Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூலை 18ல் 'ஜாக்டோ' ஆயத்த கூட்டம்

         'ஜாக்டோ' தொடர் முழக்க போராட்டத்திற்கான மாநில ஆயத்த கூட்டம் ஜூலை 18ல் திண்டுக்கல்லில் நடக்கிறது.மத்திய அரசுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன. அரசு செவி சாய்க்காததால் 27 சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை (ஜாக்டோ) அமைத்துள்ளன.

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்

    பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
 

ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தால் அவினாசிலிங்கம் பல்கலையில் பரபரப்பு; காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

         கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைகழகம் மத்திய அரசின், பல்கலைகழக மானியக்குழு நிதியுதவி பெறும் நிலையில், ஒப்பந்தத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறையில் ஜூன் 30ம் தேதியுடன் (எம்ஓயு) புதுப்பிக்க வேண்டும்.ஆனால் பல்கலைகழக அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தத்தை புதுப்பிக்காதால், பல்கலைகழக பேராசிரியையைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக பல்கலைகழகம் இழுத்து மூடப்பட்டன. நேற்று பல்கலைகழகம் திறக்கப்பட்டது.
 

மாணவர்களை அடித்த தலைமையாசிரியரை மாற்றக் கோரி முற்றுகை

    பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் அடித்ததாகக் கூறி, அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை பெற்றோர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

 

உதவித் தொகை அறிவிப்பால் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு போட்டி!

புதுச்சேரிபி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்வித் உதவி தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களிடையே கடும் போட்டியோடு, பலத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. 

TET வழக்குகள் விசாரணை தேதியில் மாற்றம்!

          உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவேண்டிய டி.இ.டி வழக்குகள் 21.07.2015க்கு மாற்றி மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு


அதிகம் படித்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள்- ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவு

     இனி உங்கள் குழந்தையிடம் அதிகம் படித்தால் நல்ல வேலையுடன், வசதியாக வாழலாம் என்பதுடன் மற்றவர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்றும் சொல்லலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

      தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு படிப்பாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
 

யுஜிசி கல்வி உதவித்தொகை அறிவிப்பு

     சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான எம்.ஃபில், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.

புத்தாக்க அறிவியல் புதுமை விருது: அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை

        திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் கிராமத்தைச் சார்ந்த மாணவி இளையபாரதி, தேசிய அளவில் மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் விருது பெற்றிருக்கிறார். தையல் இயந்திரம் பயன்படுத்தும்போது வீணாகக்கூடிய இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாகவும் இயந்திர ஆற்றலை இயக்க ஆற்றலாகவும் மாற்றும் புராஜக்ட்தான் மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பு. 

12th Standard Chemistry Study Material

Chemistry
  1. Chemistry Exam Question Pattern | Mr. K. Manavalan - Tamil Medium
K. Manavalan,
PG Chemistry,
GHSS, Kanjangollai,
Cuddalore District.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் இன்று (13.07.2015)" விசாரணை

        புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் வழக்கு எண் -WP (M D)11987/2015-  இன்று(13.07.2015) மெட்ராஸ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 9 ஆவது உயர் நீதி மன்றத்தில் வருகிறது .

கலந்தாய்வு நடக்காததால் ஆசிரியர் காலியிடம் அதிகரிப்பு

       அரசு தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும் மே மாதத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கான கலந்தாய்வு நடக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஜூன் கல்வி ஆண்டு துவக்கத்தில் தேர்வு செய்த பள்ளிகளில் பணியில் சேர்வர்.


முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!

        வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அதன் நிலைப்பாடு மேகத்தினை போல, ஏன் மாறவில்லை என்றும் கேட்க இயலாது, மாறிய பிறகு ஏன் மாறினாய் என்றும் கேட்க இயலாது. வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் பாதுகாப்பிற்கு நீங்கள் தான் குடையை வைத்திருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை.

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு பணிநிரவலில் மாறுதல் வழங்க ஒப்பளிப்பு

       09.07.2015 அன்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சேர்மன் திரு.சோலை M ராஜா அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.

ஆர்.டி.ஐ பதில்களை இணையத்தில் வெளியிட மத்திய அரசு உத்தரவு

         தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

எஸ்எஸ்எல்சி மறுகூட்டலில் மூன்றாமிடம்: வேலூர் அரசு பள்ளி மாணவி சாதனை

    
     வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி எம்.ஸ்ருதி. இவர் அண்மை யில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 492 மதிப்பெண் பெற்றார்.
 
 
 
 

பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது

       ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள் படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால்

உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகவல்

பெற்றுக்கொள்ளலாம

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி

            எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. 
 

நாடு முழுவதும் 906 ஐ.பி.எஸ். பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்




       நாடு முழுவதும் 4,754 ஐ.பி.எஸ். பணியிடங்கள் உள்ளன. இதில் 3,848 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 906 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

மூவகை பயிற்சி உத்தரவுகளால் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைந்தால் கல்வி இயக்குனருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ள நிலை: கல்வித்துறை கவனிக்குமா?

      பள்ளிக் கல்வி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்களின் உத்தரவுகளை ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர்.அரசு ஆசிரியர்கள் 12 லட்சம் பேரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள். இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் நடத்துகின்றனர்.

பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் 'நோ'

        பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றதாக காட்டுவதற்காக, பிளஸ் 1 பாடம் நடத்தாத, தனியார் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில், கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சியை பள்ளியிலேயே பதிவு செய்யலாம்

      பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம்.

திசை மாறும் இளங்கன்றுகளுக்கு நற்பாதை காட்ட இனி ஒரு விதி செய்வோம்: நல்லதை விதைத்து நல்லதையே அறுவடை காணுவோம்

        அதிக சுதந்திரமும், அதிக கட்டுப்பாடும் மாணவர்களை தவறான வழிக்கு தூண்டும்; மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பியதுடன் பணி முடிந்தது என நினைக்காமல் கண்காணிப்பு செய்தால் நல்வழிக்கு இட்டுச்செல்ல முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

List of Fake Universities -U.G.C

பதவி உயர்வு பெற தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஆசிரியைக்கு தகுதியில்லையா? தமிழ் பட்டதாரிக்கு தலைமை ஆசிரியை பதவி உயர்வு மறுத்த உத்தரவு ரத்து

        இளங்கலை தமிழ் பட்டதாரிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக, பதவி உயர்வு வழங்க மறுத்த, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

'விடுமுறையும் கொடுக்காமல், பணியிலும் சேர்க்காதது தவறு'

          அனுமதியின்றி விடுமுறை எடுத்து, பி.எட்., பட்டம் பெற்ற பெண்ணை, சமையல்காரர் பணியில் சேர்க்க அனுமதிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா

         தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive