Half Yearly Exam 2024
Latest Updates
சுருக்கெழுத்தர் பணிக்கு 29-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
சுருக்கெழுத்தர் பணிக்கு ஜூலை 29-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி 25ம் தேதி துவக்கம்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் கற்பனை திறன், பிற திறமைகளை வளர்க்கும் வகையில், அனைவருக்கும்
கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
பட்டமளிப்பு விழாவில் இனி பட்டாடை 'நோ'.
கல்லுாரி, பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணிகளை பயன்படுத்த, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கைத்தறித் துணி
வர்த்தகத்தை அதிகப்படுத்த, புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது.
பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில்சேர வேண்டும்' என்ற ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.
வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் என்ஜினீயர் பட்டம் பெறுகிறார்கள்.
அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேறாவிடில் 2003 தேர்தலில் சந்தித்த விளைவு ஏற்படும்: அலுவலர் சங்கம் எச்சரிக்கை
“அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடந்த 2003ல் சந்தித்த
விளைவை தான் அ.தி.மு.க., அரசு சந்திக்க நேரிடும்,” என சிவகங்கையில்
ஊரகவளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் என்.சேகர்
பேசினார்.
பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை
பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும்
தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி
இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான
பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என
தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே
அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறையே காரணம் - காந்திகிராம பல்கலை ஆய்வு
ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின்
கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து
காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு
மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான
கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.
ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள்
மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம்
வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல
திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ்
கேட்கப்படுகின்றன.
அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
விதிமுறை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பள்ளி
வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுாரில் சமீபத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில் 31 மாணவர்கள்
காயமடைந்தனர். முறையாக பராமரிக்காமல் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச்
செல்வதுதான் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என குற்றம்
சாட்டப்படுகிறது.
உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை
இனிய AEEO நண்பர்களே வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர்
Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு -தமிழக அரசு மேல்முறையீடு! வழக்கு 2 வாரகாலத்துக்கு ஒத்திவைப்பு
தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு, வெய்ட்டேஜை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் தமிழக அரசு " மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று கூறியது.இந்த அறிவிப்பால் வழக்கை இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்ளிக் கல்வித்துறை செயலர்உத்தரவு
தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு
அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில்
கொள்முதல் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024
நூலகங்கள் உள்ளன.
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா
சிபிஎஸ்இ
பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி
அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய
யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனி 11 மற்றும் 12ம் வகுப்பு
மாணவர்களுக்கும் வாரத்திற்கு 3 முறை கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும்
என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களை முற்றிலும் ஏமாற்றுகிறது - சிறப்பு கட்டுரை
மாயமாய் போன மறுசீராய்வு மனு வழக்கு:
கடந்த மாதம் பிப்ரவரி மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செ;யயதாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது
உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
தமிழகத்தின் கல்விப் பசிக்கு ஒரு தேசிய திறந்தநிலைப் பள்ளி.
பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திறந்தவெளிப் பள்ளியாக இது நடத்தப்படுகிறது.
எதுவும் படிக்காதவர்களும் பள்ளிப் படிப்பை இதில் படிக்கலாம். இந்தப்
படிப்புமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன.
மழலை பள்ளி குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் புதிய விதிமுறை அரசு இணையதளத்தில் வெளியிடு
`மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும்,
குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. `தமிழ்நாட்டில் பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆகிய
வகுப்புகள் படிக்கக்கூடிய குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் என்றும் அவர்கள்
இருக்கும் வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும்
பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்-80% கீழ் தேர்ச்சி பெற்ற தலைமையாசிரியர்கள் அழைப்பு
மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்விஅதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல்
நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய
மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு
கீழ் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்
இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மை மற்றும் மாவட்ட கல்வி
அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தை இயக்குனர்கள் கண்ணப்பன்,
அறிவொளி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நடத்துகின்றனர்.
ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத்
தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற
தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டு உள்ளது.அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்
பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை
அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு, அரசு
உதவிபெறும் பள்ளிகளில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற
பெயரில், கட்டுரைப் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல்
ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில்
மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டாகக் குறைக்க
வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.இந்தக்
கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதாவிடமும்
அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வே.நடராசன்,
பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கியுள்ள மனு விவரம்:-
அரசுப் பள்ளி மாணவர்கள் 31,000 பேருக்கு ஆங்கிலப் பயிற்சி
காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில்
படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி
வழங்கப்படுகிறது.
ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு2ம் கட்ட சேர்க்கை அறிவிப்பு
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத
இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 600 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
செயல்படுகின்றன. இவற்றில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தக் கல்வி
ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின.
இதையடுத்து, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