Half Yearly Exam 2024
Latest Updates
நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு புதிய உத்தரவு
நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளுக்கு, 250 ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது-ஆசிரியர்கள் அதிருப்தி -
பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினத்தை கொண்டாட, அரசுதமிழக பள்ளிகளில், காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று கல்வி வளர்ச்சி நாளை கொண்டாட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கப்படுமா?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்புக்கான சீருடை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு ஆய்வில் குழு ஆய்வு முறையை கைவிடக் கோரிக்கை
மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு ஆய்வில் குழு
ஆய்வு முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இணையதளம் முடங்கியது!
பிளஸ்
2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண்
சான்றிதழ் வினியோகம் மற்றும் 'ஆன் - லைன்' வழியில், வேலைவாய்ப்பக பதிவு
ஆகியவை, மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நேற்று துவங்கியது.
வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் அவசியம்: பிளஸ் 2 மாணவர்கள் கடும் அவதி
பிளஸ்
2 தேர்வு கல்வித் தகுதியை வேலைவாய்ப்புக்கு பதிய ஆதார் எண் கட்டாயம்
என்பதாலும், இணையதள வாயிலாக பதிவு செய்வதில் பிரச்னை ஏற்பட்டதாலும்
மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பிளஸ் 2: முதல் நாளில் 31 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு
பிளஸ்
2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் நாளில் 31
ஆயிரம் பேர் தங்களது கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்காகப்
பதிவு செய்தனர்.
சத்துணவு சமையலர் பணி நேர்முகத் தேர்வு: 172 இடங்களுக்கு 800 பேர் போட்டி
மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 172 சமையலர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 800 பேர் பங்கேற்றனர்.
முயன்றால் முடியும்: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன்
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ,
மாணவியருக்கு, கட்டணமில்லா தனி வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதையே லட்சியமாக
கொண்டு செயல்படுகிறார் ஒரு பெண்மணி. லட்சக்கணக்கில் கட்டணம் கட்டி, பிரபல
தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து, புரியாத பாடமாக கருதும் ஒவ்வொரு
பாடத்திற்கும், தனி வகுப்பு களுக்கு செல்லும் மாணவர்கள் ஒருபக்கம் என்றால்,
அரசு பள்ளிகளில் சேர்ந்து, கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில்,
படிக்கும் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இன்னொரு பக்கம்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. இதன்படி,
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்குப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் கேள்விக்குறியாகும் தமிழ் வழிக்கல்வி.
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், கேரளாவில் தமிழ் வழி கல்வி பயிலும் 203 மாணவ, மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளாவில் பள்ளி கல்விதுறை பல்வேறு குளறுபடிகளில் சிக்கி தவித்து வருகிறது.
தொன் போஸ்கோ பள்ளி: அதி நவீன அறிவியல் ஆய்வகம் திறப்பு
சென்னை எழும்பூரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் அதி நவீன அறிவியல் ஆய்வகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. தொன்
போஸ்கோ நிறுவனங்களின், நிறுவனரான புனித தொன் போஸ்கோவின் இருநூறாவது ஆண்டு
(1815-2015) பிறந்த நாள் விழா, உலகெங்கும் உள்ள தொன் போஸ்கோ கல்வி
நிறுவனங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
முரண்பாடான விதிகளால் தவிக்கும் தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகளுக்கான, முரண்பாடான நிலப்பரப்பு விதிமுறைகளை,
காலத்திற்கு ஏற்ற வகையில் தளர்த்தவும், 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு
விதிவிலக்கு வழங்கவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு
இன்ஜி.,
கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138
பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா
பல்கலை அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 1,41,618 இடங்கள் காலி
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிய இன்னும் 14 நாள்களே உள்ள
நிலையில், சேர்க்கை பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.அண்ணா
பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி
தொடங்கியது.
தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி
ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஐந்தாண்டு சட்டப் படிப்பு: ஜூலை 20 முதல் 23 வரை கலந்தாய்வு
இணைப்புக்
கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 20-ஆம் தேதி 23-ஆம் தேதி வரை நடத்தப்படும்
என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
திருக்குறளை தனி பாடமாக்க வழக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு கோர்ட் நோட்டீஸ்
திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை இயக்குநரை
ஐகோர்ட் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக ேசர்த்து, நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிட்டுள்ளது.
வார்டு எல்லையை காரணம் காட்டி கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்: ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பினால் நடவடிக்கை நிச்சயம்
குடியிருக்கும் வார்டுக்கு உட்பட்ட வங்கிக் கிளையில் தான் கல்விக் கடனுக்கு
விண்ணப்பிக்க முடியும் என்று தட்டிக் கழிக்கும் வங்கிகள் மீது ரிசர்வ்
வங்கிக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
விருதுநகர்
:“பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார்
எண் சமர்ப்பிக்க கட்டாயமில்லை,”என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு வேண்டும் - TAMS கோரிக்கை
ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை 232 ல் உள்ள குறைகளை களையுமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. - Click Here & Download
திடீரென விதிமுறைகளை மாற்றி பணியிட மாறுதல் கலந்தாய்வில் கிடுக்கிபிடி: ஆசிரியர் சங்கங்கள் கொந்தளிப்பு
பள்ளிக் கல்வித்துறை
மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு
ஆண்டும் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும். அதற்காக
கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று திமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு
நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது(அரசாணை 232, 13.7.15). அதில் 15 வகையான
வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கலந்தாய்வு எப்போது?
இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத
இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி
நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது
மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும்.