Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!

        தொடக்க கல்வி-ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் -1185 தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை!!

பொது இட மாறுதல் அறிவிக்காததால் கவலை! அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

           ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும் பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.ஆண்டுதோறும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' நடத்தப் படும். 
 

சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

        சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

         சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 2.15 மணியளவிலேயே தேர்வு முடிவுகள் வெளியாகின.சுமார் 3 மணி நேரம் தாமதமாக முடிவு வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகினர்
 

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

          இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

           'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், துணை ஆட்சியர், போலீஸ் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில், காலியாக உள்ள, 79 இடங்களை நிரப்ப, முதல்நிலைத் தேர்வு, 2014 ஜூலை 20ம் தேதி நடந்தது; இதன் முடிவுகள், ஜன., 30ம் தேதி வெளியானது.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

        தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.- 1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில்தமிழக மாணவர்கள் 99.76% தேர்ச்சி

         சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.

அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் வேறுபாடு இல்லை: சிவகாசி உதவி ஆட்சியர்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறினார்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு:தகுதிக் கல்வி கிடைக்கிறதா?

        பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்த மாணவர் அனைவரும், அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் கல்வியை நோக்கி பயணிப்பரா என்பது, சிந்திக்க வேண்டிய விஷயம்.
 

நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்

          சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எந்த வயதினரும் சட்டப் படிப்புகளில் சேரக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

     சாதிச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக மாணவியிடம் அந்த சான்றிதழைக் கேட்காமல் விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறியியல், மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்

       ''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
 

மாட்டு சாணத்தை விற்று படித்து பள்ளியில் முதல் மாணவன் - வறுமையால் படிப்பை தொடர முடியாத நிலை

    மாட்டு சாணத்தை விற்று படித்து பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற மாணவன், ஏழ்மை காரணமாக மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

27.5.2015
Prepared by Mr. M.VENKATESAN M.Sc.,M.A.,B.Ed B.T.Asst(Science) GHS Chandrapuram 635 651 cell 9976959785


பள்ளிக் குழந்தைகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை: ராமதாஸ்

          தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசுப் பள்ளிகள் திறப்பை 2 வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

குரூப் 1 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

         டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஜூன் 5,6,7 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டள்ளது. இந்த மூன்று நாட்களில், சென்னை மையத்தில் மட்டும் முற்பகலில் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி கடைசி நாள்

      ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற  சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க  தகுதியுடையவர்கள். வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
 

PGTRB Tamil Study Material


Thanks to Seeds Coaching Center.

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

        ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.

BRT Transfer Regarding...

ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
         27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

           வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்
 

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

        இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
 

எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை

         நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, டி.ஐ.ஜி., விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.

'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி

       நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.

பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

        பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. 

அடங்காத மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்

         புதுச்சேரி பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து போனது. இதனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.07 ஆக இருந்தது. 

பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

        பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேராசிரியர் ப.சிவகுமார், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

         பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் 1 லட்சம் பிஇ சீட் காலியாக இருக்கும் : சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

        தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட  இடங்கள் காலியாகவே இருக்கும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  உள்கட்டமைப்பு வசதிகள் குறைவு, வேலை வாய்ப்பு  குறைவு ஆகியவையே, இன்ஜினியரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு மோகம்  குறைந்துபோனதற்கு  காரணங்களாக கூறப்படுகிறது.
 

கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்

          தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive