சர்வதேச
ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு
வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட
தீர்மானித்துள்ளது.சர்வதேச
அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக
அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது
எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு
குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது
குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இன்று ஒட்டுமொத்த விடுப்பில் கருவூலத் துறை ஊழியர்கள்;கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கருவூலம்-கணக்குத் துறை இயக்ககம் அறிவிப்பில்
கூறியிருப்பதாவது: போராட்டத்தில் ஈடுபடுவோர் கருவூலத்துக்கான சாவிகளை
தனக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களிடம் அளிக்க வேண்டும். சாவியை
ஒப்படைப்பதில் எந்த அதிகாரியும் நியமிக்கப்படாவிட்டால், கருவூல அலுவலரே
தனது கைவசம் சாவியை வைத்துக் கொள்ள வேண்டும்.
பி.எட். சேர்க்கை: அக்.14 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
இளநிலை
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான முதல்
கட்டக் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது.கலந்தாய்வு
முடிவில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில்
மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக். 14, 15, 16 ஆகிய
தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
காலாண்டு
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததையடுத்து அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.
குறைவான மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அரசு
பள்ளிகளில், காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறையும், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலி: தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி
விருதுநகர்: அரசு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களால் பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறையும் நிலை
ஏற்பட்டுள்ளது.
"அக்.8 வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு இல்லை'
அக்டோபர்
8-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் சங்கங்களின் ஒரு நாள் அடையாள
வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற
சங்கம் பங்கேற்கவில்லை என அதன் நிறுவனர் தலைவர் பி.சா.துரைமணிராஜன்
தெரிவித்துள்ளார்.
Android lolli pop Operating System - Round up!
அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த
நாம்தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம்.
ஆண்ட்ராய்ட்
- இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள
மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த
தளத்தை பிரத்யேகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்க
பயன்படுத்துவர். இதை 2003ல், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open
handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள்
நிறுவனம் வாங்கிக் கொண்டது.
2004 முதல் 2006 வரை தொகுப்புதியத்தில் பணியமர்த்தபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிப்பு!!
01.06.2006-யில் பணிவரன்முறைபடுத்தப்பட்டு
காலமுறை ஊதியம்பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன
நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவினத்தொகை
ஏற்படும் என உத்தேச மதிப்பை உடனடியாக அளிக்குமாறு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரம் தகவல்.
DEE - மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - இயக்குனர் செயல்முறைகள்
தொடக்ககல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்த கூடாது - மீறினால் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்
2015-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள்
விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி.
ரமணா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை.
வங்கிகளுக்கு இம்மாதம், தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை.
எனினும்,பொதுமக்களுக்கு, பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என வங்கி
அதிகாரிகள் தெரிவித்தனர்.அக்., 21 முதல் 23 வரை, ஆயுத பூஜை, விஜய தசமி,
மொகரம் ஆகிய பண்டிக்கைக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; 24ம்
தேதி, நான்காம் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்காது.
5 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம்: மேலும் பலரை நீக்க அரசு திட்டம்
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5.08 லட்சம் பேருக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.
மத்திய அரசின் அதிக பங்களிப்புடன் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள்
நடைமுறையில் இருக்கிறது.
உதவி பேராசிரியர் பணி: நெட் தகுதித் தேர்வுக்கு நவ.1 வரை விண்ணப்பிக்கலாம்
உதவி பேராசிரியர் பணிக்கான “நெட்” தகுதித் தேர்வுக்கு நவம்பர் 1-ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளில் இலக்கியம், வரலாறு, புவியியல், சமூகவியல், பொது
நிர்வாகம், உளவியல் உள்ளிட்ட கலைப்பிரிவு சம்பந்தப்பட்ட பாடங்களில் உதவி
பேராசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ நடத்தும் “நெட்” தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும்.
எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
தொடரும் கலப்படங்கள், விதிமீறல்கள் | நுகர்வோர் சங்கத் தலைவர் விளக்கம்*சமையல்
எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க
வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன்
கூறியுள்ளார்.
