விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி
தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல்
12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆன்-லைன் முறையில் சம்பளம் விரைந்து பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு.
ஆன்-லைன்' முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், உடனடியாக விடுபட்டுள்ள ஆசிரியர்களின் விபரங்களை பதிவு
செய்ய தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்: கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள
தனியார் பள்ளிகளை கட்டப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஓராண்டு கால அவகாசம்
அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகளை
கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு அளித்த
பரிந்துரையை ஏற்று, ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம்
அனுமதி அளித்துள்ளது.
மருத்துவக் கலந்தாய்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகளை நடத்தினாலும், மாணவர்களுக்கு
அனுமதி கடிதம் தர வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. கடந்த
ஆண்டு பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்து மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?
தமிழக
அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன் ஆதார்
எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்று கருவூலத் துறை அறிவுறுத்தியது.தமிழக
அரசு ஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாத காரணத்தால், கருவூலத்
துறையின் இந்த அறிவிப்பு அவர்களை பதற்றம் அடையச் செய்துள்ளது. இதனால், இந்த
மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்றும் ஊழியர்கள்
அச்சம் தெரிவிக்கின்றனர்.
AIPMT-2015 நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 12-ல் வெளியிடுவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு
அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர சிபிஎஸ்இ AIPMT-2015 நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அந்த வகையில், இந்தாண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது: அன்புமணி
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில்
தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக எம்.பி. அன்புமணி
ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிக கட்டண விவகாரம் தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய
சட்டம் இயற்ற உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
தெரிவித்துள்ளத
பெண் அதிகாரி டார்ச்சர் ஆசிரியை தற்கொலை முயற்சி
கோவை மாவட்டம் அன்னூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பு
குழந்தைகளுக்கான வளமையம், அன்னூர் தெற்கு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு
வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயின்று
வருகின்றனர். 4 ஆசிரியர்கள், 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மையத்தின் மேற்பார்வையாளராக சுப்புலட்சுமி பணியாற்றி வருகிறார். பணியில்
முறைகேடாக நடப்பதாக கூறி சுப்புலட்சுமி மீது மாவட்ட நிர்வாகத்துக்கு
அண்மையில் புகார் அனுப்பப்பட்டது.
போதை டிரைவரால் வேன் கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் 25 பேர் காயம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பிநகரில் தனியார் மெட்ரிக் பள்ளி
உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிங்கிகுளம் மற்றும் மலையடி
கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 குழந்தைகள் தனியாருக்கு சொந்தமான வேனில்
வீட்டுக்கு புறப்பட்டனர். வேனை பாணான்குளத்தைச் சேர்ந்த டிரைவர் சிவா(29)
ஓட்டினார். வேன் நாங்குநேரி டோல்கேட்டை ஒட்டியுள்ள வரமங்கைபுரம் ரோட்டில்
சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிலிருந்த குழந்தைகள் அலறினர்.
பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை
தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள்
முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம்
தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது
குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
சாம்சங் மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? : உஷார்....வருது ஆபத்து
சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்கள், 600 மில்லியனுக்கும் அதிகமான
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி
வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட
சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங்
மொபைலில், குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால், அவர்களின் மொபைலை யார்
வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம்.
குழந்தை ஜனனம் ஆன கிழமைக்கான பலாபலன்கள்
ஞாயிற்றுக் கிழமை
ஒருவர்,
ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, செல்வச் செழிப்பு/விருத்தியுடன்,
செல்வாக்கு விருத்தியும் பெறுவர். மேலும் அவர் தமது நடுப்பகுதி வாழ்க்கை,
மத்திய வயதில் (40-45வயதிற்கு மேல்)மிகுந்த பேரும் புகழுடன் சந்தோஷகரமான
வாழ்க்கை அடையப் பெற்றிருப்பர்.
மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நெல்லை
மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்
மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்-மீறினால் லைசென்ஸ் பறிமுதல்: தமிழக அரசு எச்சரிக்கை
அடுத்த
மாதம் 1-ம் தேதியில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்
அணியாவிட்டால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள்
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் 2015-16ம் ஆண்டிற்கான மருத்துவக்கல்வி பட்டப்படிப்பு மற்றும் பல் மருத்துவக்கல்வி பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்குகளில் நடைபெறவுள்ளது.
பி.ஆர்க். சேர்க்கை; இன்று முதல் இணையவழி பதிவு தொடக்கம்: விண்ணப்பிக்க ஜூன் 27 கடைசி
ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இந்தாண்டு
விண்ணப்பிக்க இணையவழி மூலம் பதிவு செய்யும் முறையை அண்ணா பல்கலைக்கழகம்
அறிமுகம் செய்துள்ளது. இதனால் மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகம்
இருக்காது. வியாழக்கிழமை (ஜூன் 18) முதல் இணையம் மூலம் மாணவர்கள் பதிவு
செய்யலாம்
டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்
அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர
வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும் உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்'
அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில்,
பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.
மெட்ரிக்., பள்ளிகளுக்கு புதிய சட்டம் கொண்டு வருவோம் : நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு விளக்கம்
அனைத்து
தனியார் பள்ளிகளுக்கும், ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர் மட்டக்
குழுவை அமைப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, சென்னை
உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு : நாளை கலந்தாய்வு-கலந்தாய்வு தேதி, 'கட் - ஆப்' விவரம்
எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு நாளை முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது;
4,800 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம்
முன் அரங்கிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கென
அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால்
செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் ..
கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் செய்து கொள்ளவும்.
லிங்க் : http://goo.gl/8K4a3O
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை
பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன்
கூறியாதவது: 16.06.2015 அன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து
கலந்தாய்வு குறித்து கோரிக்கையின் போது, பொது மாறுதல் கலந்தாய்விற்கான
அரசாணை இடைத்தேர்தல் முடிந்தபின் வெளியாகும் எனவும், அதன் பிறகு மாறுதல்
கலந்தாய்விற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாகவும்,
BRC Training list of 2015-16
��Strengthening Reading Writing skills in Tamil-2 days
��Maths usage of SLM kit box and solving Mental Maths- 3 days
��Physical Education Activities linked with CCE -1day
��Discussion on children's achievement- 2 days (Both primary and Upper primary)
��Remedial Activities for late bloomers danguages & Maths)-1day