Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்

         வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.
 

குரூப் 4 தட்டச்சர் பணி: ஜூலை13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

       குரூப் 4 தொகுதியில் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 13-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா?

          வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன.
 

'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை: தேர்வு அறிவிப்பால் அதிர்ச்சி

        பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் இடம் பெற்றதால், அப்பகுதி நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. 
 

பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்கு குழு

           அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரம் காக்க அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குழந்தைகள் நலக்குழு ஒன்றை மாநில சுகாதாரத்துறை ஏற்படுத்துகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் அக்கறை காட்டாத நிலையில் பல்வேறு பாதிப்புகளில் இருந்து உடல்நலம் காக்க, 'பிளாக்' வாரியாக சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு பெண், ஆண் டாக்டர்கள், நர்ஸ், மருந்தாளுநர், ரத்த பரிசோதகர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு? பல்கலைகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை

      'ஆராய்ச்சி படிப்புகளில், விதிகளை மீறி செயல்படக்கூடாது' என, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு, வழிகாட்டி பேராசிரியரை நியமித்த பின், அவர் மூலமாகவே, மாணவர் ஆராய்ச்சி செய்து, ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பட்டம் பெற முடியும். 

அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்கள் !

          ஆங்கில மோகத்தால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறையும் வேளையில் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிய பெற்றோர்கள். மற்றும் சிறப்பான கற்றல் மூலம் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு உழைத்த ஆசிரியர்களை வாழ்த்துங்கள்

கடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

          தன் மீதான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பள்ளி ஆசிரியர் கடிதம் எழுதியதால் அவரது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வீரபாண்டியன் கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன். பள்ளியைக் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது பள்ளிச்செயலர் அதிசயமேரி புகார் கூறினார்.

ஆசிரியப் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு

         ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள்.

ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி விளக்கம்

          ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

          அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.


அறிவியல் விருது கண்காட்சி வரும் 15க்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு

           புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு 'அறிவியல் புத்தாக்க விருது' (இன்ஸ்பயர் அவார்டு) வழங்கப்படுகிறது.
 

'தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துங்கள்' ஆசிரியர்களிடம் இயக்குனர் உருக்கம்

         பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது

        10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? என்று கல்வியாளர்கள், அதிகாரிகளிடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கருத்து கேட்கிறது.

ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' துவங்கியது

         ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியருக்கான 'கவுன்சிலிங்' நேற்று துவங்கியது.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில்,ஏழை மாணவர்களை சேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்

           தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுத்தால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க, கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

          நான்கு தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.உதவி வனப்பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்புதல், தமிழக தொழிற்துறை உதவி புவியியலாளர்கள் பணியிடத் தேர்வு, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி மற்றும் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதார அதிகாரி தேர்வு ஆகிய நான்கு தேர்வுகளின் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.அதன் விவரங்களை, http:/www.tnpsc.gov.in/results.html என்ற இணையதள இணைப்பில் அறியலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 74 உயர் பதவிகளுக்கான குரூப்–1 தேர்வு நாளை அறிவிப்பு வெளியிடப்படுகிறது

          துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிக வரித்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு அறிவிப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

       காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

         தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் ஆகஸ்டில் நடக்கிறது.

புதிய பாட புத்தகத்தில் முன்னுரை, முகவுரை நீக்கம்

       பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களில் முன்னுரை, முகவுரை நீக்கி, புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன.
 

பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள்'அழுவதா, சிரிப்பதா என தெரியலையே' ஐ.ஏ.எஸ்.,சில் சாதித்த டிரைவர் மகள் கண்ணீர்!

        பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள், 'அழுவதா; சிரிப்பதா என்ற சூழலில் உள்ளேன்' என, கண்ணீருடன் தெரிவித்தார்.

அறிவியல் விருது கண்காட்சி

                புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112


அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112

     அனைத்து அவசர தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய நாடு தழுவிய அளவில் 112 என்ற ஒரே அவசர உதவி எண் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழும் காரணம் என்ன?


ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழும் காரணம் என்ன?

    உலகளாவிய வகையில் பிறப்பு விகிதத்தில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. எனினும், பெண்களைவிட ஆண்களுக்கு குறைந்த வயதில் மரணம் நேர்வது ஏன்? என்பது இதுவரை விடை தெரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த புதிருக்கான விடையை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.  

தமிழன்டா!!! 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்


தமிழன்டா!!! 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்

     வெறும் 10 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்ணையே நினைவு வைத்திருக்க முடியாமல் திணறும் தலைமுறை நம்முடையது. அப்படி இருக்கையில் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவில் வைத்திருக்கும் தமிழரின் அபாரமான நினைவுத்திறனை என்ன சொல்லிப் பாராட்டுவது?

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்

       ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம். 
 

வகுப்பில் ஆபாசப்படம்: பெற்றோருக்கு பொறுப்பும், விழிப்பும் தேவை: ராமதாஸ்

        கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின்  போது 7 மாணவிகள் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு? என்ற கவலை கலந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் என்னை வாட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.

         7.7.2015 காலை 11.00 மணிக்கு தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலத்துணைத் தலைவர் திரு.ஜோதிபாபு மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த விவாதித்தனர். இயக்குநர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
 

முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட - TNHSPGTA கோரிக்கை

          முதுகலை ஆசிரியர்களுக்கு    இடமாறுதல்  கலந்தாய்வை   விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive