Half Yearly Exam 2024
Latest Updates
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிட கோரிக்கை
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக்
கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்
தமிழ்நாடு
அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும்
தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.
ஒரே இடத்துக்கு 2 பேர் நியமனம் நீலகிரியில் இடியாப்ப சிக்கல்
நீலகிரி
மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம்
ஏற்பட்டுள்ளது.பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விருப்ப
மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள், நேற்று முன்தினம் முடிவுக்கு
வந்தன.தஞ்சை மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றிய
முதுகலை ஆசிரியருக்கு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பள்ளிக்கு, 23ம் தேதி
பணி இட மாறுதல் வழங்கப்பட்டது.
திறனறி தேர்வுக்கு கடைசி தேதி அறிவிப்பு
கிராமப்புற
மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை
பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத்
தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை
அறிவுறுத்தியுள்ளது.
பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!
பெற்றோர்
ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி
கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும்
மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன.
இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார்
எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.மாணவர்களிடம் ஆதார்
எண் சேகரித்ததில், 70 லட்சம் பேருக்கு ஆதார் எண் இல்லை என்பது தெரிய
வந்தது.
மாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
மழைக்கால
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த
ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்பது புதிய தொழில் பிரிவுகள்
எட்டு
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9
புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை
அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.சட்டப்
பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற
விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின்
சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி
அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய
மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள
கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு
கல்வித்துறையில், 3,000 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட
உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு
உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருமான வரிக் கணக்கு தாக்கல்: நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்
தமிழகம்
உள்பட இந்தியா முழுவதும் நிதியாண்டு 2014-15-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக்
கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய, வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என
வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில
மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ
சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழு அமைக்கப்படுமா?
மாணவர்களிடம்
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும், தனி மனித
ஒழுக்கம் வளரும் விதத்திலும், அரசுப் பள்ளிகளில் சுகாதாரக் குழுக்கள்
ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் 3ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு
தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கையை
வலியுறுத்தி, 3-ஆம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுவில் முடிவு
செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில பொதுச் செயலர் செ.நா.ஜனார்த்தனன்
தெரிவித்தார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:
பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்
பிளஸ்
2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்.,
4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இச்சான்றிதழ்,
அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். அதன்பின், தேர்வுத்துறை மண்டலத் துணை
இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் பணி நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாக குறைக்கப்பட வாய்ப்பு!
தற்போது பள்ளிக்கல்விதுறையில் மே மாதம்
நடத்தப்பட வேண்டிய பணி நிரவலை ஆசிரியர்களின் குடும்பம் மற்றும் பள்ளி
மாணவர்களின் நலன் கருதி அறவே ரத்து செய்திட நமது மாநிலத்தலைவர்
கு.தியாகராஜன் தலைமையிலான மாநில பொறுப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டு
வருகிறார்கள் . இந்தக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதே
நேரத்தில்
போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் சாலைமறியல் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
உசிலம்பட்டி அருகே போதிய ஆசிரியர்களை
நியமிக்கக் கோரி உசிலம்பட்டி–எழுமலை சாலையில் மாணவர்கள் சாலைமறியலில்
ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. பற்றாக்குறைஉசிலம்பட்டி அருகே உள்ளது தாடையம்பட்டி. இந்த
ஊரில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 455 மாணவ
மாணவிகள் படிக்கின்றனர்.
பி.டி.எஸ்., சீட் எண்ணிக்கை உயர்த்தப்படும்
பல் மருத்துவக் கல்லுாரியில், நாற்பதாக உள்ள பி.டி.எஸ்., சீட் எண்ணிக்கை நுாறாக உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார். கோரிமேடு
மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில், முதலாமாண்டு வகுப்பு
துவக்க விழா நேற்று நடந்தது. கல்லுாரி டீன் ரமேஷ் வரவேற்றார். சேர்மன்
டாக்டர் லுாயி கண்ணையா தலைமை தாங்கினார். ஜெயபால் எம்.எல்.ஏ., வாழ்த்தி
பேசினார். முதலாமாண்டு வகுப்பை முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி
துவக்கி வைத்தார். முதலாமாண்டு மாணவர்கள் 40 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கி
முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: