ஆசிரியர்களின்
15 அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு
செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நிதி
சார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நிதித்துறைச் செயலருக்கு
கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு கூடுதல் நிதி தேவை
என்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என நிதித்துறை தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்
நெட்
- நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள்
நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு
நகர்
மற்றும் ஊரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, டிசம்பர், 13ம் தேதி
தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில்,
ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, போட்டித்
தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 13ம் தேதி, காலையிலும் மதியமும்,
இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, நவ., 4ம் தேதி
வரை, 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்
சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நேற்று மாலை
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு
இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு
"ஜாக்டோ" அமைப்புடன் இன்று மாலை 4 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.
கருவூல இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு
கருவூலத்துறை இயக்குனரை மாற்றக்கோரி, தமிழகம் முழுவதும், கருவூல
கணக்குத்துறை அலுவலர்கள், 3,000 பேர், நேற்று, ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து
போராட்டம் நடத்தினர்.
ஆதார் அட்டை கட்டாயம் ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் “ஆதார்” என்ற பெயரில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசும், பல்வேறு மாநில
அரசுகளும் சமையல் கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்குதல், ஓய்வூதியம்,
திருமணங்களை பதிவு செய்தல், சேமநல நிதி போன்ற சில பொதுச்சேவைகளுக்கு ஆதார்
அட்டையை கட்டாயமாக்கின.
வி.ஐ.டி., மாணவர் கின்னஸ் சாதனை
கோட்டா: பை எனப்படும், 70,000 கணித மதிப்பு எண்களை, நினைவுபடுத்திக்
கூறிய, வேலுார், வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரின் பெயர், கின்னஸ் உலக
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?
பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு
வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா
இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என
குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.
ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும் - சோதனை முறையில் அமலுக்கு வந்தது
சமூக விரோதிகள் மற்றும் குறும்புத்தனமான மாணவர்களின் கேலி, கிண்டல்களில்
இருந்து தப்பிக்கும் வகையில், அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு, மேலங்கி திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பருவ வயதை எட்டும் மாணவர்கள், சமூக விரோத
செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும், 18
வயது பூர்த்தி அடையாத, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியைகளை கேலி, கிண்டல்
செய்யும் சம்பவங்களாலும், கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுகோள்
''வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க
வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சந்தீப் சக்சேனா
தெரிவித்தார். தமிழகத்தில், கடந்த மாதம், 15ம் தேதி, வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர்
சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஏராளமானோர் நேரடியாகவும்,
'ஆன் - லைன்' மூலமாகவும் விண்ணப்பித்திருந்தனர்.
10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
'அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், நேரடி
தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சியில் சேர, 30ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பாடங்களையும்
எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள் மற்றும், 2012க்கு முந்தைய
பாடத்திட்டத்தில், அறிவியல் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வு
எழுத, அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!
ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக
வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே
தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக
திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30
ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்ய
ஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி"
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன்
வளர்த்தல் பயிற்சி" என்ற தலைப்பில் 15/10/2015 மற்றும் 16/10/2015 ஆகிய
நாட்களில் பயிற்சி - செயல்முறைகள்
10th Study Material - Tamil Important Questions
Prepared by Mr. B. Panneer Selvam, B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)
Primary & Middle Schools Annual Inspection Report Form Download
Thanks to Mr. S.Samuel Selvaraj B.Sc,M.A.,B.Ed
இன்று "பாலின்டிரோம்' தேதி தெரியுமா?
இன்றைய தேதியான 5.10.2015க்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் 5.10.2015 என்ற தான்
வரும்.
மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?
புதுடில்லி:பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில்
மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலான,
எம்.சி.ஐ., மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.