Half Yearly Exam 2024
Latest Updates
திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்துநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட்
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து
வழக்குகளும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப முறை
சிதைந்து விட்டது. முதியோரிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள்
அதிகரித்துள்ளன.
கிரெடிட் கார்ட் கடனுக்கு புதிய விதிமுறை: 90 நாளில் செலுத்தாவிட்டால் வாராக்கடன்
கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத்
தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல்
அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விஜயகாந்தை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்:ஆக., 1ல் அவர் வருவாரா
சென்னையில் ஆசிரியர்கள் நடத்தும் பிரமாண்ட தொடர் முழக்க போராட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க உறுதி அளித்துள்ள நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தரப்பில் இருந்து மட்டும் இதுவரை பதில் வரவில்லை.
ஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
திண்டுக்கல்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கையில் முறைகேடு புகார்
யு.ஜி.சி. விதிகளின்படி தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமிக்கும் போக்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழில் பி.எச்டி. பட்டம் பெற்ற கோவையைச் சேர்ந்த பெண், கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கை தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பொறியியல் கலந்தாய்வு: 25 தனியார் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், 25 கல்லூரிகளில் இன்னும் ஒரு இடம்கூட நிரம்பவில்லை. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 100 அரசு பொது மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த முடிவு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
நாடுமுழுவதும் 100 அரசு பொது மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப் படும். ஒவ்வொரு மருத்துவக்கல் லூரியிலும் 100 எம்பிபிஎஸ் மாண வர்கள் சேர்க்கப்படுவார்கள். காரைக்காலில் ஜிப்மர் கிளை அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.
“வாட்ஸ்ஆப் ” பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள்முயற்சி ?
இணையதள சமத்துவம் குறித்து தொலைத்தொடர்பு அமைச்சக நிபுணர் குழு, மத்திய அரசுக்கு அளித்துள்ளஅறிக்கையில் பரிந்துரைத்துள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.நுகர்வோருக்கு இணையதள சேவை அளிப்பதில் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது வேகத்தின் அடிப்படையிலோ பாகுபாடு காட்டக் கூடாது என்று அந்தக் குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?
240 பக்க தகவல்கள் ஒரே நீள் வரிசையில் வரவேண்டியவை . excel to pdf
convert செய்யும் பொது பல பக்கமாக மடங்கி உள்ளது. உங்கள் மானவர்ன்
விவரங்கள் அடங்கிய அணைத்து பக்கங்களையும் வரிசைபடுத்தி print எடுக்கவும்.(
excel copy வெளியிடப்படவில்லை )
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்
2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக
மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று
அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்தது.
சாதி எனும் சகுணம் - Special Article
“ஒன்றே
குலம் ஒருவனே தேவன் -
திருமூலர்
“சாதிகள்
இல்லையடி பாப்பா” -
பாரதி
’வாழ்க்கை’ என்னும் காலக்கண்ணாடி
’சாதி’ என்ற கல்லடி பட்டு, ’சமூகம்’ எனும் பிம்பமாகி பல நூறு துண்டுகளாக சிதைந்து போகின்றது.
’சமத்துவம்’ என்னும் தெருவில் சாதி என்ற ‘வெறி நாய்கள்’ தன் உமிழ்நீரை ஒழுகவிட்டுக்
கொண்டே செல்கின்றன. இக்கொடிய எச்சில் பட்ட சில தெரு நாய்களும் தன் பங்குக்கு சமூகத்தைப்
பதம் பார்த்து விடுகின்றன. இதன் விளைவாக சமூகமே ’சாதிவெறி’ என்னும் சவக்குழிக்குள்
தள்ளப்படுகிறது.
அரசு, தனியார் துறைகளில் முடிவு எடுக்கும் எல்லா குழுக்களிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உயர்நிலைக் குழு பரிந்துரை
அரசு மற்றும் தனியார் துறையில் முடிவு
எடுக்கும் அனைத்து குழுக் களிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நிலைக் குழு பரிந்துரை
செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான
வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், பெண்களுக்காக தேசிய அளவில் ஒரு கொள்கையை
உருவாக்கவும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மகளிர்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்நிலைக் குழு
அமைக்கப்பட்டது.
பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு
நிகழ்
கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி)
துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க
விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது; எம்.மார்க் நெல்சன்
ஆசிரியர்
கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை
லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த
உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அரசு
கல்வியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில்
வழங்கப்படும் பி.எட். இடங்கள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சார்பில்
ஒப்படைக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, பல ஆண்டுகளாக
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வந்தது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து11ம் ஆண்டு நினைவு நாளில் கதறல்
கும்பகோணம்
பள்ளி தீ விபத்தின், 11ம் ஆண்டு நினைவு தினமான நேற்று, குழந்தைகள்
படத்தின் முன், மலர் வளையம் வைத்து, பெற்றோரும், உறவினர்களும் கதறி
அழுதனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காசிராமன் தெருவில் செயல்பட்டு
வந்த, ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த, 2004ம் ஆண்டு,
ஜூலை, 16ம் தேதி, கோர தீ விபத்து ஏற்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு 'இன்ஸ்பயர்' விருது
பள்ளி
மாணவர்களுக்கு 2015-16 க்கான மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு
விருதுக்கு (இன்ஸ்பையர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கபத்து பாடங்களில் சிறப்பு பயிற்சி
பிளஸ்
2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பொருளாதாரம், வணிகவியல்
உள்ளிட்ட பத்து பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறப்பு
பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கடந்த மே மாதம் வெளியான
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவர் மூலம் நோய் விழிப்புணர்வு
பள்ளி
மாணவர் உதவியுடன், தொற்று நோய் குறித்து, மக்கள் இடையே, விழிப்புணர்வு
ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தமிழகத்தில்
டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பள்ளி
மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த,
உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதற்காக, சுகாதார
உறுதிமொழி விண்ணப்பப் படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மென்ஸஸ்- ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம்!
மாதவிடாயும் ரத்தம் தான், தாய்பாலும் ரத்தம்
தான். இது பலருக்கு தெரிந்திருந்தும் தாய்ப்பாலை புனிதமாக கருதுவதும்
மாதவிடாயை கூறக்கூடாத அவச்சொல் போல கருதுவதும் நீண்ட காலமாக தொடர்கிறது.
அது, சமீபத்தில் தான் மெல்ல மெல்ல மாறி வருகிறது. அப்படி இருந்தும் இன்றும்
பலர் இந்த மன மாற்றத்திற்கு தயாராகவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.
பள்ளி பேருந்து கவிழ்ந்து 63 மாணவர்கள் படுகாயம்!
பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே, 93 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 63 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விரைவில் 500 ஆசிரியர்கள் நியமனம்; முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரியில் 500 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி பேசினார்.
மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
சித்த மருத்துவம் படிக்க ஆர்வம் இதுவரை 4,400 பேர் விண்ணப்பம்
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்தியமருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்கள் உள்ளன.
விருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்
கடந்த சில ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சி நாள் விழாக்களில் வழங்கி வந்த, சிறந்தபள்ளிக்கான விருது, நடப்பாண்டு இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பயிற்சி மருத்துவர்களுக்கு இனி ஷிப்டு வேலை!
பயிற்சி மருத்துவர்களுக்கு, 24 மணி நேர பணிமுறை தராமல், ஷிப்டு முறையை அமல்படுத்த வேண்டும் என, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு
தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
புதிய இணையதளம் தொடங்கியது கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை
கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக
வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது.