திருத்துவதற் கான சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.


சுகாதாரம் குறித்து குறும்படம், வானொலி நிகழ்ச்சி போட்டி: அண்ணா பல்கலை. -யுனிசெப் ஏற்பாடு

        நன்றாக கைகழுவுவது, சுகாதாரம் பேணுவது குறித்து குறும்படம், வானொலி நிகழ்ச்சி தயாரிக்கும் போட்டியை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் யுனிசெப் அறிவித்துள்ளன.இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:


நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு

        தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


தமிழகத்தில் உள்ள ஜாதி பட்டியல் ,,,,அரசு கெஜட்டில் உள்ளபடி!

தமிழகத்தில் உள்ள ஜாதி பட்டியல் ,,,,அரசு கெஜட்டில் உள்ளபடி!
ஆதிதிராவிடர் பட்டியல்
1. ஆதி ஆந்திரர்
2. ஆதி திராவிடர்
3. ஆதி கர்நாடகர்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive