Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு

         மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

           ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30 மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி, 2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும் நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
 

சர்வதேச இன்ஜினியரிங் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கு 151வது இடம்

        உலக இன்ஜினியரிங் பல்கலைகள் தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கு, 151வது இடம் கிடைத்துள்ளது. 'பிரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை பிடித்துள்ளது. 
 

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா

    அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.

இன்று மற்ற வலைதளங்களில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான செய்திக்கு மறுப்பறிக்கை வெளியீடு

      நமது   வலைதளத்தில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த செய்தி சார்ந்துதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு,.சாந்தகுமார் என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இப்பொருள் சார்ந்து இயக்குநரை சந்திக்கவில்லை என்றும் முழுக்க முழுக்க தவறாக என் பெயரை பயன்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்
 

REPORT OF 7 th PAY COMMISSION HIGHLIGHTS (DATE : 01/09/2015)

ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி


ஆதார் அட்டை வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் தங்களது இ-மெயில் மற்றும் செல்போன் எண்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை  மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...

      தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 1.6.2009 ல் அரசு ஆணை 234 மூலம் 6 வது ஊதிய குழு ஊதியம் நடைமுறை படுத்தப்பட்டது .அப்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு பெற்று வந்த ஊதியத்தை விட ரூ .370 குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது .மேலும் தற்காலிக தீர்வாக அரசு ஆணை 258 ன் மூலம் 1.1.2006 முதல் 1.6.2009 முன்னர் நியமனம் பெற்றவைகள் மட்டும் 1.86.ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்திட அனுமதி வழங்கப்பட்டது.


ஆதார் பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக 200 பணியாளர் நியமனம்

         ஆதார் அட்டை பெறுவதற் கான பணிகளை விரைவுபடுத்து வதற்கு தமிழகத்தில் கூடுத லாக 200 பணியாளர்கள் ஆதார் மையங்களில் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்

     தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் 63 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.

ஆசிரியப் பணி சுமையா? சுவையா?

       கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.


நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 64 ஆவணங்களை மேற்கு வங்க காவல்துறை வெளியிட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள காவல் துறை அருங்காட்சியகத்தில் நேதாஜி பற்றிய ஆவணங்களை அதிகாரிகள் வெளியிட்டு வருகின்றனர்.


பிஎஃப் காப்பீட்டுத் தொகை உயர்வு: 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்

         தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச காப்பீட்டுத்தொகை 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.


பள்ளி மாணவர்களுக்கு 23,000 திருக்குறள் புத்தகங்களை ஓய்வூதிய பணத்தில் வழங்கிய முதியவர்: 17 ஆண்டுகளாக அறநெறியை பரப்புகிறார்



     கடந்த 17 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்த கங்களை வழங்கியும், அறநெறி வகுப்புகளை நடத்தியும் மாணவர் களிடையே நற்கருத்துகளைப்போதிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளார் திருச்சியைச் சேர்ந்த கரு.பேச்சிமுத்து (73).
திருச்சி திருவெறும்பூர் அருகே யுள்ள குமரேசபுரத்தில் வசிக்கும் இவர், பெல் நிறுவனத்தில் முது நிலை மேலாளராகப் பணியாற்றியவர்.


68,000 கிராமங்களுக்கு இணையதள பாதை: மத்திய அமைச்சர் தகவல்


        இந்தியாவில் 68 ஆயிரம் கிராமங்களை இணைக்கும் வகையில் 90 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிழை குழாய் பாதை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'

        அடுத்த மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

TNPSC வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

        புதுடில்லி:டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
 

'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'

       சென்னை:'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை.

         சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர். 

தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!

      கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

கலை விழாவில் கலக்கலாம்: மாணவர்களுக்கு வாய்ப்பு

       திண்டுக்கல்: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை விழா (கலா உற்சவ்) போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டிகள்இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைக்க ஆணை

        ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் குறித்து, நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதற்காக குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தகர கொட்டகையில் செயல்படும் ஆசிரியர் பல்கலை!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தகர கொட்டகையில் செயல்படுவதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஏழு அரசு கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உட்பட, 705 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. 

அனைத்து சத்துணவு மையங்களுக்கும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு

      தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. 
 

விநாயகர் சிலைகளை கரைப்பது ஏன் ?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

Important Clue to Finding the Problem


Teachers Wanted!


8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

        இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக 8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive