Half Yearly Exam 2024
Latest Updates
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணல்: திருநங்கையை அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வில் திருநங்கையை அனுமதிக்க
வேண்டும் என்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த
திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்
தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஒப்பந்த ஆசிரியர் நியமனம் அணுமின் நிலையம் ஏற்பாடு.
கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி அரசு பள்ளிகளில், காலி
பணியிடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, சென்னை அணுமின் நிலையம்
ஏற்பாடு செய்துள்ளது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும்
பள்ளிகளில், அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள்
இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.
ஆதார் எண் கொடுத்தால்தான் பேராசிரியர்களுக்கு ஊதியம்! கல்லூரிகள் எச்சரிக்கையால் சிக்கல்
உச்ச நீதிமன்றம் "ஆதார் எண் கட்டாயமல்ல' எனக் கூறி வந்தபோதிலும், ஆதார் எண்
கொடுத்தால்தான் ஊதியம் என சில தமிழக பொறியியல் கல்லூரிகள் கூறியிருப்பது
பேராசிரியர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும்
மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை
மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
கண்ணுக்கு கண்ணாக... இன்று தேசிய கண் தான தினம்...
ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது
விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி
தவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும்.
நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம்
பார்வையற்றவர்களின் கண்ணுக்கு கண்ணாக இருந்து ஒளி ஏற்றலாம். இது பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண் தான தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது குறைப்பு
மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு
குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த
நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக
நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம்
கள்ள நோட்டுகளை தடுக்க புதிய 7 ரகசிய அடையாளங்கள்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் பாங்கிக்கு புகார்கள் வந்துள்ளன. வங்கி ஏ.டி.எம்.களில் எடுக்கும் பணத்திலும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106
வெவ்வேறு
தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்)
அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலை செய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத
பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த
கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப்
பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
தருமபுரியில் கல்வி தரத்தை மேம்படுத்த அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்
தருமபுரியில் கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கும் திட்டம் நீண்ட காலமாக
கிடப்பில் இருப்பதால் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் சிக்கல்
ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆய்வக வசதி இல்லாத அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள்: செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் பரிதாபம்
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்?
தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.
10th Maths Study Material
10th Maths Study Material
- Maths Quarterly Exam Model Question Paper (2015-16) | Mr. S. Nagarajan - Tamil Medium
- All Other Latest 10th Study Materials - Click Here
அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!
மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளி இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்.
இந்திய வம்சாவளி சிறுமி லிடியா பாஸ்டின்(12), லண்டனில் நடைபெற்ற 'மென்ஸா அறிவுக்கூர்மை போட்டியில் 162 புள்ளிகள் பெற்று, இயற்பியல் வல்லுனர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்னுக்குதள்ளி முதலிடம்
பெற்றார்.
'குழந்தை நல பரிசு பெட்டகம்' அடுத்த அம்மா திட்டம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அம்மா குழந்தை நல பரிசு
பெட்டகம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையம்,
அரசு மருத்துவமனை, நகராட்சி மருந்தகங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு
இத்திட்டம் பொருந்தும்.
டி.ஆர்.பி., - விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்
அரசு சட்டக்
கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு
பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக்
கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை
நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம்
எழுத்துத் தேர்வு நடந்தது.
சிவில் சர்வீசஸ் தேர்வு அரசு இலவச பயிற்சி
சிவில் சர்வீசஸ்
தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி
தேர்வு பயிற்சி மையம், நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு
புதிதாகத்
தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை
(செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா
காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார்.
"ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தமிழ் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை'
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.எஸ்.சி.இ. பள்ளி கவுன்சிலின் தலைமைச் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் கூறினார்.
எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத நல்லாசிரியர் விருது ஊக்கத்தொகை
"கடந்த எட்டு ஆண்டுகளாக நல்லாசிரியர் ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், தொகையை
உயர்த்தி வழங்க'' அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக
ஆண்டுதோறும் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலை, மெட்ரிக்., மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த கல்வி
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.