Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

100 சதவீத தேர்ச்சி பெறும் ஆசையில் மாணவர்களிடம் பணம் வாங்கி பிட் வினியோகம்

        ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு அருகே வியாச ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆசிரமத்திற்குள் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி

         சேலம்:தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
 

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

             நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம். பின், மூன்று ஆண்டுகளில், முதுகலை பட்டப்படிப்புடன் எம்.எட்., படிப்பை முடிக்கலாம். ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்கள், மூன்று ஆண்டுகளில், பி.எட்., - எம்.எட்., பட்டம் பெற முடியும்.
 

ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

       மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 

10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு

   பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் - நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து

          தொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்(DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் படிவங்கள்...

பணவரவை அதிகரிக்க வீட்டில் பீரோ எந்த இடத்தில அமைக்க வேண்டும்?

            காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல

        அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Lab Asst Exam Study Material Collection

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

29.5.2015

சீனாவைப் பின்னுக்கு தள்ளியது இந்தியா: பொருளாதார வளர்ச்சி 7.5 % ஆக உயர்வு.

       கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி - மார்ச்) நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதமானது சீனாவை விட அதிகமாகும்.  இதையடுத்து உலக அளவில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.  கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம், முதல் காலாண்டில் 6.7 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 8.4 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும் இருந்தது.  
 

ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

       ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட் டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

      மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆய்வக உதவியாளர் பணித்தேர்வு: கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் கைபேசி கொண்டு செல்ல தடை

        ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் ஆகியோர் செல்லிடப்பேசி மற்றும் மின்னனு சாதன பொருள்கள் கொண்டு செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால் : சிஇஓ அலுவலகம் முற்றுகை

           பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.
 

குடும்ப தலைவராக இருக்கும் பெண்களுக்குதமிழக அரசின் புதிய திட்டம் அறிவிப்பு

          பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.தமிழகத்தில், 2011 மக்கள்தொகை கணக்குப்படி, 7.21 கோடி பேர் உள்ளனர்; இவர்கள், 1.85 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இதில், 1.39 சதவீத குடும்பங்கள், பெண்களை குடும்பத் தலைவராகக் கொண்டவை என, கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

            அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.

2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

           தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?

         தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.


Lab Asst Job?

ஆய்வக உதவியாளர் தேர்வை பலரும் எழுத முடியாத மறைமுக நிலை இருப்பதாக தேர்வர்கள் புலம்பல்


ஆய்வக உதவியாளர் தேர்வை பலரும் எழுத முடியாத மறைமுக நிலை இருப்பதாக தேர்வர்கள் புலம்பல்

           பள்ளிக்கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 4369 ஆய்வக உதவியாளர் பணியாளர் பணியிடம் அறிவிக்கப்பட்டு இத்தேர்வுக்கு பதியும் போது தேர்வாளரே நேரில் வரவேண்டும் என்றும் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்று ஒரு மினி சான்றிதழ் சரிபார்ப்பே நடத்தி தள்ளு முள்ளு நெடுநேரம் வரிசையில் நிற்றல் பச்சிளங்குழந்தையோடு பெண்கள்  கர்ப்பிணி பெண்களும் நடக்கவே முடியாத மாற்றுத்திறனாளிகளும் கொளுத்தும் வெயிலில் நின்று பதிந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது..

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு: தவறு இருந்தால் முறையிடலாம்

           தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டது.வினா - முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் முறையிடலாம் எனவும் அந்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.  

தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!

        தொடக்க கல்வி-ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் -1185 தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!

பொது இட மாறுதல் அறிவிக்காததால் கவலை! அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

           ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும் பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' நடத்தப் படும். 
 

சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

        சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

         சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 2.15 மணியளவிலேயே தேர்வு முடிவுகள் வெளியாகின.சுமார் 3 மணி நேரம் தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகினர்
 

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

          இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

           'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

        தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.- 1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி

         சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் வேறுபாடு இல்லை: சிவகாசி உதவி ஆட்சியர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறினார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive