குழந்தைகள்
தினத்தையொட்டி, இந்திய அஞ்சல் துறை சார்பில் "மழையில் ஒருநாள்' என்ற
தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில்
வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி
இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான (2015-16) பி.எட்., (இளங்கலை
கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல்
வினியோகிக்கப்படுகின்றன.இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில்
நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இரண்டு
ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட
பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.
தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி
பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர், தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த வளர்ச்சி
மற்றும் பணிகளுக்கு மவுசு அதிகரித்து வருவதால், எந்த பள்ளியிலும் கம்ப்யூட்டர் சார்ந்த குரூப்களை கைவிடக்கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்.
உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய
கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க,
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல
வகை பாடத்திட்டங்கள் உள்ளன.
எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு முடிந்தது; காலியிடம் இல்லை
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, முதற்கட்ட கலந்தாய்வு
நேற்றுடன் முடிந்தது. 2,839 இடங்களும் நிரம்பின; ஒரு இடம் கூட காலியில்லை.
கடந்த ஆண்டில், பிளஸ் 2 முடித்த, 544 பழைய மாணவர்களுக்கும், இடம்
கிடைத்துள்ளது.
ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து: தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குளறுபடியை தொடர்ந்து, இன்ஜி.,
படிப்புக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதிலும், திடீர் குளறுபடி
ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வி நிறுவனங்களின் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில்; சான்றிதழ் சரிபார்ப்பு
அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்
காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளுக்கான, ஏப்.2015-ல், நடந்த அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகளுக் கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில் மாணவர் சேர்க்கை
திருப்பதி,
பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4
துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை நடத்தப்பட உள்ளது என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி
கூறினார்.
அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
உள்கட்டமைப்பு
மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின்
அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் இந்த
ஆண்டும் தவறிவிட்டன.
தமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்களும் நிரம்பின
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி
அதிகாரிகள் (ஏ.இ.ஓ.) ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
பள்ளிகளை நிர்வாகம் செய் கிறார்கள்.
6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை
யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித்தேர்வு ஜூன்
28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.இத்தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு சிபிஎஸ்இ இணையதளத்தில்
(www.cbsenet.nic.in) பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம்பேர்
பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும்
மதுரையில்மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்.
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும்
குறைந்துவருவதால், தனியார் கல்வி நிறுவனங்கள் பல மூடுவிழா நடத்த தயாராகி
வருகின்றன.தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனம், 40 அரசு
உதவி பெறும் பயிற்சி நிறுவனம், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி
நிறுவனம்என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு
வருகின்றன. அரசு ஆரம்ப பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்பயிற்சி நிறுவனத்தில்
டிப்ளமோ படித்தவர்களை நியமனம் செய்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு
வரை இவர்கள் பாடம் நடத்த நியமிக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர்
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல்
காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார்.
உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி
தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும்
வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாணவர்களுக்கு யோகா தொடர்பான பயிற்சிகளை 10
முதல் 20 நிமிடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 5ம்
வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு 10 நிமிடங்கள் யோகா
பயிற்சியும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலை இறைவணக்கத்தை தொடர்ந்து 5
நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் கற்றுத்தரவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
84 எம்.பி.பி.எஸ்., இடமே உள்ளது இன்றுடன் முடிகிறது கலந்தாய்வு
மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன்
முடிகிறது. அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டுமே காலியாக
உள்ளன.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு
19ம் தேதி துவங்கி சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
கோ.ராமநாதபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆதிமாரிமருது மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய
இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துமருத்துவக்கல்லூரியில்
எம்.பி.பி.எஸ் தேர்வாகியுள்ளார்கள்
25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு
மத்திய அரசு போதுமான
நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி
பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு
முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி
உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில்
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டது.
சிகரம் தொட்ட "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி
''பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்று விடாதே; உன்னுடைய உன்னத பெயர்
உன்னிலிருந்து உருவாக வேண்டும்,'' என்பார் ஓர் அறிஞர்.பெற்றோர் இந்த
குழந்தைக்கு இட்ட பெயர் 'சிவஞானம்'. மனிதராக வளர்ந்து தனக்குள்ளிலிருந்து
பிரசவித்துக் கொண்ட பெயர் 'சிலம்புச் செல்வர்'.
சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் பொன்னுசாமி, சிவகாமியம்மன்
தம்பதியருக்கு 1906 ஜூன் 26ல் பிறந்தவர் தான் ம.பொ.சி.,மயிலாப்பூர்
பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே அது.