Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆய்வக உதவியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு

         ஆய்வக உதவியாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் சில சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

ஆசிரியர் நலனுக்கு சொத்தில் பாதி: இந்தியரின் தாராள மனசு

       உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களின் நலனுக்கு, இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் சொத்தில் சரிபாதியை வழங்க முன்வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு

      தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் இடங்களை நிரப்பும் வகையில் கடந்தமே 16,17-ம் தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது
.

3 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாகமூடல்

         பொள்ளாச்சியில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்ததாகக் கூறி, இரண்டுநகராட்சி தொடக்கப் பள்ளிகளும், காரமடை பகுதி அரக்கடவு என்ற கிராமத்தில் ஒரு பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Primary & Upper Primary CRC (Tentative)

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 CRC LEVEL TRAINING

CRC Training District level 16.06.15 & 17.06.15

primary CRC Training -20.06.15

Upper Primary CRC - 27.06.15..

(This is Expected News Only)

திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

       ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமாஎன்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. 
 

SSA - CRC State level level training

SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training- Deputation of participants -reg.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

        பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

சமூக அறிவியல் பாடத்துக்கு 7 வகுப்புகளை ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

      சென்னை ஐகோர்ட்டில், வி.எம்.உமா  சந்த ர் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், தமிழக பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்துக்கான வகுப்புக்களை போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. எனவே, வாரத்துக்கு 7 வகுப்புகள் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித்துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
 

ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?

        தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன்  .இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள் ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு .கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க  பட்டது . 
 

தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!!!!!

       இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோகளே சிரிதுசிந்தியுங்கள் !!!

அறிவியல் கருவிகள்

1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகஅளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண -எண்டோஸ்கோப்

தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

         தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரம்

நியமன ஆணைக்கு காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள்

     அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்பணியிடங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை கிடைக்காததால், செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

புகை, மதுவால் சீரழியும் மாணவர்கள்! கல்வித்துறை நடவடிக்கை அவசியம்

    பள்ளி மாணவர்கள் இடையே சிகரெட், மது, போதை பாக்கு உட்கொள்ளும் தீய பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன; மாணவ சமுதாயத்தை காப்பாற்ற, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பதிவுக்கு தேசிய தகுதித்தேர்வு:மத்திய அரசு முடிவுக்கு டாக்டர் சங்கம் எதிர்ப்பு

        'எம்.பி.பி.எஸ்., படிப்பை பதிவு செய்ய தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நடைமுறை தேவையில்லாதது; மருத்துவ பல்கலை தேர்வு முறையை கேலிக்கூத்தாக்கும் செயல்' என டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள் 'எக்சிட்' தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்ற நடைமுறை இந்தியாவில் உள்ளது.

'பஸ் பாஸ்' வழங்குவதில் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் 'பணால்'

        மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முறை குறித்து, நாளை நடைபெறவுள்ள போக்கு வரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்ததும், தலைமை ஆசிரியர்கள் பஸ் பாஸ் வாங்கிக் கொடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் கடந்த மாதமே உத்தரவிட்டனர்.

எஸ்பிஐ வட்டி குறைப்பு

          பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15% குறைத்துள்ளது.9.85 சதவிகிதத்தில் இருந்து 9.7 சதவிகிதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
 

தேர்வுப்பட்டியல் வெளியீடு

       162 உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வுப்பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.தேர்வுப்பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.உரிமையியல் நீதிபதிகளுக்கான எழுத்துத்தேர்வை கடந்த நவம்பரில் 9,337 பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்குப் பின் தேர்வானோர்பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

        தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மொத்த இடங்களை மூன்று நாள்களில் இணையதளத்தில் வெளியிட ஆணை

        இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

        பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

        தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!

          பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு: அரசு உத்தரவு

        தமிழகத்தில் தனியார் நர்சிங் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க, சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

மாணவர்களை தேடி ஆசிரியர்கள் நடைபயணம்:அரசு பள்ளி சேர்க்கைக்கு புது திட்டம்

        அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வர, மாணவர்களை தேடிச் செல்லும் நடைப் பயணத்தை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மின் கட்டணம் இனி 'ஈசி'

       மின் கணக்கீடு எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் முறை இப்போது உள்ளது. இதில் நுகர்வோரின் சிரமத்தை குறைக்க 'முன் வைப்பு தொகை' மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
 

Tamilnadu Lab Asst Exam 2015 - Key Answer

      ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்கள் இன்று (31.5.2015) தேர்வு முடிந்தவுடன் பிற்பகல் முதல் உடனுக்குடன் படிப்படியாக பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள் பாடசாலையோடு!

 Key Answers

அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் 'அகதி'களான அவலம்! கலைப்பாட பிரிவுக்கு திடீர் 'மூடுவிழா'

         குறிச்சி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், கலைப்பாடப்பிரிவு நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளது. அப்பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவர்கள், பிளஸ் 2 சேர முடியாமல் கண்ணீருடன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு-புதுச்சேரி அரசு

     மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து துறை அறிவிப்பு

     பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரத்தில் புதிய பயண அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 

தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு

       தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-I மற்றும் தொகுதி-IIக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வெழுத மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்துகொள்ள அனுமதி, தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த கோரிக்கை

       ‘ஆன்-லைன்’ முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்’ என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive