Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

         பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும். 

பிளஸ் 2 தனித்தேர்வு 18 முதல் 'ஹால் டிக்கெட்'

         பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
 

மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்

        பள்ளிக்கல்வித் துறையின் கீழ், பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு நடமாடும் உளவியல் மையம் வாயிலாக, சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு: : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

         சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய வகையில் ரூ.20லட்சத்துக்கு குறைவாக இரு படுக்கை அறைகளுடன் கூடிய குடியிருப்புகளை அரசு விற்பனை செய்யும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு

         25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

எம்.பி.பி.எஸ்., சீட்கள் அபகரிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

      மாணவர்களின் வறுமையை பயன்படுத்தி, எம்.பி.பி.எஸ். சீட்டுகளை அபகரிக்கும் மருத்துவ கல்லுாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை; மாணவர்கள் பரிதவிப்பு

             அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் நடத்த முடியாத நிலையில் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாகிவருகிறது.


கல்லூரி மாணவர்கள் வாக்காளர்களாக சேர விண்ணப்ப படிவம் வழங்கல்

     பதினெட்டு வயது பூர்த்தியடைந்த கல்லுாரி மாணவர்கள் ஆன்-லைன் மூலமாக புதிய வாக்காளர்களாக சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

        பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் களுக்கு ஆங்கிலப்பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது.

பள்ளி ஆசிரியரின் இடமாறுதல்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு!

            ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில், பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8 நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு கிராம இளைஞர்கள் கோயில் மரத்தடியில் பாடம் நடத்துகின்றனர்.

10th Tamil Paper 1 Quarterly Exam Key Answer

Exam Date: 14.9.15

இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

         இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

துணை மருத்துவப் படிப்பு: 3,010 காலியிடங்கள்

           சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில் 3,010 காலியிடங்கள் ஏற்பட்டன.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

          வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும்திருத்தம் செய்தல் ஆகியவற்றை இன்று முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம்.வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம். 

மாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்

         திண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.

செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்

                  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Seventh Pay Commission To Propose Higher HRA

The Seventh Pay Commission is likely to propose to increase House Rent Allowance (HRA) of central government employees, besides their basic salaries.By giving House Rent Allowance hikes, the Pay Commission is likely to seek to encourage property owners to rent out their properties, reduce the shortage of dwellings and to provide ‘housing for all central government employees’.

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

        அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணி

இந்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிர் இழப்பு ஏற்படலாம்?

வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான்.

கோவை மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்


       தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனமும் இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியை சென்ற சனிக்கிழமை 12-09-2015-இல் கோவை சித்தாபுதூர்  மாநராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள 100க்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 6,7 & 8 வகுப்புகளுக்கான பிரிவில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ம.அருண்குமார் (8ஆம் வகுப்பு ), ர.கோகுல்(7ஆம் வகுப்பு), வே.சீனிவாசன்(6ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்ற குழு முதலிடம் பெற்றது.இம்மாணவர்கள் அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். 

CCERT PUPPET TRAINING

பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

கட்டாயப் பணி மாறுதல் மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP Download via Android App!


          2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

CPS & GPF Android App!


அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

            மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.


சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

       ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது மனிதன்'!

          மச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடைஉருவானாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில் ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள் அன்றாடங்காய்ச்சி!)


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive