காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி
மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
'இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான
கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என சென்னை உயர்
நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான
கவுன்சிலிங்கில் இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே
அனுமதிக்க வேண்டும்; முந்தைய ஆண்டுகளில் முடித்தவர்களை அனுமதிக்கக் கூடாது'
எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்டோர் மனுக்கள்
தாக்கல் செய்தனர்.
கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்'
அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக
அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி
உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால்
அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என,
கூறப்பட்டுள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்
முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான்.
படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது. இதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய ஜூலை 3 கடைசித்
தேதியாகும். நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க
ஜூலை 4 கடைசித் தேதியாகும்.
ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு
பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன.
தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.
தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் |
தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.
பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள்
பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு
விரைவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம்.?
கடந்த மாதம் அரசுபபள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் பணிடங்கள் பெரும்பாலும் நிரப்ப படாமல் காலியாக உள்ளன என்று முதுகலை ஆசிரியர் சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் 2 மாதத்திற்குள் தேர்வுப்பணியை செய்ய வேண்டும என்று உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் முதுகலை ஆசிரியருக்கான தேர்வு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
தகவல் :
பி.இராஜலிங்கம் புளியங்குடி
பி.இராஜலிங்கம் புளியங்குடி
தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு
யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற உயர்மட்ட பட்டங்களை பெறும் வகையில் படிப்புகளை வழங்குவது குறித்து, யு.ஜி.சி., தீவிர பரிசீலனையில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், 10 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர்.
பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்.
பார்வைக்குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் |
பாதிக்கப்பட்டோர், சிவில் சர்வீஸ் முதல் நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, துணைக்கு ஆள்வைத்துக் கொள்ளலாம்' என, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கை:சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர், 40 சதவீதம் வரை பார்வைக் குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
2 ஆண்டு பி.எட்., படிப்பு அமல்புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி.
தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு
பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டப்படி, ஜூலை முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியராக, பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக, எம்.எட்., படிக்க வேண்டும்.
ஆதார் அட்டை கேட்டு அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்யும் கருவூலம்
அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல்
பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது
அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை வளர்க்க புது முயற்சி: அஞ்சல் சேமிப்பு முன்னோடித் திட்டம் தொடக்கம்
சேலம்
மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு உயர்நிலைப்
பள்ளியில், திருக்குறள் மனப்பாடம் ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்பு முன்னோடித்
திட்டம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
அரசு காப்பீட்டு திட்டங்கள், ஒரு பார்வை
அனைத்து மக்களுக்கும் பரவலாக காப்பீடு சென்று அடைய வேண்டும் எனும்
நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு காப்பீட்டு திட்டங்களை, பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல்
தனியார் வங்கிகளும் ஆர்வத்துடன் முன்வைத்து உறுப்பினர்களை சேர்த்து
வருகின்றன. இந்த திட்டங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள் பற்றி ஒரு
பார்வை...
இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!
இடைநிலை
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று
வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
அரசின்
நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப்
பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை
நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு
கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும்
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.