நடப்பு கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம்
வகுப்பின் அரசுத்தேர்வுகளுக்கு இரண்டும் ஒருங்கிணைந்த மதிப்பெண்
சான்றிதழ்வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழக
சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று
நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ திராவிட மணி, பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை குறைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும்
உருவாக்கப்படும், கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பு கடந்த மூன்று
ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின்
கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகளையும் முழுமையாக
நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.
கல்விமான்யக் கோரிக்கையில் இன்று 107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள்,மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.
காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பா.வளர்மதி பதிலளித்துப் பேசினார். அமைச்சர் பேசி முடித்ததும் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி எழுந்து, ‘‘சத்துணவு மையங்களில் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை எப்போது நிரப்பப்படும்’’ என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, ‘‘சத்துணவு மைய பணியாளர்கள் தொடர்பானவழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ்
1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட
மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய
அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில்
நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதில் அரசு பிறப்பித்த இருவேறு ஆணைகளின் காரணமாக சிக்கல் நிலவுகிறது.
சமீபத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில்
தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பத்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி இதுவரை தமிழுக்கு
ஒதுக்கப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. தமிழ்தானே! என்கிற
ஏளனம்தான் இன்றுவரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி
அடையாததற்குக் காரணம்.
G.O
Ms: 414 - காலை மாலை அனுமதி அரசானை - அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு
நாட்கள் முன் அனுமதியுடன் அல்லது அனுமதி இல்லாமல் காலதாமத வருகைக்கு
அனுமதி உண்டு - விதிமுறைகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பான, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவின், உயர்நிலைக் குழு கூட்டம்
திருச்சியில் நடந்தது. இதுகுறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற
பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம்
நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ராணுவம், துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் உள்பட அனைத்து மத்திய அரசு
ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இந்தத்
தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு, செப்டம்பர்
26 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருட்கள்,
சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக,
'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி
பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. 'நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம்
செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும்,
'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு
இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை,
மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15-ஆம் கல்வியாண்டில்
ஒரு மாணவருக்கான செலவுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப்
பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.32,263 செலவாகிறது. இதில் அரசு மானியமாக
ரூ.25,898 வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு
இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர்
கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும்
நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,)
ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த
இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில
அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர்தினம்
கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை
தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது
வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார்
நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான
ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர்
ஆறுமுகம், தாக்கல் செய்த மனு:யு.ஜி.சி., உத்தரவுப்படி, 1979 - 80ல்,
அண்ணாமலை பல்கலையில், தொலைதுார கல்வி துவங்கப்பட்டது. நாடு முழுவதும், 89
மையங்கள் மூலம், தொலைதுார கல்வி வழங்கி வருகிறோம். கடந்த மாதம், 14ம் தேதி,
டில்லியில் உள்ள, யு.ஜி.சி.,யின் தொலைதுார கல்வி அமைப்பு, எங்களுக்கு ஒரு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில்
இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர்
என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.