Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'

           வீடுகளுக்கு, 10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய மின் துறை அமைச்சகம், விளக்கு மூலம் மின்சாரம் சேமிக்கும் திட்டத்தை, 2009ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டது. 

மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு

           சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம். திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். வட்டார தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் பயிற்சி அளித்தார்.
 

சர்வேயர் பணி விண்ணப்பம்

          நகர் ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி.,யில் சர்வேயர் உதவி வரைவாளர்களுக்கான 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் ஜூலை 27ம் தேதி வரை டி.டி.சி.பி.,யின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, ஜூலை 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.
 

AIPMT-2015 மறுதேர்வுக்கான முடிவுகள் ஆக.,17ல் வெளியாகும் என எதிர்பார்ப்பு

       அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 

22 பேராசிரியர் நியமன பிரச்னை முடிவுக்கு வந்தது : சிண்டிகேட் கூட்டத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

        சென்னை பல்கலையில், ஓர் ஆண்டாக சர்ச்சைக்குள்ளான, 22 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலை சிண்டிகேட் அனுமதி அளித்தது. இதையடுத்து, 20 பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர்ந்தனர்.

கலாமை போல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை: இன்ஜி., மாணவர்களுக்கு அறிவுரை


           தமிழகம் முழுவதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு வகுப்புகள், கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கின. 
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 119 % ஆக மாற போகிறது!

MESSAGE
With the announcement of All India Consumer Price Index for the month of
June, 2015, the average stood at 254.41. Hence the Central Government Employees are
entitled for D.A. at 119% of pay w.e.f.01/07/2015.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங்.

             காரைக்காலில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்   கலந்தாய்வு கூட்டம் நடந்தது. புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலத்தெரு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் முதல் முறையாக காரைக்காலில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. 
 

ஆங்கிலப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2நாட்கள்

                  அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2015-16 ஆம் ஆண்டிற்கு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு TRAINING OF PRIMARY SCHOOL TEACHERS IN TEACHING ENGLISH - ஆங்கிலப்பயிற்சி தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2நாட்கள் பயிற்சி அளித்தல்

அரசு பள்ளிகளில் ஆர்டர்லியாக மாறும் உடற்கல்வி ஆசிரியர்கள்.

              அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,உடற்கல்வி வகுப்பு கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. சி.சி.இ., எனப்படும் தொடர் செயல்மதிப்பீட்டு முறையில் உடற்கல்விக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதற்கென ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாரம் தோறும் இரண்டு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டு, உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு வகுப்பு, &'தியரி&'யாகவும், மற்றொரு வகுப்பு மைதானப் பயிற்சியாகவும்இருக்க வேண்டும்.


TNPSC செவிலியர் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறையில் அதிகாரி பணி

        தமிழக சுகாதாரத்துறையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் நல அதிகாரி பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் பள்ளி ஆசிரியர்களை பள்ளி கமிட்டி அனுமதி இல்லாமல் வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது: மதுரை ஐகோர்ட்டு

          மதுரை, ஆக. 3–விருதுநகர் மாவட்டம் முகவூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், மதுரைஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நான், ராஜபாளையம் புனல்வெளியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான முருகன் ஆரம்ப பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வந்தேன்.


Updated Version "Padasalai" App Now Available in Google Play Store



                நமது பாடசாலை வலைதளத்தின் புதிய Android App தற்போது Updated Version - ஆக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் SSLC, Plus TWO, TNTET, PGTRB, TNPSC, GO, RTI, Proceedings  ஆகிய லிங்குகளுக்கு மிக சுலபமாக செல்லலாம். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இப்புதிய App இருக்கும். டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

CPS Fund - ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை

           இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் CPS தொகை மற்றும் மாநில அரசு ஊழியர் எண்ணிக்கை RTI -இல் வெளியீடு .தமிழக அரசு PFRDA விடம்-ஒரு ரூபாய் கூட வழங்காத நிலை-RTI NEWS

  1. CPS Fund Details in All India Level - Click Here

தொடக்க கல்வி துறையில் இட மாறுதல்.

             பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தொடர்பான தேதியை பள்ளிக் கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. 

TNPSC மூலம் நடத்தப்படும் தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 20-ந் தேதி கடைசி நாள்

        தாய்-சேய் நல அலுவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

இன்ஜி., வகுப்புகள் இன்று துவக்கம்

         அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள், இன்று துவங்குகின்றன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள், அரசு உதவி பெறும் இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. முதுகலை முதலாம் ஆண்டு இன்ஜி., வகுப்புகள், 17ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் சேர்ப்பு

         அரசுப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் (2015-16) 6, 9, 11-ஆம் வகுப்புகளில் 37,000 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.இந்த வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2014- 15) மொத்தமாக 11,03,297 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 11,40,636-ஆக அதிகரித்துள்ளது.ஆறாம் வகுப்பில் 6,462 மாணவர்கள் கூடுதலாகவும், 9-ஆம் வகுப்பில் 7,482 மாணவர்களும், 11-ஆம் வகுப்பில் 23,395 மாணவர்களும் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.

 

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

         பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

          தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2015-16 ஆம் கல்வியாண்டில் மாணவர், மாணவிகளை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

சார்பு - ஆய்வாளர் பணிக்கு இன்று சான்று சரிபார்ப்பு

           தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி பரிசோதனைகள் திங்கள்கிழமை (ஆக.3) தொடங்குகின்றன.தமிழகத்தில் அண்மையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

மத்திய அரசு பணியாளர் தேர்வில் மொபைல் போனுக்கு தடை

           மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் கலந்து கொள்வோர், மொபைல் போன், கால்குலேட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வர, மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது. 

தங்கம் வழங்கும் திட்டத்தால் புதுப்பலன் கிராமங்களில் பெண் கல்வி அதிகரிப்பு!

          தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், 2011ம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்டது. 10ம் வகுப்பு படித்த, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்: ஸ்டாலின் உறுதி

      ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட   அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று பங்கேற்று துவக்கி வைத்தேன். 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். "அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம்", "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது",

"8ஆம் வகுப்பு வரை நிச்சயம் தேர்ச்சி என்ற கொள்கைக்கு விரைவில் முடிவு'

         பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிச்சயம் தேர்ச்சி பெற வைக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

போதை மாணவர்களுக்கு பயிற்சி : அரசு ஆசிரியர்களுக்கு உத்தரவு

        'மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்தும், மாணவர்களை கண்காணித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள பயிற்சி அளிக்க வேண்டும்' என, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்விஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

135 ஆசிரியர்கள் விருப்ப இடமாற்றம்

         ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில், 135 பேர் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெற்றனர். இந்த பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில், 'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மட்டும், ஆன் - லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

பி.எட்., மாணவர் சேர்க்கை: ஆக., 7க்குள் அறிவிப்பு

          தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு 'ஆன் - லைன்' வழி அங்கீகாரம்

    ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள் துவங்கப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive