Half Yearly Exam 2024
Latest Updates
"Helmet compulsory" - Relaxation Request Case Judgement Postponed.
கட்டாய தலைக்கவச உத்தரவு: மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
Increase DA to State Government Employees - Federation Request.
அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு வழங்கியதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி
உயர்வு வழங்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
Teachers Strike Date Conform?
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள்
சேர்ந்து, 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு
சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள்
நடத்தப்படுகின்றன.
IGNOU will launch Online Exam Soon?
இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான ஐ.ஜி.என்.ஓ.யு., ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து
வருகிறது.
இது குறித்து, இப்பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் கூறியதாவது:
Educational Loan For Disabled!
உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர்
பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவுதுணை ஆணையர் ஸ்ரீதரன் தகவல்
வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வருமான வரித்துறை துணை ஆணையர்(புலனாய்வு)
ஸ்ரீதரன் கூறினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி
தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு
வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல்
வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி
மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர்.
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம்
நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்துணவு
ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால்
அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி
நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு
ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு
வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப்
பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட
பணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த
இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு
வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல்
வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி
மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14
ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித
இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.
வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை
ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை
உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே
வழங்கப்படுகின்றன.
மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்
சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு
கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி
திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
10th Quarterly Exam Answer Key - Social Science
Social Science (25.9.10) (**New**)
- Social Science | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. P.Srinivasan - Click Here
- Social Science | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. V.Velmurugan - Click Here
- Social Science | 10th Standard Quarterly Exam Key Answers Download PDF Format | Mr. N.Boominathan - Click Here
அரசுத்துறை காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சித்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை
முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு இலவச லேப் டாப் நிறுத்தப்பட்டதால்
அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத
அதிகாரிகளால்அரசு சலுகை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் செயல்படாத மொழி ஆய்வகங்கள்?
அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு
வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார்
எழுந்துள்ளது.இதற்கென தனி வகுப்பு நேரம் (பீரியட்) ஒதுக்கி, முறையாக
நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பை அமல்படுத்தினால் மட்டுமே
திட்டம் மாணவர்களைச் சென்றடையும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை
கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு
உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி
வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.இந்த ஆண்டு, 1,750 இடங்களுக்கு,
7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்
இன்று துவங்குகிறது. முதற்கட்ட கவுன்சிலிங்கில், மாற்றுத் திறனாளிகள்
மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள்
பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது. பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப்
படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத்
துறையானது, தனித்தேர்வை நடத்துகிறது.