Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

      அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு

         கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி

         இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
 

வேளாண் பல்கலை 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

         கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. கோவை, வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., விவசாயம் உள்ளிட்ட, 13 வகையான பட்டப் படிப்புகளில், 2,340 இடங்கள் உள்ளன.இவற்றுக்கு, 29,942 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.
 

பயிற்சி செலவீனங்கள் குறித்து - விவரம் கோருதல சார்பு

        தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் 2015-2016 ஆண்டிற்கான வட்டார மற்றும் குருவள மையப்பயிற்சி - PAB Unit Cost Break Up - பயிற்சி செலவீனங்கள் குறித்து முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பிட கோருதல் சார்பு

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

  • பி.எட் படிப்புக்காலம் ஓராண்டாக இருந்தபோது கற்பித்தல் பயிற்சி 40நாட்களாக இருந்தது
  • இனி 20வாரங்களாக இருக்கும்.முதல் ஆண்டு 6வாரம்,இரண்டாம் ஆண்டு 14வாரம் கற்பித்தல் பயிற்சி இருக்கும்
  • இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்

போட்டித்தேர்வு புத்தகங்கள் குறித்த Soma Sundaram அவர்களின் அனுபவம் .

      பொது அறிவுப்பகுதிக்கு 6 முதல் 10 வரை சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில மேல்நிலை பாடப்புத்தகங்கள் மற்றும் இதோடு அரிஹந்த் ஜெனரல் நாலெட்ஜ் -2015 (eng ).இவையே போதும் .இதிலிருந்து 40% வரை கேள்விகள் வந்து விடும் .அதாவது பொது அறிவு பகுதிக்கு . எப்படி படிக்க வேண்டும் எனில் 6,7,8,9,10,11,12 ம் வகுப்பு வரிசையாக பாடங்களை படியுங்கள் .எடுத்த உடன் 10 க்கோ 12 கோ போகாதீர்கள் .

CPS திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித் துறை சலுகை

   அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து பதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


TAMILNADU ENGINEERING COUNSELLING SCHEDULE

CLICK FOR ACADEMIC COUNSELLING SCHEDULE.....

                      DIFFERENTLY ABLED COUNSELLING SCHEDULE......
                      VOCATIONAL COUNSELLING SCHEDULE.....

ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்'

       'பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.


Admission to M.Phil at Alagappa University-

   Applications are invited for admission to the following M.Phil.Programmes & P.G.Diploma programme offered in the University Departments for the academic year 2015-16 


பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 31.05.2009 வரை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை

       காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் எச்சரித்தார்.


பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

        பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளி மாணவியரை கேலி செய்த சம்பவம்:5 மாணவர்கள், பொதுமக்கள் 60 பேர் மீது வழக்கு

     திருச்செங்கோடு அருகே காளிப்பட்டியில், பள்ளிக்குச் சென்ற மாணவியரை, மாணவர்கள் ஐந்து பேர் வெள்ளிக்கிழமை கேலி செய்துள்ளனர். இதனையடுத்து, கேலி செய்த ஐந்து மாணவர்கள் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

       கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு  தெரிவித்தார்.


ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

    பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பொதுமக்கள் தங்கமாக வாங்குவதை தவிர்க்க புதிய திட்டம்: தங்க பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு

     பொதுமக்களின் தங்க தாகத்திற்கு தடை போட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியாக, தங்க பத்திரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து, முதிர்ச்சியின் போது, தங்கத்திற்கு ஈடாக பணம் பெற வசதி செய்யப்பட உள்ளது.


வேளாண் பல்கலை., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

    தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, ௨௦௧௫ - ௧௬ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்.சி.,(விவசாயம்) உள்ளிட்ட, 13வகையான பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மே, 15ம் தேதி முதல், இம்மாதம், 13ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.


'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்பினால் தண்டனை? 'பேஸ்புக்' நிறுவனத்தை நாடியது தமிழக சைபர் கிரைம்

     அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


BE - 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்

   இன்ஜினியரிங் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம், நேற்று வெளியிட்டது. இதில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து அசத்திய, அரசு பள்ளி மாணவர்

கல்வி உதவித்தொகை நிலுவைதிணறும் இன்ஜி., கல்லூரிகள்

       இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை வழங்க தாமதம் ஆவதால், தனியார் கல்லுாரிகள் திணறி வருகின்றன.தமிழகம் முழுவதும் 573 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லுாரியிலும் 30 சதவீதம் என்ற அளவில், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


வாட்ஸ் அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான உடற்கல்வி ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

     ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 18–ந் தேதி காலை நடந்த கணிதத்தேர்வின் போது தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தங்களது மொபைல் போன் மூலம் கணித வினாத்தாளை புகைப்படம் எடுத்து அதனை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பினர்.


தியானம் என்னவெல்லாம் செய்யும்? - ஆராய்ச்சிகள் கூறும் உண்மை


  
  தியானம் ஆன்மிக வளர்ச்சிக்கு மிக சக்திவாய்ந்த ஒரு கருவி. உடல் மன கட்டுப்பாடுகளிலிருந்து ஒருவரை விடுவிக்கும் கருவியாகவும் இது இருக்கும். உள்நிலை அறிவியலை பயில்பவர்கள், அதனைச் சொல்லித் தருபவர்கள் பல்வேறு உடல், மன சம்பந்தமான பலன்களை அடைவதாகச் சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் பெருகி வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

  சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

  இரண்டு முறை குருப் 2 தேர்ச்சி பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இந்த பதிவை இடுகிறேன் .
 
1.முதலில் ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் .டி.என் .பி.எஸ் .சி தேர்வுக்கு 3 மாதம் படிப்பது,வங்கி தேர்வுக்கு மூன்று மாதம் படிப்பது ,பின் SSC க்கு படிப்பது இவற்றை தவிருங்கள் .ஏனெனில் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அணுகு முறையை கொண்டது .ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் போக்கு வேண்டாம் .அது வெற்றி காலத்தை அதிகப்படுத்தும் .வயதும் வீணாகும் .
 

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம் : சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை இனி அனைத்தும் ஆன்லைன்

       டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும் ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 

பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

       பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2015-16 மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பின்னர் 28-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 29-இல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது


பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'

     பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பிளஸ் 1 வகுப்புகள், 15ம் தேதி துவங்கின. புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், அனைத்து பள்ளிகளிலும், வரும், 30ம் தேதி வரை, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.பத்தாம் வகுப்பில் படித்த பாடங்களை மாணவர்கள், மேல்நிலையில், பிரித்து தனித்தனியாக படிக்க வேண்டும்.
 

பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

     பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.காலை 10 மணியளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் பார்வைக்காக www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.


குரூப் - 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 தேர்வு எழுத 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு:ஜூலை 26ல் குரூப் - 2 நேர்முகத் தேர்வுக்குட்பட்ட பதவிக்கான 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
 

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

    சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

     சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? - எதிர்பார்ப்பு

      2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு-தினகரன்வெளியீடு

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive