Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு

         அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான் அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LIC நிறுவன கல்வி உதவித் தொகைக்கு செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்

         சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்) அறிவித்துள்ளது.


போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.

        போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 

எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார்

        அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில், அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


10th Maths Study Material - English Medium


10th Maths Study Material
Prepared by,
Mr.  E.ELANCHEZHIAN.M.Sc.,B.Ed.,

10th Social Science Study Material


Social Science Study Material
Prepared by
Mr. V. VELMURUGAN

தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

       தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு விலக்கு அளிக்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.


காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு

           சென்னை, ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருமணத்துக்குப் பின், அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும், பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

        பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
 

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்

        ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி?

        டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ததில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

           நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
 

பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்

          தமிழகத்திலுள்ள, 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், 2,200 பி.எட்., இடங்களை நிரப்ப, 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

குழந்தைகளுக்கான வீரதீர விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

         குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசு வழங்கும், குழந்தைகளுக்கான வீரதீர விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் வீரதீர செயல்களைப் பாராட்டி, மத்திய அரசின் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் சார்பில், 1958 முதல், விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில், 24 குழந்தைகளை தேர்வு செய்து, இந்த விருது வழங்கப்படுகிறது. 
 

சத்துணவு மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம்

         அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இதுதொடர்பாக சத்துணவு துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூ.2 கோடிதமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளிகளில், சத்துணவு கூடங்கள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், 5.40 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். 

பள்ளிக்கு போகாமலேயே பட்டம் வாங்கிய பெண்!

          ராஜஸ்தானில், பச்சிளம் பருவத்தில் தாயை இழந்த மகளை, பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பாமல், தன் சொந்த முயற்சியில் பாடம் கற்பித்து, எம்.ஏ., பட்டம் பெறச் செய்த தந்தையின் செயல், அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக பள்ளி மூடல்

       கெங்கைகொண்டானில் என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதால், அங்கு இயங்கிய ஊராட்சி துவக்கப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்கள் பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.


ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி; தேர்வு நேரத்தில் மாணவர்கள் பாதிப்பு

         அரசு பள்ளிகளில் முதல்பருவத்தேர்வு துவங்கும் நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, வரும், 12ம் தேதி முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, செப்.,19ம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு அறிவியல் செயல்முறை துணைத்தேர்வு

        பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வானது அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் வரும் செப்.,21 முதல் செப்.,23 வரை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள

             ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா ???

         தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம்சாட்டினார்இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 

Flash News: 6% அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீத உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

SSA scheme close?


DEO Office PA Promotion Panel As on 15.3.15

        தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2015 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

       சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

கூடுதல் கட்டணமின்றி அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்சம் 2 எம்பி வேகத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

           பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 2014 மார்ச் முதல் கடந்த மார்ச் வரை சுமார் 1.98 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதில் லேண்ட் லைன்  இணைப்பில் மட்டும் 20 லட்சம் பேர் குறைந்துள்ளனர். எனவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 

DA: அகவிலைப்படி உயர்வு: இன்று பரிசீலனை?

     தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசுஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

        தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைவு: மென்பொருள் மூலம் கண்காணிப்பு

        பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது.அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி,

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 143 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

         இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே கழிவறை பயன்படுத்த உத்தரவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி

     அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று  புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து  

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD HALL TICKET......

      மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive