துணை
கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74
பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில், துணை கலெக்டர் - 19; போலீஸ்
டி.எஸ்.பி., - 26; வணிக வரி உதவி கமிஷனர் - 21; மாவட்ட பதிவாளர் - எட்டு
என, 74 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் 1 தேர்வு, நவம்பர், 8ம் தேதி
நடக்கிறது.