கிராம சுகாதார செவிலியர் பணி காலியிடம்: வேலைவாய்ப்பு பதிவுதாரர்களுக்கு அழைப்பு
கிராம சுகாதார செவிலியர் காலி பணி யிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியலை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளதால், தகுதியுள்ள
நபர்கள் தங்களது பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளு மாறு திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கணினி, விவசாய ஆசிரியர்களுக்கு இடமாறுதல்: முதல்முறையாக கலந்தாய்வு மூலம் அரசு ஏற்பாடு
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்களுக்கும், விவசாய
ஆசிரியர்களுக்கும் முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்க
தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1,
பிளஸ்-2 மாணவர்களுக்கு விவசாயம் மற்றும், கணினி பாடங்களை சொல்லிக்
கொடுப்பதற்காக விவசாய ஆசிரியர்களும் (தொழிற் கல்வி பயிற்றுனர்-வேளாண்மை),
கணினி ஆசிரியர் களும் (கணினி பயிற்றுநர்) கடந்த 2008-ம் ஆண்டு முதல்முறையாக
நியமிக்கப்பட்டனர்.
800 பி.எட். காலி இடங்களுக்கு 14–ந்தேதி 2–வது கட்ட கலந்தாய்வு
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பி.எட். கல்லூரிகளில் உள்ள 1777 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு கடந்த மாதம் 28–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.சென்னை
லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் முதல் கட்ட
கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.
பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள 35 பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆவின் பால் பொருட்கள்
விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டு, ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் பி.வி.
ரமணா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் விரைவில் அறிந்து கொள்ள வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள்.
தற்போது பல்வேறு தரப்பினரும் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் ‘வாட்ஸ் அப்’
வாயிலாக எவ்வித காலதாமதமும், கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக
உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றனர்.
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. 'பல பள்ளிகளில், இரண்டாம் பருவ புத்தகங்கள்
வழங்கப்படவில்லை' என, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில்,
சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில்,
மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் பருவத் தேர்வும்,
10 முதல் பிளஸ் 2 வரையிலான, காலாண்டுத் தேர்வும் முடிந்துள்ளது.
கிராமப் பகுதி மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேச பயிற்சி: ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தல்
கிராமப்
பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை
வழங்க தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா
வலியுறுத்தினார்.கற்பித்தலின்
மூலம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்கிற திட்டத்தை சென்னையில் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது:
டி.என்.பி.எஸ்.சி.,யில் 'டிஜிட்டல்' திட்டம் ரெடி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு
முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை
அமலாகிறது.
இலவச பொருட்கள் வரவில்லைஅரசு பள்ளி மாணவர்கள் அவதி
கல்வி ஆண்டு துவங்கி, மூன்று மாதம் தாண்டி விட்ட நிலையில், மாணவ,
மாணவியருக்கு இன்னும், புத்தகப்பை, காலணிகள், வண்ண பென்சில் போன்ற இலவச
பொருட்கள் வழங்கப்படவில்லை.
பள்ளி குழந்தைகளுக்கு ரூ.45.37 கோடியில் சீருடை
திண்டுக்கல்: பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு, 45.37 கோடி நிதியை
அரசு, சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ௧ம் வகுப்பு
முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான, 4 ஜோடி சீருடைகள்
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான
நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர் வாக்கு யாருக்குஆசிரியர் சங்கம் சூசகம்
சிதம்பரம், :தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர்
மன்றத்தின், மாநில செயற்குழு கூட்டம், கடலுார்
மாவட்டம், பிச்சாவரத்தில்
நேற்று நடந்தது.
சங்க பொதுச்செயலாளர்
மீனாட்சி சுந்தரம்,
நிருபர்களிடம் கூறியதாவது:
அனைவரும் தேர்ச்சி திட்டத்தைஅரசு ரத்து செய்ய வேண்டும்
காரைக்குடி:“எட்டாம் வகுப்பு
வரை அனைவரும்
தேர்ச்சி என்ற
கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என
பட்டதாரி ஆசிரியர்
சங்க மாநிலதலைவர் இளங்கோவன்
காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய
அரசு ஆசிரியருக்கு
இணையாக சம்பளம்
வேண்டும். புதிய
பென்ஷன் திட்டம்
ரத்து உட்பட
15 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி
வேலை நிறுத்தம்
நடத்தப்படும்.