மதுரையில் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் சிறப்பு ஆசிரியர்கள்
ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர்களுக்கு கடும் தண்டனை:ஒரே நாளில் 80 பேர் டி.சி. பெற்றனர்
திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர்
நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளரின் காரில் மாணவியின் பெயர்
கிறுக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் 150 மாணவ, மாணவிகளை
முழங்காலிட்டு பலமணி நேரம் நிற்கவைத்தனர். இதை கண்டித்து 80 மாணவ, மாணவிகள்
மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியேறினர்.
ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க அழைப்பு
குன்னூரில் செயல்பட்டுவரும் அரசினர்
தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக
பொருத்துநர், கடைசல், கம்மியர், மின்சாரப் பணியாளர் ஆகிய 2 ஆண்டு
படிப்புகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக கம்பியாள்,
தச்சர், பற்ற வைப்பவர் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றன.
உண்டு உறைவிடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் இரண்டு உண்டு உறை விடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்
என்று மாநகராட்சி அறிவித் துள்ளது.சென்னையில் உண்டு உறைவிடப் பள்ளிகள்
தொடங்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி
உண்டு உறைவிடப் பள்ளிகளாக மேம்படுத்த நான்கு மாநகராட்சிப் பள்ளிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டன.
'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்'
பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய, தமிழ்நாடு
அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம்
ராமநாதபுரம்:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி
இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு 'ரோபோ' பயிற்சி
சென்னை:பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு 'ரோபோ' இயக்கம் குறித்து
அண்ணா பல்கலையில் வரும் 13- 14ம் தேதிகளில் இரண்டு நாட்கள் பயிற்சி
நடக்கிறது.
மொபைலில் பேசும்போது இணைப்பு துண்டித்தால் கூடுதல் ‘டாக்டைம்’: டிராய் திட்டம்
மொபைலில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால்,
அந்தஅழைப்புக்கான கட்டணத்தை வாடிக்கையாளர் கணக்கிலேயே திரும்ப சேர்க்க
டிராய் திட்டமிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு
தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன்
3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில
வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க
வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், மெட்ரிக். பள்ளிகளில் பெறப்படும்
கூடுதல் கட்டணத்தில் இருந்து ஏழைப் பெற்றோர்களை பாதுகாக்கும் வகையிலும்
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை 2012-13-ஆம் கல்வி ஆண்டில் தமிழக
அரசு அறிமுகப்படுத்தியது.
கணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால்,
அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்
நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என
சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை?
மத்திய இடைநிலை கல்வி வாரியமான
சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வி - ஐ.சி.எஸ்.இ.,
பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், இலவச மாணவர் சேர்க்கையை
கட்டாயம் நடத்த வேண்டுமென்று, தமிழக திட்டக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 615 சங்கங்கள் நீக்கம்:பதிவுத்துறை நடவடிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை
தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து
நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
CRC Leave details.
Upper primary.
* 13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/08/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும். Primary Level.
* 13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 03/01/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 02/07/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 28/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 27/08/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்
* 13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/08/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும். Primary Level.
* 13/12/14 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 12/06/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 03/01/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 02/07/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 28/02/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 27/08/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்.
* 14/03/15 சி.ஆர்.சி க்கு சென்றவர்கள் 13/09/15 க்குள் விடுப்பு எடுக்கவேண்டும்
தேசிய வேதியியல் ஆய்வகத்தில் உதவியாளர் & தட்டச்சர் பணி.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வேதியியல் ஆய்வு கூடத்தில்
National Chemical Laboratory) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேரற்கப்படுகின்றன.
பெற்றோர் - ஆசிரியர் கழகம் பெயரில் வசூல் வேட்டை
அரசு பள்ளிகளில், பராமரிப்பு தொகை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி
என்ற பெயரில், கட்டாய வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆனால், 'நன்கொடை
வசூலிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.புதிய கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளியைப் பொறுத்தவரை,
ஆங்கில வழி வகுப்புக்கு மட்டும் சிறிய அளவில், 500 ரூபாய்க்குள் பயிற்சி
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், எந்த வகுப்புக்கு எவ்வளவு கட்டணம்
என்று பள்ளிகளில் அறிவிக்கவில்லை. தமிழ்வழி வகுப்புக்கு எந்தக் கட்டணமும்
கிடையாது.
எம்.பி.ஏ,எம்.சி.ஏ விண்ணப்பம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும்
கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப
படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
TET: ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.
புதுச்சேரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியீடு.
பாலித்தீன் தீமையை உணர்த்த தருமபுரியில் ரூ.12 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு துணிப்பை விநியோகம்
தருமபுரி மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துணிப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநில சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட கல்வித் துறையின் தேசிய பசுமைப்படை சார்பில் பாலித்தீன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் பணி
இந்திய கப்பற்படையில் இலவச நான்கு வருட
பி.டெக் படிப்புடன் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2 (B.Tech)
Cadet Entry Scheme-ல் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
பிளஸ் 2 முடித்த திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு:2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர்
மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு
விதிக்கப்பட்டுள்ளது.
‘நெட்’ தகுதித்தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: சிஎஸ்ஐஆர் அறிவிப்பு
அறிவியல், கணிதம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான ‘நெட்’
தகுதித்தேர்வினை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில்
(சிஎஸ்ஐஆர்) ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற குரூப்-1 மெயின்தேர்வை, 3 ஆயிரத்து450 பட்டதாரிகள் எழுதினார்கள் விடைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
குரூப்-1 மெயின் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 3 ஆயிரத்து 450பேர்
எழுதினார்கள். தேர்வின் விடைகள் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில்
வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்
சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பூட்டுப் போட்டார் ஒரு சி.இ.ஓ., உடைத்தார் மற்றொரு சி.இ.ஓ.,
குமரி மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு சி.இ.ஓ., பூட்டு போட்டார்.
சிறிது நேரத்தில் மற்றொரு சி.இ.ஓ. தாசில்தார் முன்னிலையில் பூட்டை
உடைத்தார்.குமரி மாவட்ட சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன். இவர் அண்மையில் பெற்றோர்
ஆசிரியர் சங்க செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய சி.இ.ஓ.வாக
விருதுநகர் சி.இ.ஓ.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை
பதவி ஏற்றார்.
மாணவரே இல்லாத பள்ளி
முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசு
துவக்கப்பள்ளிக்கு, தினமும் 2 ஆசிரியைகள் மட்டும் பணிக்கு வந்து
செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே
கீழச்சாக்குளத்தில், 52 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி
இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரைச் சேர்ந்த பெற்றோர்களிடம்
ஏற்பட்டுள்ள ஆங்கில மோகத்தால், பலரும் தங்களது குழந்தைகளை நகர் புறங்களில்
உள்ள மெட்ரிக்., பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.