Half Yearly Exam 2024
Latest Updates
Special Teachers TET (PET) & UGTRB & PGTRB Study Material
PET Study Material
Material Prepared by G.Saravanan PET, & V.Jaganraj
Material Prepared by G.Saravanan PET, & V.Jaganraj
உண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம்.
உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின்
அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை.
கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார்.
176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல்
வழங்கப்படவுள்ளது.
காலியிடங்களை தெரிவிக்காமல் கலந்தாய்வு:ஆசிரியர்கள் வாக்குவாதம்
திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான
மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் காலியிடங்களை அறிவிக்காததால், ஆசிரியர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று நடந்த கலந்தாய்வில் இவர்களில் 45 பேர்
பங்கேற்றனர். முதலில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலியிடங்கள்
அறிவிக்கப்பட்டன. அதில் முதல் 3 இடங்களை தேர்வு செய்தனர்.
கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு
'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை
வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு
செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட
உதவிகளை வழங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட
விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள்
செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.
'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்!' - பெற்றோர் தரப்பில் கோரிக்கை
'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி
தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர்
தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1
முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு,
நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள
மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.
அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!
தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள்
அதிகரித்துள்ளன.
சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி,
மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய
அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல்
மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர்
யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு
எடுத்து வருகிறது.
மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.
புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத்
திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின்
சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில்
மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
SSA - BRTE களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்
நன்றி - அனைத்து வளமைய பட்டதாரிசங்கம்.
சான்று கிடைக்குமா, இல்லையா? தவிக்கின்றனர் மாணவர்கள்
பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.