Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று "பாலின்டிரோம்' தேதி தெரியுமா?

          இன்றைய தேதியான 5.10.2015க்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் 5.10.2015 என்ற தான் வரும். 

மருத்துவ கல்லூரியில் சேர வருகிறது நுழைவுத்தேர்வு?

        புதுடில்லி:பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம்

        புதுடில்லி,: ''மத்திய அரசின், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

          தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எமராஜன் தலைமை வகித்தார். 

தேவை 1 கோடி ஆசிரியர்கள்; யுனெஸ்கோ தகவல்!

          சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 

குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு

          குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 

இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

       கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.

பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

      இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

 

அரசு பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்

        காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.

குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

         அரசு பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இடவசதியற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு!

          இடவசதியற்ற தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கும்பகோணம் பள்ளியில், 94 குழந்தைகள் பலியான விபத்துக்கு பின், போதிய இடவசதி இல்லாமல் இயங்கும் தனியார் 
பள்ளிகளுக்கு, 11 ஆண்டுகளாக அங்கீகாரம் வழங்கவில்லை.

மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருமா?

       பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாக, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி

       விருதுநகர்: அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

"அக்.8 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு இல்லை'

      அக்டோபர் 8-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் சங்கங்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பங்கேற்கவில்லை என அதன் நிறுவனர் தலைவர் பி.சா.துரைமணிராஜன் தெரிவித்துள்ளார்.

 

Android lolli pop Operating System - Round up!

அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த நாம்தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம்.

ஆண்ட்ராய்ட் - இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த தளத்தை பிரத்யேகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்க பயன்படுத்துவர். இதை 2003ல், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!

         01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரம் தகவல்.

DEE - மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - இயக்குனர் செயல்முறைகள்

        தொடக்ககல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - மீறினால் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்

2015-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு


2015-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

     மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை

         தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.


வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை.

         வங்கிகளுக்கு இம்மாதம், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை. எனினும்,பொதுமக்களுக்கு, பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.அக்., 21 முதல் 23 வரை, ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் ஆகிய பண்டிக்கைக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; 24ம் தேதி, நான்காம் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது.


5 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம்: மேலும் பலரை நீக்க அரசு திட்டம்

          தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5.08 லட்சம் பேருக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் அதிக பங்களிப்புடன் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.


உதவி பேராசிரியர் பணி: நெட் தகுதித் தேர்வுக்கு நவ.1 வரை விண்ணப்பிக்கலாம்

         உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

          தொடரும் கலப்படங்கள், விதிமீறல்கள் | நுகர்வோர் சங்கத் தலைவர் விளக்கம்*சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.


கிராம சுகாதார செவிலியர் பணி காலியிடம்: வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு அழைப்பு

         கிராம சுகாதார செவிலியர் காலி பணி யிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளதால், தகுதியுள்ள நபர்கள் தங்களது பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளு மாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


கணினி, விவசாய ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: முதல்முறையாக கலந்தாய்வு மூலம் அரசு ஏற்பாடு

           அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய ஆசிரியர்களுக்கும் முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு விவசாயம் மற்றும், கணினி பாடங்களை சொல்லிக் கொடுப்பதற்காக விவசாய ஆசிரியர்களும் (தொழிற் கல்வி பயிற்றுனர்-வேளாண்மை), கணினி ஆசிரியர் களும் (கணினி பயிற்றுநர்) கடந்த 2008-ம் ஆண்டு முதல்முறையாக நியமிக்கப்பட்டனர்.


800 பி.எட். காலி இடங்களுக்கு 14–ந்தேதி 2–வது கட்ட கலந்தாய்வு

        தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் உள்ள 1777 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 28–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.சென்னை லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் முதல் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.


பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை

          தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.


வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்

       அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 8ம் தேதி, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவதால், அன்று பள்ளிகள் இயங்குமா என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கேள்வித்தாள் வெளியானதால் ஆசிரியர் தேர்வு ரத்து

           மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், பிரைமரி ஆசிரியர்கள் (பி.ஆர்.டி.), பிரைமரி ஆசிரியர்கள் (இசை) ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நேற்று எழுத்து தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

பொதுமக்கள் விரைவில் அறிந்து கொள்ள வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள்.

           தற்போது பல்வேறு தரப்பினரும் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் ‘வாட்ஸ் அப்’ வாயிலாக எவ்வித காலதாமதமும், கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றனர். 

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

            காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'பல பள்ளிகளில், இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படவில்லை' என, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் பருவத் தேர்வும், 10 முதல் பிளஸ் 2 வரையிலான, காலாண்டுத் தேர்வும் முடிந்துள்ளது.

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

         தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்

         கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.கற்பித்தலின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது:

 

டி.என்.பி.எஸ்.சி.,யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.
 

தீபாவளிக்கு வந்தாச்சு புதுவகை பேன்சி ரக பட்டாசுகள் ஜெரிக்கோ, ஷாக், டிவிஸ்ட் டென், எக்கோ அறிமுகம்

     சிவகாசி: தீபாவளிக்காக புதுவகை பேன்சி ரக பட்டாசுகளாக ஜெரிக்கோ, ஷாக், டிவிஸ்ட் டென், எக்கோ மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன.இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive