Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,000 சிறப்பு பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., துணைத்தலைவர் பேச்சு

        உயர்கல்வியை மேம்படுத்த ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ் கூறினார்.

2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

          டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.

பெண் குழந்தை 'ஸ்காலர்ஷிப்' செப்., 30க்குள் விண்ணப்பம்

         'மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,யின், ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC : புள்ளியியல், அறநிலையத்துறையில் 171 பேருக்கு 31ல் 'இன்டர்வியூ'

           புள்ளியியல் உதவி இயக்குனர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை

பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. 

சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்

          சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

     கடந்த 18-ஆம் தேதி இந்திய-சீன எல்லை கண்காணிப்பின்போது, தவாங் மாவட்டத்தில் ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற மலையில் இருந்து மற்றொரு மலைக்கு வான்வழி கம்பி வடம் அமைக்கும் பணியில் அண்ணாமலையும், அவரது குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.
 

முதுநிலை சட்டப் படிப்பு: ஆக.26-இல் கலந்தாய்வு

        அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

பட்டப்படிப்பு பாடமாகிறது என்.எஸ்.எஸ்.,

        நாட்டு நல பணித்திட்டம் என்ற, தேசிய மாணவர் இயக்க திட்டமான என்.எஸ்.எஸ்., பற்றி கல்லுாரிகளில், விருப்ப பாடமாக எடுக்க, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

        ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும், 28ம் தேதி, ஒரு நாள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, செப்., 12ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்

        ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள்

        வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு

      2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

        வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல்

       அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:

மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தாமதம்:

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகராட்சி சார்பில் 32 மேல்நிலைப் பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகள் ஆகியும் 13 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதம் ஜூலை: அமெரிக்க விஞ்ஞானிகள்

      பூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரும் விண்கல் பூமியின் மேல் மோதுகிறதா?: இணையத்தில் வேகமாக பரவும் வதந்திக்கு நாசா பதில்.

         அடுத்த மாதம் செப்டம்பர் 15 - 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வருகிறது. 

இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

       மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம் - மத்திய அரசு முடிவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்கி விடாமல், அவர்களை, 'பாஸ்' செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

       ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

          மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 

சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

         சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இம்மாதம் முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்

          நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

           கல்வி உதவித்தொகை பெற மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான உதவித்தொகை, 9ம் வகுப்பு எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாணவிகளுக்கான உதவித்தொகை, தேசிய வருவாய் திறன்வழித்தேர்வு உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை என மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்

          மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களை நடத்துவதற்காக, இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களிடமிருந்து, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தால் மாணவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டைப் பெற வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு

         சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சுயநிதி தொழில் படிப்பு கல்லூரி கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ளது.

பாடம் எடுக்க மறுத்த ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

         ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்புக்கு பாடம் எடுக்க மறுத்த இரு ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். 

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

        தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

         மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

23ல் சிவில் சர்வீசஸ் தேர்வு - 9.5 லட்சம் பேர் பதிவு

       ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கான, 1,129 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வரும், 23ம் தேதி நடக்கிறது. இதில், 9.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு, நாடு முழுவதும், 71 நகரங்களில் நடக்கிறது.

746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்

      746 பள்ளிகளுக்கு குறைந்த பட்ச நிலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் மே 2016 வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive