Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல்கலை துணைவேந்தருக்கு கட்டாய விடுமுறை அளிக்க பரிந்துரை

        ஓய்வு பெற இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், டில்லி பல்கலைக்கழக துணைவேந்தரை, கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடுமாறு, ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. 

ஊராட்சி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம்மறுப்பு

               அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊராட்சி நிர்வா கத்தில் இருந்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி.

       நாடு முழுவதும் 4600 கிளைகளுடன் 42 ஆயிரம் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப்இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள In charges for FLCCs பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம்

         ஏழை எளிய மாணவர்களுக்கு உத வும் ஸ்மைல் கிளப் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் வகையிலான இந்த ஸ்மைல் கிளப்பை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.


10th English New Study Material

"பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் பரிமாற்ற முறை மதிப்பீடு கூடாது'

       பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களைப் பரிமாற்ற முறையில் மதிப்பீடு செய்யக்கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊதியத்தைத் தீர்மானிக்கும் முடிவு எம்.பி.க்களிடமே இருக்க வேண்டும்'

        ஊதியம், இதர படிகளைத் தீர்மானிப்பதில் தங்களுக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசிடம் எம்.பி.க்கள் ஊதியத்துக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சிக் கொறடாக்களின் தேசிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு

       பள்ளி மாணவ, மாணவியருக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றுகளை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம்

      ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

        ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து, வெள்ளிக்கிழமை (அக். 9) மாலைக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
 

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

       ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பில் ஆட்சேப கருத்து: அட்மின் கைது

         மும்பை: வாட்ஸ்அப் குழு ஒன்றில் ஆட்சேபகரமான கருத்து மற்றும் வீடியோ பரிமாற்றத்துக்கு அனுமதித்ததாக, அந்த குழுவின் அட்மினை போலீசார்  கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சாகுர் பகுதியில் இருந்தவர்கள் இந்த கருத்து மற்றும் வீடியோவை பரிமாறி  உள்ளனர்
 

ஆசிரியர்கள் வராமல் பள்ளிகள் இயங்கின: 75 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை

          தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


50,000 Schools Not Working!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா!

       மார்ச்2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்

வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும்

தாங்கள் கற்பித்த பாடங்களில் 100 சதவீத தோ்ச்சி மற்றும் 100க்கு100, 200க்கு

ஆசிரியர்களின் ஒரு நாள் ஸ்டிரைக் வெற்றி... இது ஜாக்டோ: பாதிப்பில்லை என்கிறது அரசு

         சென்னை: வேலை நிறுத்தப்போராட்டம் வெற்றி பெற்றதாக ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப் பள்ளிகள் இயங்கியதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 

'கட்' அடிக்கும் மாணவரை பிடிக்க பாடவாரியாக வருகை பதிவேடு

          அரசு பள்ளிகளில், பாட இடைவேளையில், 'கட்' அடிக்கும் மாணவர்களைக் கண்காணிக்க, பாடவாரியாக வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பல பள்ளிகளில், மாணவர்கள் காலையில் வகுப்புக்கு வந்து விட்டு, இடைவேளை நேரத்திலோ, மதிய உணவு இடைவேளையிலோ வகுப்பை, 'கட்' அடித்து விட்டு சென்று விடுகின்றனர்.

மத்திய கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

      மத்திய அரசின் சிறந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அழைப்பு விடுத்தும் பேச்சில்லை: கருவூலத்துறை சங்கங்கள் ஏமாற்றம்

          அழைப்பு விடுத்த அரசு, பேச்சு நடத்தாததால், கருவூல கணக்குத்துறை சங்கங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.சென்னையில் உள்ள, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, 57, மாரடைப்பால் இறந்தார். 'இயக்குனர் முனியநாதன் அளித்த டார்ச்சரே இதற்கு காரணம்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிரியர் பாலியல் தொந்தரவு: பிளஸ் 2 மாணவி தற்கொலை

         காஞ்சிபுரம்: செய்யூரில், பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரால், பிளஸ் 2 மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகள் கவுசல்யா, 17. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் உள்ள, தன் பாட்டி வீட்டில் தங்கி, நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பயின்று வந்தார்.
 

மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

        தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் தமிழகம் முழுவதும் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு துவக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதத்தினர் பணிக்கு வந்ததாகவும், ஆசிரியர்கள் வராத பள்ளிகள், மாற்று ஆசிரியர்கள் மூலம் இயங்கியதாவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு செல்போன் ‘2-டிஸ்ப்ளே’ எல்.ஜி நிறுவனம் அறிமுகம்



         தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் ஒரே செல்போனில் இரு டிஸ்ப்ளே (திரை) உள்ள ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
       எல்.ஜி. ‘வி.10’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பிரதான டிஸ்ப்ளே 5.7 இன்ச் அளவு கொண்டது. 2-வது டிஸ்ப்ளே என்பது பிரதான டிஸ்ப்ளேக்கு மேல் பகுதியில் சிறிய அளவில் இருக்கும். இந்த டிஸ்ப்ளேயில் தேதி, நேரம், காலநிலை, பேட்டரி நிலை, எஸ்.எம்.எஸ்., மிஸ்டுகால் அலர்ட் ஆகியவை காண்பிக்கப்படும். பிரதான திரை ஆப் செய்யப்பட்டு இருக்கும் போது கூட இந்த சிறிய டிஸ்ப்ளேயில் அனைத்து தகவல்களும் தெரியும்.

UGC விதியை மீறி Online Course அறிவிப்பு!

            ஆன்லைன் படிப்புக்கு அனுமதியில்லை என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., எச்சரித்த நிலையில், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது. 

சிவில் சர்வீஸ் தேர்வில் சீர்திருத்தம்; பிப்ரவரியில் அறிக்கை

         சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சீர்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் பரிந்துரையை ஆறு மாதங்களில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

          கல்வித் தகுதி: * இளங்கலை பட்டப்படிப்பு எனில், பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடத்தை எடுத்து பாஸ் செய்திருக்க வேண்டும். * முதுகலை பட்டப்படிப்பு : பி.இ., /பி.டெக்., பாஸ் செய்திருக்க வேண்டும். "கேட்" தேர்வும் பாஸ் செய்திருக்க வேண்டும்.

Shubamela Matrimony

நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

           சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–


ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்; அலட்சியம் காட்டும் அரசு: கருணாநிதி கண்டனம்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  அரசு பள்ளிகளைச் சேர்ந்த  மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.


ஆசிரியர்கள் ஸ்டிரைக்: சத்துணவு அமைப்பாளர்களை வைத்து பள்ளிகளை நடத்துவதா? - இளங்கோவன் கண்டனம்

              தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–27 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ‘ஜேக்டோ” சார்பில் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை; ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

           அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.


80 கி.மீ.,க்கு மேல் செல்ல முடியாது இனி! : அரசு அதிரடி உத்தரவு

         வாகனங்களில் செல்வோர், இனி மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல முடியாத அளவிற்கு, அனைத்து வாகனங்களிலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
 

வாக்காளர் பட்டியல்: இணைய தளம் மூலம் பெயர் சேர்க்கலாம்

            சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 20.9.2015 மற்றும் 4.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள தவறியவர்கள், அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்காமல் இணைய தளம் (www.elections.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive