TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 &
TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய
பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற
உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும்
வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!
Half Yearly Exam 2024
Latest Updates
TET Qualified Teachers Seniority Panel Preparation Regarding
2012 TET வழியில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு.... பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் தர எண் அடிப்படையில் தான் தயாரிக்க வேண்டும். RTI
மாத ஊதியம் வழங்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை உடனே வழங்க
வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
விடுத்துள்ளது.
எண்ம இந்தியா திட்டம்: அஞ்சலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கள ஆய்வு
எண்ம இந்தியா வாரத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்
மாணவர்கள்
நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும்
அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக
மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
ஏன் எம்.பி.ஏ., படிக்க வேண்டும்? யார் எம்.பி.ஏ. படிக்கலாம்?
நீங்கள் எந்த இளங்கலைப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும்-- எம்.பி.ஏ.
படிக்கலாம். சும்மா படிக்க வேண்டும்,மேலும் ஒரு பட்டம் பெற வேண்டும்
என்பதற்காக எம்.பி.ஏ . படிக்கக் கூடாது.
வன்முறை, போதைக்கு 'செக்' வைக்க அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி
மாணவர்களிடம்,
போதை பழக்கம் மற்றும் வன்முறை கலாசாரம் பரவுவதை தடுக்க, தமிழக அரசு
பள்ளிகளில், இந்த ஆண்டு முதல் நல்லொழுக்க கல்வி துவக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி: வழிமுறைகள் வெளியிடாததால் குழப்பம்
தமிழகத்தில், 12 'ஸ்மார்ட் சிட்டி'களை உருவாக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அது பற்றி தெளிவான வழிமுறைகள்
வெளியிடப்படாததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினர் குழப்பத்தில்
உள்ளனர். இது தொடர்பாக, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரி கள் கூறியதாவது:
உ.தொ.க.அலுவலர்கள் அலுவலக ஊழியர்களிடம் வேலை வாங்க அச்சப்படுகின்றனர்.....
உ.தொ.க.அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்த ஊழியரிடமும் வேலை வாங்க மிகவும் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
9ம் வகுப்பு, பிளஸ் 1 பாடங்களை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு
சேலம்:நடப்பு கல்வியாண்டின் துவக்கம் முதலே,
தேர்ச்சி விகிதத்துக்காக ஆசிரியர்கள் விரட்டப்படுவதால், ஒன்பதாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 1 பாடங்களை, இம்மாதத்துடன் நிறுத்திவிட்டு,
பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்த, பெரும்பாலான, அரசு பள்ளி தலைமை
ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 'அட்லஸ்' வழங்குவதில் சிக்கல்
மத்திய
அரசு அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச,
'அட்லஸ்' புத்தகம் வழங்குவதில், இரண்டாவது ஆண்டாக சிக்கல் நீடிக்கிறது.அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை
படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் என்ற, உலக வரைபட புத்தகம்,
அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். ஆனால்,
கடந்த கல்வியாண்டு முதல், அரசு சார்பில், அட்லஸ் புத்தகம் வழங்குவதை,
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
பி.இ., இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங் எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை தொடக்கம்
பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங், எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.டிப்ளமோ,
பி.எஸ்சி., படித்தவர்கள், இன்ஜினியரிங்கில் நேரடி இரண்டாம் ஆண்டில்
சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,
கல்லுாரியில் கடந்த ஜூன் 26ல்
தொடங்கியது.
இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 9 கடைசி நாள்
இரண்டு ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு
மருந்தியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 9-ஆம் தேதி கடைசி நாள் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள
செய்தி:
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 51 ஆயிரம் இடங்கள் காலி
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 51 ஆயிரத்து 685 இடங்கள்
காலியாக உள்ளன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி,
சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஏழை,
நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பள்ளிகள் அருகே ஹெல்மெட் சோதனை கூடாது
பள்ளிகளுக்கு அருகிலும், தெருக்களிலும்
ஹெல்மெட் சோதனை நடத்தக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டருகே இருக்கும் பள்ளியில் குழந்தைகளை விடுவதற்கு வருபவர் களும், அருகே
இருக்கும் தெருக்களில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும் சாதாரண மாக மோட்டார்
சைக்கிளை எடுத்துக்கொண்டு வருவார்கள். அந்த இடத்தில் போலீஸார் நின்று
கொண்டு சோதனை என்ற பெயரில் தங்களை சோதனை செய்வதாக கூறி கஷ்டப்படுத்து வதாக
பொதுமக்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் நாள் இன்ஜி..கவுன்சிலிங்; 3,564 இட ஒதிக்கீடு!
பொறியியல் படிப்பிற்கான 2-ம் நாள் பொதுப்பிரிவு
கலாந்தாய்வு நேற்று நடந்தது. ஒதுக்கப்பட்ட 3,564ல் இன்ஜினியரிங்
இடத்திற்கு, 4621 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாள்
வராதவர் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இரண்டாம் நாள் 21.96 சதவீதமாக
குறைந்தது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அதிகாரி கூறுகையில்:
TNPSC Maths Questions Study Material - Self Test 5 - Probability
TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!
TNPSC Maths Questions Study Material
- Probability - Self Test 5
10th & 12th Standard Monthly Syllabus
10th Standard & 12th Standard - Full Syllabus & Quarterly Exam Syllabus
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் : முதல்கட்டமாக 10 ரூபாய் தாளில் சோதனை
பிளாஸ்டிக் ரூபாய் தாள்களை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்க்கும் திட்டம்
விரைவில் தொடங்கும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் காந்தி
தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலில் 10 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு
சோதிக்கப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற மதிப்பிலான பிளாஸ்டிக்
தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.கொச்சி, மைசூர்,
ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய 5 நகரங்களில் பிளாஸ்டிக்ரூபாய்
தாள்கள் சோதிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது.
தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு
பெண் குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சுகன்யா
சம்ரிதி கணக்குகள் பற்றிய விவரத்தை அளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டுள்ளது.
7th Central Pay Commission ல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.
மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து
வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர்.
(Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின்
இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள்
பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது.
வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு
சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன்
பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும்
திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய வளையம் கண்டுபிடிப்பு
சனிக்கோளின்
வெளிப்புறத்தில் மிகப்பெரிய வளையம் இருப்பதை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர், இதுவே முன் எப்போதும் கண்டிராத நமது சூரிய
குடும்பத்தில் உள்ள கோள்களின் மிகப்பெரிய வளையம் ஆகும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி
அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த
பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில்
உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப்
பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக
பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு
ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின்
தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த
ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்
வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு
காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் கட்டாய நீதிபோதனை வகுப்பு
இருந்தது. இந்த வகுப்பில் மாணவர்களுக்கு அரிய பல விஷயங்களையும்,
நல்லொழுக்கம் தொடர்பான நீதிக் கதைகளும் பாடமாக நடத்தப்பட்டு வந்தன.
இதுபோன்ற நீதிபோதனை வகுப்புகள் ஒரு மாணவரை நல்ல பழக்க வழக்கங்களுக்கு
இழுத்துச் சென்றன. காலப்போக்கில் இந்தக் கல்வித் திட்டம் அப்படியே
கைவிடப்பட்டது.