Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விக் கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்!

         மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில், வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன் வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும் அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருந்தது.

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

        தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

காஸ் மானியத்தில் இணைய ஜூன் 30 கடைசி: தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் 'வெயிட்டிங்'

       சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் சேர இந்த மாதம் 30ம் தேதி தான் கடைசி நாள். தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணையவில்லை. பெரம்பலுார் திருச்சி தர்மபுரி விருதுநகர் சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர் இணைந்துள்ளனர்.

மேகியை தொடந்து 500 பொருட்களுக்கு அனுமதி மறுப்பு

      மேகி நூடுல்ஸ் சர்ச்சை தொடங்குவதற்கு முன்பாகவே, ஏப்ரல் மாதம் வரை சுமார் 500 உணவுப்பொருட்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.
 

மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க உத்தரவு

     மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாகப் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு டேஷ் அகாடமி எழுப்பவைத்த 'பள்ளிக் கல்வி' கேள்விகள் மு.அமுதா

        டேஷ் அகாடமி... ஒரு பிரபலமாகக் கருதப்படுபவர் நடத்தும் பள்ளி. பல வருடங்களுக்கு முன்பு, என் மகனுக்காக அந்தப் பள்ளியில் விசாரிக்கச் சென்றபோது, மிகவும் சிறிய எழுத்தில், "இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று போடப்பட்டிருந்தது, அங்கீகாரம் எப்போது கிடைக்கும் என்ற என் கேள்விக்கு "விரைவில்" என்று பதில் வந்தது. பிள்ளையின் படிப்பு விஷயத்தில் இதுபோன்ற பகீரத முயற்சிகளில் ஈடுபடும், அதுவும் அங்கீகாரமே இல்லாமல் செயல்படும் பள்ளியில் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

கண் தானத்துக்கு '104'ஐ அழைத்தால் போதும்:டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்

       தொலைபேசி வழியாக மருத் துவ ஆலோசனை பெறும் '104' தொலைபேசி எண்ணை கண் தானத்திற்கும் அழைக்கலாம்; அழைத்த சிறிது நேரத்தில் கண் தானம் பெற டாக்டர்கள் குழு வீடு தேடி வரும்.தமிழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அரசு கண் மருத்துவமனைகளிலும் கண் தான வங்கிகளும் படிவங்களை பதிவு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் அதுபற்றி யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் கண் தானம் பற்றி மறந்து விடுகின்றனர்.

‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்டும்’ தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல் முடிவுகள் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு

       தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு செய்முறை வகுப்புக்கு பதிவுப்பணி

         பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
 

பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை அணுகலாம்

     தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
 

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

     தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

         அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இன்று எம்.பி.பி.எஸ்., 'ரேண்டம்' எண் வெளியீடு

       தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரி உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

        அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்:முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

      சென்னைப் பல்கலைக்கழக துறைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

மாணவர்கள் கண்டுபிடித்த 'யுபிஎஸ்' மின்கலம்:மின்தடையிலும் வேலை செய்யும்

     கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது என மனம் பதறும் வேளையில் எளிய விலைகுறைந்த யு.பி.எஸ்., கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்.
இந்த யு.பி.எஸ்., சாதனத்தின் சிறப்பே நடுத்தர மற்றும் ஏழைகளும் வாங்கும் விலையில் இருப்பது தான்.இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜேந்திரபிரசாத் வழிகாட்டுதலில் உதவி பேராசிரியர் ஞானசேகரன் உதவியுடன் மாணவர்கள் சல்மான் பார்சி, விக்னேஷ் குமார், விஜய் ஆனந்த், ராஜேஷ்குமார் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.

      ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும் வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

CCE முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

         தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

எல்ஐசியில் 679 வளர்ச்சி அதிகாரி பணி.

        இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில்  காலியாக உள்ள 679 Apprentice Development Officers (ADOs) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள்.

        சென்னை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை  தொழிலாளர் மீட்பு குழு ஆகியோர் நடத்திய ஆய்வில், 2,350 குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் என, கண்டறியப்பட்டுள்ளனர். 

எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை வெளியாகிறது: தரவரிசைப் பட்டியல் தாமதம்

      தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல இந்த வருடமும் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.
 

கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது: தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி

     கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் கவிதாமணி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொது தேர்வை எழுதினார்.

7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

        அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள, 7,000 நர்ஸ்கள் இடத்திற்கு, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு, வரும் 28ம் தேதி நடக்கிறது.
 

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

         தொடக்கக் கல்வி - உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 31.12.2009 முடிய பணி மாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு - திருத்தம் அளித்தல் - சார்பான இயக்குனரின் உத்தரவு

அவரவர் வழக்குகள் பட்டியலை வழக்கறிஞர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நவீன சேவைவிரைவில் அறிமுகம்

    வழக்கறிஞர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் பட்டி யலை எஸ்எம்எஸ்மூலம் அனுப்பும் நவீன வசதி தமிழகம் முழுவ தும் விரைவில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதற்கான பணியை தேசிய தகவல் மையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது .

Lab Assistant Exam நாங்கள் நடத்தவில்லை - TNPSC அறிக்கை

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

         பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

FACEBOOK : பறிபோகும் ப்ரைவஸி பாதுகாப்பது எப்படி?

          இன்று காலை பல நண்பர்களது ஃபேஸ்புக் கணக்குகளில் இருந்து ஒரு ஆபாச வீடியோ ஒன்று இன்பாக்ஸில் வந்தது. என்ன என்று பார்ப்பதற்குள் என் கணக்கிலிருந்து பலருக்கு அந்த செய்தி பரவிவிட்டது. பின்னர்தான் தெரிந்தது அது வைரஸ் செய்தி எனும் ஸ்பாம். இதேபோல் பலருக்கும் உண்டான அனுபவம் ஸ்டேட்டஸில் வெளிப்பட்டது. 
 

தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

         நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என, இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்)
அதிகாரிகள் விளக்கமளித்தனர்.  
 

பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

    பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive