Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதார் எண் இருந்தால் தான் இலவச 'லேப் - டாப்'

       'கடந்த ஆண்டுகளில், கணக்கு குளறுபடி ஏற்பட்டுள்ளதால், ஆதார் எண் இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப் - டாப் வழங்கி வருகிறது. 

TNPSC Group 2 A - 1700 Post ,VAO-800 Post, Group 4- 2800 பணியிடம் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது

        டி.என்.பி.எஸ்சி  நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில் 

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. மாநில கண்காட்சிக்கு 4 சிறந்த படைப்புகள் தேர்வு .



   2015-2016-ஆம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கான அறிவியல் மற்றும் கணிதம் என்ற மையக்கருத்தினைக்கொண்டு சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் தூய்மை, வள மேலாண்மை, தொழிலகம், வேளாண்மை மற்றும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை, தரமான வாழ்க்கைக்கான கணிதம் ஆகிய 6 தலைப்புகளில் சிறந்த படைப்புகளாக புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் இடம் பெற்ற வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


TNPSC: குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: பாலசுப்பிரமணியன்

         குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவராக பொறுப்பு வகிக்கும் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


விரைவில் 900 ஆசிரியர்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

         புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள 900 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.


அக்.8 -ல் திட்டமிட்டபடி ஆசிரியர்கள் கூட்டுக்குழுவின் வேலை நிறுத்தம்

         ஜேக்டோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி அக்.8 -ஆம் தேதி நடைபெறும் என்றார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் க. மீனாட்சிசுந்தரம்.புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற மாநில விரைவுச் செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியார்களிடம் மேலும் கூறியது:


அரசு பள்ளி கட்டடங்களில் மின்னுற்பத்தி: மத்திய அரசு அறிவுறுத்தல்

         அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்த சுற்றறிக்கை மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


நஞ்சாகும் உணவு குறித்து சில உண்மைகள்!

நன்றி - .செந்தமிழன்
உணவைப் பற்றிய எண்ணற்ற உண்மைகளில் ஒருசிலவற்றையாவது வெளிப்படுத்த வேண்டும் என எண்ணுகிறேன்.

தமிழ்ப் பாடப்புத்தகத்துடன் ஆசிரியர்களுக்கும் "கையேடு'.

        தமிழ்ப் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடும்' தயாரிக்கவேண்டுமென, அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கல்வியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

கழிவறைகளை பராமரிக்க நிதி...

45000 பள்ளிகட்கு
Tamil medium
SABL Card வழங்க
ஒரு பள்ளிக்கு ரூ.6500- வீதம்

கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2014-15-ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த விழா நடைபெற்றது.
 
 

கடலூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை;மாணவர்களைக் கண்காணிக்க குழு

          கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதிய மோதல் தலை துாக்கியுள்ளது. இதனைத் தவிர்த்திட மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே களைந்திட வசதியாக அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.
 

பி.எட்., படிப்பிற்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

         இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற கல்வியியல் பயிற்சி படிப்புகள், இதுவரை, ஓராண்டு பட்டப்படிப்பாக இருந்தன. இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

          ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

         முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால (1973-2015) கோரிக்கையான 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

TEACHER

அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

         அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 21.9.2014 அன்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
 

சமூக பாதுகாப்பு துறைக்கு விருது இல்லை

         தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, சமூக பாதுகாப்பு துறையில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என, அரசு தெரிவித்து உள்ளது.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி வருகிறது. 
 

பெங்களூரு அருகே ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்கும் கிராமம்

        கோயில்களில் சாமிசிலைகள் பிரதிஷ்டை செய்து வணங்குவது வழக்கமான நடைமுறை. தேசதலைவர்கள், தியாகிகளுக்கு சிலை அமைப்பதும் வழக்கமான ஒன்று. நடிகர், நடிகைகளுக்கும் கோயில் கட்டி வழிபடும் ரசிகர்கள் உண்டு. ஆனால் கல்விகற்பித்த ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்குவதை கேள்விப்பட்டுள்ளீர்களா அல்லது கண்டுள்ளீர்ளா? கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள அதர்கா கிராமத்தில் கல்வி கற்பித்த 

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் 2 நாளில் அரசு அறிவிக்கும்

           முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு 2 நாளில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இது தொடர்பாக விரிவாக ஆலோசித்து சில முடிவுகளை  எடுத்திருப்பதாக தெரிகிறது. முன்னாள் ராணுவத்தினரின் சில கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. சிலவற்றை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஓய்வூதியம் திருத்தி அமைக்க வேண்டும்  என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது; ஐந்தாண்டுக்கு  ஒருமுறை மட்டுமே திருத்தியமைக்கப்படும் என்ற தனது நிலைப்பாட்டில் அரசு உறுதியுடன் உள்ளது. 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2 லட்சம் மாணவர்கள்: தமிழக அரசு தகவல்

          அரசுப் பள்ளிகளில் 11,992 பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் 2.60 லட்சம் மாணவர்கள் படிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-13-ஆம் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வல்லுனர்கள் பாடம்: ஆசிரியர் தினவிழாவில் பிரதமர் மோடி யோசனை

          ''டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், வாரத்தில்ஒரு மணி நேரமாவது, மாணவர்களுக்கு பாடம் எடுத்து, தங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு

        பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

விழி ஒளி பரிசோதகர் பட்டப்படிப்பு துவக்கம்

          தமிழகத்தில் முதன்முறையாக, சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 'விழி ஒளி பரிசோதகர்' என்ற, நான்காண்டு பி.எஸ்சி., பட்டப்படிப்பு துவக்கப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 1962 முதல், 'விழி ஒளி பரிசோதகர்' என்ற, டிப்ளமோ படிப்பு உள்ளது; 

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

      பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி

      ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:


குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதுகள்!

      பள்ளிக்கல்வி - 2015/2016 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதுகள் - தகுதி உள்ள பரிந்துரைகள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் - கடைசி தேதி 30.09.2015

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு

      தமிழகத்தில் 84 சதவீதம் பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் தர ஐ.டி., நிறுவனங்கள் தயார்

          பல்கலை மற்றும் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான, கேம்பஸ் இன்டர்வியூ துவங்கியுள்ளது. இதில், 50 ஐ.டி., நிறுவனங்கள் பங்கு பெற்று, ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வரை, சம்பளம் தர முன்வந்துள்ளன.அண்ணா பல்கலை, எஸ்.ஆர்.எம்., - வி.ஐ.டி., - பி.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைகளில், நடப்பு கல்வி ஆண்டின் வளாக நேர்காணல் தேர்வு துவங்கியுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive